ஆசிரியர் பயிற்சி பள்ளி அட்மிஷன் : 10,000 இடங்களுக்கு ஒருவர் கூட வரவில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2014

ஆசிரியர் பயிற்சி பள்ளி அட்மிஷன் : 10,000 இடங்களுக்கு ஒருவர் கூட வரவில்லை.


ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக நடந்த கவுன்சலிங்கில் 10 ஆயிரம் இடங்களை மாணவர்கள் தேர்வு செய்யவில்லை.

மாணவர்களிடையே ஆர்வம் குறைந்தது மற்றும் தகுதி தேர்வும் காரணங்களாக கூறப்படுகிறது.தமிழகத்தில் அரசு ஆசிரியர் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் 29, மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 9 இயங்கி வருகின்றன.அவற்றில் இந்த ஆண்டு 3000 இடங்கள் இருந்தன. தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 400 உள்ளன. அவற்றில் 10 ஆயிரம் இடங்கள் உள்ளன. மேற்கண்ட இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் கடந்த 3ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடந்தது. கவுன்சலிங்கில் 2,240 பேர் பங்கேற்று இட ஒதுக்கீடு உத்தரவுகளை பெற்றனர்.அரசு ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் 760 இடங்களை யாரும் தேர்வு செய்யவில்லை.அதேபோல தனியார் பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 10 ஆயிரம் இடங் களையும் மாணவர்கள் தேர்வு செய்யவில்லை. இதனால் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளுக்கான அரசு ஒதுக் கீட்டு இடங்கள் முழுவதும் காலியாகவே உள்ளன.மேலும், தனியார் பள்ளிகளில் உள்ள நிர்வாக பிரிவு இடங்களிலும் போதிய மாணவர்கள் சேராத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் இந்த ஆண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மாணவர்கள் இன்றி வெறிச்சோடின. மாணவர்களிடம் ஆர்வம் குறைந்தது மற்றும் தகுதி தேர்வு காரணமாகவே 10 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளதாக தெரிகிறது.

ஆர்வம் குறைந்தது; யாரும் விண்ணப்பிக்கவில்லை.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி