11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் இன்று வெளியீடு - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2014

11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் இன்று வெளியீடு - தினமணி


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) வெளியிடப்பட உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் இந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு மொத்தம் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.

கடந்த மே மாதம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 935 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இந்த முகாம்களுக்கு வந்தவர்களில் சுமார் 600 பேர் சரியான ஆவணங்களுடன் மதிப்பெண்ணில் திருத்தம் கோரியிருந்தனர். அவர்களது மதிப்பெண்ணில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.தேர்வுப் பட்டியல் தயாரிப்பதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் அநேகமாக வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்கள் அநேகமாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

21 comments:

  1. karthik karthik paramakudi ithu news kalvikural website nampathing

    ReplyDelete
    Replies
    1. FLASH NEWS SEE POLYMER NEWS

      THAMIZHAGAM; 11000 BT teachers thervu pattiyal indru veliyidapadaullathu.

      Delete
  2. pap1 nxt week தானா??? தினமலர்ல இன்று என செய்தி வந்துள்ளது

    ReplyDelete
  3. Congrats to all to those who will be selected for appointments and pray for all those will wait for next TET.
    Thank you all.

    ReplyDelete
  4. CONGRTAS ALL TO BE SELECTED FRIENDS

    ReplyDelete
  5. pg mattum enna pavam pannangpa....engalukku eppa tha vidivu kalam

    ReplyDelete
  6. நண்பர்கள் அனைவர்க்கும் இனிய காலை வணக்கம் . நம்முடைய இலக்கை(ஆசிரியர் பணி ) மிக நீண்ட பயணத்திற்கு (கடின உழைப்பு +மனபோரட்டம்) பிறகு இன்று அடைய போகிறோம் . வெற்றி பெறும்அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் . மேலும் வெற்றி பெறும் அனைத்து நண்பர்களும் மாணவர்கள் புத்தக அறிவை மட்டும் பெறுமாறு கற்பிக்காமல் , அந்த புத்தக அறிவை அவர்களுடைய வாழ்க்கையில் பயன்படுத்துமாறு (நண்பன் படத்தில் கூறியிருப்பது போல ) ஆழமாக கற்பித்து நம் மதிப்பையும் மாணவர்களின் அறிவையும் மேம்படுத்துமாறு மிகவும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் . நண்பரே. மாணவர்களை வெறும் மனப்பாடம் செய்து

      ஒப்புவிக்கும் ஒரு xerox machine போல அல்லாமல் , சிந்திக்கும் ஆற்றலை கொண்ட அறிவையும் ,

      மனித நேயமும், ஒழுக்கமும் கொண்ட ஒரு மனிதனாக மாற்றுவது ஒரு சிறந்த ஆசிரியரின் கடமை .

      Delete
  7. தேர்வர்கள் தங்கள் ஆசிரியர்

    தகுதித்தேர்வு எண்ணை தேர்வு

    வாரியத்தின் இணைய தளத்தில்

    (www.trb.tn.nic.in) குறிப்பிட்டு,

    வேலைக்கு தேர்வு

    செய்யப்பட்டிருக்கிறோமா,

    இல்லையா என்பதை அறியலாம்.

    ReplyDelete
  8. DEAR MATHS TAMIL MEDIUM FRIENDS I GOT LITTLE RESPONCE ONLY VERY FEW ARE ABOVE 70 ,
    FOR BC WOMEN 66 AND ABOVE THERE IS CHANCE
    FOR MBC WOMEN IT MAY BE SLIGHT HIGHER THAT IS 67 AND ABOVE
    FOR BC AND MBC MEN IT MAY BE ABOVE 68 BECAUSE OF WOMEN QUOTA
    FOR SC ST THE CUTOFF MAY DECREASE 62 AND ABOVE BECAUSE THEY HAVE BACK LOG VACANCY

    ReplyDelete
  9. எற்கனவே அறிவிக்கப்பட்ட நலதுறை பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் ஏன் சேர்க்கப்பட வில்லை.

    ReplyDelete
  10. pg pg nu 1 irukkunu yarkavadhu niyapagamirukka?

    ReplyDelete
  11. common final list இல்லையா எப்படி எல்லோருடைய மதிப்பெண் மற்றும் cut off மதிப்பெண்னை தெரிந்து கொள்வது.

    ReplyDelete
    Replies
    1. PDF பார்மெட்ல விடமாட்டாகளா ?

      Delete
  12. PDF பார்மெட்ல விடமாட்டாகளா ?

    ReplyDelete
  13. இன்று ஆசிரியர்களாக தேர்வாக இருக்கும் நண்பர்களுக்கு வணக்கம் .

    நாம் பணி புரிய உள்ள பள்ளியில் உள்ள ஒவ்வொரு மாணவர்களையும் வெறும் மனப்பாடம்

    செய்து ஒப்புவிக்கும் ஒரு xerox machine போல அல்லாமல் , சிந்திக்கும் ஆற்றலை கொண்ட அறிவையும் ,

    நேர்மையும் , மனித நேயமும், ஒழுக்கமும் கொண்ட ஒரு சிறந்த மனிதனாக மாற்றுவது ஒரு சிறந்த

    ஆசிரியரின் கடமை . இதனை அடைய நாம் உறுதி எடுக்க வேண்டும் .

    ReplyDelete
  14. Dear Friends
    Kindly help me that my WIFE 62.63 % Weightage ...and SC and SUB : PHYSICS
    is there any chance in this list

    ReplyDelete
  15. hello friends, i am bc female, physics, 66.26. tamil medium. can i get job???????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி