14 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு: முதல் நாளில் 906 பேருக்கு பணி நியமன ஆணை - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2014

14 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு: முதல் நாளில் 906 பேருக்கு பணி நியமன ஆணை - தினமணி

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 14 ஆயிரத்து 700 ஆசிரியர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வின் முதல் நாளில், 906 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரத்து 400 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளன.


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2 ஆயிரத்து 353 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், 10 ஆயிரத்து 698 பட்டதாரி ஆசிரியர்கள், 1,649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தமாக 14 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமனக் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் 32 இடங்களில் சனிக்கிழமை தொடங்கியது.

முதல் நாளில், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்காக மாவட்டத்துக்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அதில், 906 பேருக்கு பணி நியமனத்துக்கான உத்தரவு வழங்கப்பட்டது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) வேறு மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு: இதற்கிடையே, இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்குகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 649 பேருக்கும், 167 பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கும் இணையதளம் வழியாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. மாவட்டத்துக்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 2-ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு (மாவட்டத்துக்குள்) செப்டம்பர் 3-ஆம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

9 மாவட்டங்களில் உள்ளோருக்கு...சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் இல்லை. இதனால், வரும் திங்கள்கிழமை (செப்.1) நடைபெறவுள்ள கலந்தாய்வில் அந்த ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க வேண்டாம் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்குப் பதிலாக, வேறு மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (செப். 2) நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனவும், அன்றைய தினம் அவர்களது மாவட்டத்தில் குறிப்பிட்டுள்ள மையத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு பணியிட ஒதுக்கீட்டு உத்தரவைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

11 comments:

  1. Dear friends, Good morning,
    My special congrats for all selected Teachers. All the best.

    ReplyDelete
    Replies
    1. Vijay sir plz neengalathu sollunga ena certificate kondu poganum.en kalviseithi atha pathiye details podaala

      Delete
  2. இன்று பணி நியமன ஆனண பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் .....

    ReplyDelete
  4. Sri sir am new to kalviseithi pls help me..am tanjore dist counselling centre but i need job from thiruvallur dist shall i attend counselling sep 4 or sep 3 ..pls help me

    ReplyDelete
    Replies
    1. GOOD MORNING WITH WELCOME TO KALVISEITHI MR. SRIDHAR CHINNAPILLAI SIR,
      NEENGAL SEP 3-RD IL EPPADIYUM COUNSELLING CENTRE SENDRU

      PARUNGAL., ANGAE ENQUIRE SEITHAL UNGALUKKANA SARIYANA THAGAVAL

      KIDAIKKUM., NEENGAL SEP 4TH SENDALAE POTHUMANATHU.,

      AANAL SEP 3RD SENDARTAN DOCUMENTS NEEDS TO COUNSELLING,

      AND UR OWN DISTRICT PREFERENCE THERIYUM., NEENGAL EPPADIYUM

      SEP 3RD AE SENDRU VIDUNGAL MR. SRIDHAR CHINNA PILLAI.,

      MY. MAIL ID: applered201230@yahoo.com

      Delete
  5. SPECIAL THANKS TO MR. SRI ONLY FOR U, MR. VIJAYAKUMAR CHENNAI,

    THENI MR. VALASUBRAMANI B, MR. VIJAY VIJAY, MR. PRATHAP AN.,

    ALEXANDAR SOLOMON, MR. SANTHOSH P, USHA EDN MAM, MYTHILI MAM,

    WISH U ALL THE BEST TO ALL SUCCEED TO UR LIFE., APPOINTMENT

    VANGINALUM EPPOTUM POL WE R SHARING THE OUR THOUGHTS TO TIS

    SERVICE THARUM KALVISEITHI SITE.,

    ReplyDelete
  6. Sir, one doubt for me. TET or PG TRB passed candidate if already selected Aug 2013 TNPSC GPIV they now relieving fm GPIV . but that vacant add next GPIV or Select fm Aug 2013 waiting candidates. pls Explain anybody known this.

    ReplyDelete
  7. Friends
    Please share the Sg vacancy in your district (Except these 9 district)it will help me a lot on tuesday

    ReplyDelete
  8. கல்வி செய்திக்கு காலை வணக்கம்,பட்டதாரி ஆசிரியருக்கு மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடக்குமா இல்லை இதேபோல் வேறு மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள சொல்வார்களா,,கடவுளே அனைவருக்கும் அவரவர் மாவட்திலயே கிடைக்க வேண்டும் ..நண்பர்களே , அறிவியல் துறைக்கு எவ்வாறு நடைபெறும் ... இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் என நான்கு துறைகளுக்கும் சேர்த்து அதிக wtge உள்ளவர்களை அழைப்பார்களா, அல்லது துறைவாரியாக அதிக wtge உள்ளவர்களை அழைப்பார்களா தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே...

    ReplyDelete
  9. dear vijay kindly send ur mail id
    mine is : magigeo123@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி