12 உதவி இயக்குநர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார் - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2014

12 உதவி இயக்குநர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார் - தினமணி

மாவட்ட முன்னாள் படை வீரர் அலுவலகங்களில் காலியாக உள்ள 12 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் படை வீரர்களின் அனைத்து நலத் திட்டப் பணிகளும், மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இந்த அலுவலகங்களில் காலியாகவுள்ள 12 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு முப்படைகளைச் சேர்ந்த அலுவலர்கள், முன்னாள் முப்படை அலுவலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.

அவற்றில் தகுதியானவர்கள், உயர்நிலை தேர்வுக் குழுவால் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 12 உதவி இயக்குநர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்குவதன் அடையாளமாக ஏழு பேருக்கு உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

4 comments:

  1. Nanbargalea oru doubt... Paper 2 Minority language( telugu malayalam) school la irukura maths physics vacant eapti fill pannuvanga? Major subject ah minority language la padichirukanuma? Pls.calrify me anybody

    ReplyDelete
  2. Friends
    Please share the Sg vacancy in your district (Except these 9 district)it will help me a lot on tuesday

    ReplyDelete
  3. கல்வி செய்திக்கு காலை வணக்கம்,பட்டதாரி ஆசிரியருக்கு மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடக்குமா இல்லை இதேபோல் வேறு மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள சொல்வார்களா,,கடவுளே அனைவருக்கும் அவரவர் மாவட்திலயே கிடைக்க வேண்டும் ..நண்பர்களே , அறிவியல் துறைக்கு எவ்வாறு நடைபெறும் ... இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் என நான்கு துறைகளுக்கும் சேர்த்து அதிக wtge உள்ளவர்களை அழைப்பார்களா, அல்லது துறைவாரியாக அதிக wtge உள்ளவர்களை அழைப்பார்களா தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி