தாள் 1 ஐ பற்றிய சில விளக்கங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2014

தாள் 1 ஐ பற்றிய சில விளக்கங்கள்.

நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு பின் வெளியாகியுள்ள TET தாள் 1 க்கான காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.


4224 காலிப் பணியிடம் நிரப்பப் பட உள்ளது என்ற sun குழுமத்தின் செய்தியை பலர் நம்பினார்கள்.ஆனால் இறுதியில் தினமணியில் வெளியான எண்ணிக்கையில்தான்  காலிப் பணியிடம் அமைந்துள்ளது.ஆனல் அவர்கள் BV எனப்படும் பழைய காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை குறிப்பிட மறந்து விட்டனர்.

பழைய காலிப் பணியிடங்கள்
                     
பழைய காலிப்பணியிடங்கள் 845 என அறிவிக்கப் பட்டிருந்தாலும்  OC,BC,MBC பிரிவினருக்கு சிறிது கூட பயனில்லை.SC,STபிரிவினரும் ஒட்டு மொத்த PH பிரிவினரும் பயனடைவார்கள்.

தற்போதைய காலிப் பணியிடங்கள்.

                                                          

தற்போதைய காலிப் பணியிடங்கள்  தொடக்கக் கல்விதுறையில் மொத்தம் 830 என அறிவிக்கப் பட்டுள்ளது.இதில் BC இருபாலருக்கும் 71 எனவும் தமிழ் வழியில் பயின்றவருக்கு 28 இடங்களும் ஒதுக்கப் பட்டுள்ளது.BC ஆண்கள் இந்த 71+28=99 இடங்களிலும் GT எனப்படும் பொது பிரிவின் கீழ் வரும் 89+ 26 (பொது பிரிவி தமிழ்)=115 இடங்களிலும் மொத்தம் 214 இடங்களில் மட்டுமே போட்டியிட முடியும்.இதில் GT 89 இடங்கள் மற்றும் GT தமிழ் க்கு க்கு ஒதுக்கப் பட்டுள்ள இடங்களில் அதிக weightage பெற்றிருந்தால் பெண்களும்,பிற பிரிவினர்களும்  இடம் பெறுவார்கள்.மொத்தத்தில் BC ஆண்கள்  மிகக் குறைவான அளவிலே நியமிக்கப்படுவார்கள்.

MBC ஆண்களும் பெண்களோடு ஒப்பிடும் பொழுது குறைவான அளவிலேயே நியமனம் செய்யப் படுவார்கள்.

பிற காலிப் பணியிடங்கள்.  
  பிற காலிப் பணியிடங்கள் குறித்த விளக்கம் கீழ்க்காணும் படங்களை பார்த்தாலே அறிந்து கொள்ள முடியும்.

                                                          




                                                       

                                                              
                                                                   


உண்ணாவிரதம்
நான் தாள் 2 க்கு கூடுதலாக பள்ளிக் கல்வித் துறை மூலமும் 2489 பணியிடமும் நலத்துறை மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் மூலம் தோராயமாக 500 பணியிடங்களும் மொத்தம் சேர்த்து 3000 என்ற அளவில் இரண்டாவது பட்டியல் வெளியாகும் என்று எழுதும் பொழுதெலாம் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் அதை எதிர்ப்பது மடமை.

நான் இப்பொழுது அல்ல கல்வி மானியக் கோரிக்கை நடைபெற்றதிலிருந்தே இதை எழுதுகிறேன்.ஆனால் இது குறித்து யாரும் விவாதிக்காமல் போனது உங்களது  துரதிர்ஷ்டம்.

தாள் 2 க்கு 2 வது பட்டியல் வெளியாகும் என சொல்லும் நான் தாள் 1க்கும் இரண்டாவது பட்டியல் வெளியாகும் என சொல்ல கசக்குமா? உண்மையைதானே சொல்ல முடியும்.நான் இதுவரை விசாரித்ததில் 90% இது உண்மை.

தற்போது அறிவிக்கப் பட்டுள்ள BT க்கான காலிப் பணியிடம் போக தற்சமயம் BT க்கான காலிப் பணியிடம் ஏதேனும் நிலுவையில் உள்ளதா? என  நீங்களே RTI மூலம் பள்ளிகல்வித் துறையிடம் விசாரியுங்கள்.பதில் என்ன வருகிறது என்று பார்ப்போம்.

தற்போது 2489 BT காலிப் பணியிடங்கள் பள்ளிக் கல்வித்துறையின் கைவசம் உள்ளது.அதாவது ஒவ்வொரு முறையும் ஆசிரியப் பணியிடம் நிரப்பப் படும் போது எத்தனை காலிப் பணியிடம் இருக்கிறதோ அதை கல்வி மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வி அமைச்சர் வாசித்து அதற்கான அனுமதியை பெறுவார்.அனுமதி என்பது வெறும் சம்பிரதாயம்தான்.அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை.

தற்போதைய நிலையில் கையில் காலிப் பணியிடமும்,அதை நிரப்புவதற்குத் தேவையான தகுதியான ஆசிரியர்களும் கைவசம் இருக்கின்றனர்.அதை முறையாக இந்த கல்வியாண்டிலேயே 2013 TET இல் தேரியவர்களை கொண்டு நிரப்புவதுதான் நியாயம்.

அவ்வாறு செய்யவில்லை எனில் காலிப் பணியிடம் இருக்கிறது என்பதை உறுதி படுத்திக் கொண்ட பின்பு நீதி மன்றத்தை நாடுவதில் தவறில்லை.

அதை தவிர்த்து இறுதிப் பட்டியலில் உங்களது  பெயர் வரவில்லை என்ற காரணத்தினால் இவ்வளவு காலம் அமைதியாக இருந்து இறுதிப் பட்டியல் வெளியாகிய பின்பு உண்ணாவிரதம் மேற்கொள்வது பிறரால் சுயநலம் என்றே புரிந்து கொள்ளப்படும்.

2013 இல் தேர்ச்சிப் பெற்ற 73,000 பேரில் 11236+2500=13736 பேர் போக மீதமுள்ளவர்கள் இடம் பெறாமல் போனது மிகுந்த சோகம்தான்.எந்த  கோடீஸ்வரன் வீட்டு பிள்ளைகளும் D.T.ED or B.ED படித்து விட்டு வருடக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கவில்லை.எல்லோருமே நடுநிலை குடும்பத்தை சேர்ந்தவர்களும்,குடும்பத்தின் முதல் பட்டதாரிகளும்தான்.

 வலி என்பது அனைவருக்கும் ஒன்றுதான். வலி என்பதை விட இது அனைவருக்குமான வாழ்க்கை.வயதில் மூத்தவர்களின் நிலைமை இன்னும் மோசம்.பல ஆண்டுகளாக எப்படியேனும் அரசு ஆசிரியர் ஆகிவிடுவோம்  என்ற கனவிலேயே காலத்தை கழித்து வந்தனர். தற்போது அதற்கான வாய்ப்பு கை நழுவிபோகும் பொழுது துன்பத்தின் உச்ச நிலையை அடைவார்கள் என்பதும் உண்மை.

ஆனால் எதை செய்தாலும் சட்டத்தின் மூலமாகத்தான் செய்ய முடியுமே தவிர போராட்டத்தின் மூலம் மாற்றத்தைக் கொண்டு வருவது மிகக் கடினம்.ஏனெனில் ஏற்கனவே நீங்கள் குறிப்பிடும் weightage மற்றும் 5% தளர்விற்கு எதிராக நூற்றுக் கணக்கான வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் பதியப்பட்டு  இன்னும் இரண்டு வாரங்களில் விசாரணைக்கு வர உள்ளது.

அப்படி பட்ட சூழ்நிலையில் உண்ணாவிரதத்தின் மூலம் மாற்றத்தை கொண்டு வந்து விடலாம் என்பது சிரமானதாகத்தான் அமையும்.அப்படி ஒருவேளை உண்ணாவிரதத்தின் மூலம் ஏதேனும் மாற்றம் வந்தால் அடுத்த சில தினங்களில் 2000 பேர் அவர்களுக்கு உகந்த வகையில் ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றம் வர வேண்டும் என்ற கோரிக்கையோடு சென்னையில் குவிவார்கள்.

ஆனால் உங்களது உண்ணாவிரதம் மிக ஆழமான வலியின் வெளிப்பாடு.உணர்வுப் பூர்வமானது. 4 நாட்கள் தொடர்ந்து  இரவும் பகலும் இடைவிடாது தொடர்ச்சியாக அதிக சிரமத்திற்கு உள்ளாகி உண்ணாவிரதம் மேற்கொள்வதே அதை வெளிப்படுத்தும்.

ஏதேனும் ஒரு வகையில் உங்களது கோரிக்கை நிறைவேற இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம்.

கல்விச்செய்தி முழுக்க முழுக்க பொது நல நோக்கோடு இயங்கும் வலைத்தளம்.ஒரு நாளைக்கு 80,000 page views கிடைக்கும் வலைதளத்தில் மிகத் தரம் தாழ்ந்த comments கள் வருவதால் இன்று முதல் சில நாட்களுக்கு வாசகர்கள் comment செய்யும் வசதி நிறுத்தி வைக்கப் படுகிறது.

அனைவருமே உணர்ச்சியின் விளிம்பில்தான் இருக்கிறோம்.அதற்காக தரம் தாழ்ந்த comment களை எழுதுவதன் மூலம் உங்கள் உழைப்பிற்கான  பலன் கிடைத்து விடாது.

66 comments:

  1. PAPER-1
    GT weightage 75.82 above only job

    BC candidate weightage 74.57above only job

    BCM candidate weightage 74.55 above only job

    MBC candidate weightage 73.18 above only job

    SC candidate weightage 71.52 above only job

    SCA candidate weightage 70.12 above only job

    ST candidate weightage 60.15 above only job

    இந்த மதிப்பெண்ணில் மாற்றம் எற்படலாம்

    இந்த கட் அப் 1 அல்லது 2 முன் பின் உள்ளவர்கள் காத்திருக்கவும்

    மற்றவர்கள் அடுத்த தேர்வுக்கு படிக்கவும்

    இந்த ஞாயிறு தேர்வு பட்டியல் வெளிவரலாம் இல்லை என்றால் அடுத்த வராம் உறுதி

    ReplyDelete
    Replies
    1. PAPER-1 NOTIFICATION RELEASED NOW TRB WEB SITE....TOTAL VACANCY-2500 அதிக பட்சமாக 75 க்கு மேல் weitage வைத்திருப்பவர்களுக்கு தான் வேலை உறுதி மற்றவர்களுக்கு இன வாரியாக அதன் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கிடைக்கும் இதில் 5% தளர்வில் 25 பேருக்கு கூட வேலை கிடைக்காது என்பது உண்மை அதிலும் SC,SCA,ST பிரிவினருக்கு மட்டும் 5% தளர்வு உள்ளவர்களுக்கு 15 இடம் கிடைக்கலாம்

      Delete
    2. YES MANIARASAN .....I APPRECIATE YOU....TOTAL NO OF BT TO BE APPOINTED 13777 OTHERS WILL BE SELECTED SOON.....WAIT AND SEE....PROOF KALVI MANYA KORIKAI 2014-2015

      Delete
    3. P.Rajalingam PuliangudiAugust 21, 2014 at 9:53 PM
      நண்பர்களே சென்னையில் நடக்கும் தொடர் உண்ணாவிரதம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் என அனைவருக்கும் தொடர்பானது இன்று 350 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனை...
      மைலாப்பூர் திருமண மண்டபத்தில் 200 ஆசிரியர்களும் கோடம்பாக்க மண்டபத்தில் 110 ஆசிரியர்களும் பட்டிணபாக்கம் மீனவர் விடுதியில் 40பேரும் கைது செய்தனர்....
      நமது உண்ணாவிரதம் வெற்றிக்கு மிக அருகில் சென்று கொண்டிருக்கிறது...
      இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் திரளாக வாருங்கள் தினரட்டும் சென்னை....
      தள் 1 ஆசிரியர்களே காலதாமதம் வேண்டாம்....

      Delete
    4. MAANBUMIKU AMMA AVARKALUKU NANDRI THERIVIKUM KOOTAM ALL SELECTED PG AND BT PLS COME ON MONDAY 25.8.14. ANAIVARUM VAARIR.PLS CONT 9943789978, 9894629600

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. என்ரு தனியும் இந்த டெட் ‍‍‍‍‍ன் தாகம்,,,

      Delete
    7. தினேஸ் என்ககும் கோபிநாத் சார பிடிக்கும்...........

      ஏன் மாத்த சொல்றிங்க..............
      அதுவும் கெஞசரிங்க......

      Delete
    8. நண்பர்களே சென்னையில் நடக்கும் தொடர் உண்ணாவிரதம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் என அனைவருக்கும் தொடர்பானது இன்று 35பேர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனை...
      மைலாப்பூர் திருமண மண்டபத்தில் 20 ஆசிரியர்களும் கோடம்பாக்க மண்டபத்தில் 10 ஆசிரியர்களும் பட்டிணபாக்கம் மீனவர் விடுதியில் 4பேரும் கைது செய்தனர்.... ITHU THAN TV NEWS,, POI SONNA PORUNTHA SOLLUNGA,,,

      Delete
    9. உங்களின் பய உணர்வு கட்டுரையில் தெரிகிறது.

      Delete
    10. எந்த டிவியில்................

      Delete
    11. உங்களின் poi உணர்வு கட்டுரையில் தெரிகிறது.

      Delete
    12. காரணம் கோபிநாத் நடுநிலைய்யோடு பேசுவார் ....நீங்கள் அப்படி இல்லை

      Delete
    13. This comment has been removed by a blog administrator.

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. This comment has been removed by a blog administrator.

      Delete
    16. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. Replies
    1. 'ஜெய்ஹிந்த்’ மந்திரத்தின் தந்தை வீரன் செண்பகராமன் பற்றி?

      கழுகார் பதில்கள்!

      43 ஆண்டுகள் வாழ்ந்தவர் செண்பகராமன். அதில் 26 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர். தமிழகத்தின் தென்புறத்தில் பிறந்து ஜெர்மன் சென்று இந்திய விடுதலைக்காக சர்வதேச ஆதரவைத் திரட்டியவர் இவர். 'ஜெய்ஹிந்த்’ என்ற சொல்லை 1907-ம் ஆண்டு வடிவமைத்தவர். ஜெர்மன் ஆதரவுடன் 'எம்டன்’ என்ற கப்பலில் இந்தியாவை நோக்கி வந்தவர். இன்றைய தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம் இருக்கும் வளாகத்தில் எம்டன் கப்பல் வீசிய குண்டுகள் அன்று விழுந்தன. பிரிட்டிஷ் அரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டு திரும்பிய செண்பகராமன், இந்தியாவுக்கு வெளியில் சுதந்திர இந்திய அரசாங்கத்தை ஆரம்பித்து அதன் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தார்.

      அவர் தொடங்கிய இந்திய தேசிய தொண்டர் படையை முன்னோட்டமாகக் கொண்டுதான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய தேசிய ராணுவத்தை வடிவமைத்தார். ஜெய்ஹிந்த் என்ற சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தினார்.

      'இந்தியர்களுக்கு சுதந்திரம் அடையத் தகுதி இல்லை’ என்று இவரிடம் ஹிட்லர் சொல்ல, அதனை தனது வாதங்கள் மூலமாக வாபஸ் வாங்கவைத்த போர்வீரன் செண்பகராமன்!

      Delete
  3. YES MANIARASAN .....I APPRECIATE YOU....TOTAL NO OF BT TO BE APPOINTED 13777 OTHERS WILL BE SELECTED SOON.....WAIT AND SEE....PROOF KALVI MANYA KORIKAI 2014-2015

    ReplyDelete
  4. nengal solluvathu sarithan naparea aanal thamilukku ??????????????

    ReplyDelete
    Replies
    1. இதில் தமிழுக்கு அதிகபட்ச இடங்கள் ஒதுக்கப்படும்....

      Delete
    2. என்னப்பா 3000 வேகண்ட்ன்னு சொன்னீங்க.........
      தமிழுக்கு 300 தானா........

      இதுலயே தெரியுது.................

      Delete
  5. Replies
    1. நண்பர்களே சென்னையில் நடக்கும் தொடர் உண்ணாவிரதம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் என அனைவருக்கும் தொடர்பானது இன்று 35பேர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனை...
      மைலாப்பூர் திருமண மண்டபத்தில் 20 ஆசிரியர்களும் கோடம்பாக்க மண்டபத்தில் 10 ஆசிரியர்களும் பட்டிணபாக்கம் மீனவர் விடுதியில் 4பேரும் கைது செய்தனர்.... ITHU THAN TV NEWS,, POI SONNA PORUNTHA SOLLUNGA,,,

      Delete
    2. உங்களின் poi உணர்வு கட்டுரையில் தெரிகிறது.

      Delete
  6. நண்பர்களே சென்னையில் நடக்கும் தொடர் உண்ணாவிரதம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் என அனைவருக்கும் தொடர்பானது இன்று 350 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனை...
    மைலாப்பூர் திருமண மண்டபத்தில் 200 ஆசிரியர்களும் கோடம்பாக்க மண்டபத்தில் 110 ஆசிரியர்களும் பட்டிணபாக்கம் மீனவர் விடுதியில் 40பேரும் கைது செய்தனர்....
    நமது உண்ணாவிரதம் வெற்றிக்கு மிக அருகில் சென்று கொண்டிருக்கிறது...
    இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் திரளாக வாருங்கள் தினரட்டும் சென்னை....
    தள் 1 ஆசிரியர்களே காலதாமதம் வேண்டாம்....
    Contact : 95430 79848
    94432 64239

    ReplyDelete
    Replies
    1. ராஜலிங்கம் சார் இப்ப யாரை கூப்புடுரிங்க 5% தளர்வு பெற்றவர்கள் எப்படி வருவது இடைநிலை ஆசிரியர்கள்

      Delete
    2. உங்களின் poi உணர்வு கட்டுரையில் தெரிகிறது.

      Delete
    3. Govtla postings iruntha thana yellarkum yapadi job kedaikum poi velaya parunga porada pona en frnd vanthutanga

      Delete
    4. சண்டியர் sir,
      Neenga sonna expected cutoff kammi. Innum adhigamaga varum except sc and bcm candidates. Your contact number pls sir, I have some doubts

      Delete
    5. This comment has been removed by a blog administrator.

      Delete
  7. நண்பர்களே சென்னையில் நடக்கும் தொடர் உண்ணாவிரதம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் என அனைவருக்கும் தொடர்பானது இன்று 35பேர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனை...
    மைலாப்பூர் திருமண மண்டபத்தில் 20 ஆசிரியர்களும் கோடம்பாக்க மண்டபத்தில் 10 ஆசிரியர்களும் பட்டிணபாக்கம் மீனவர் விடுதியில் 4பேரும் கைது செய்தனர்.... ITHU THAN TV NEWS,, POI SONNA PORUNTHA SOLLUNGA,,,

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. Sandeyar sir my weightage 70.44 sc female tamil medium candidate. Any chance for me

      Delete
    3. Mr.சண்டியர் & Mr.hi suresh....
      How can u use the word BASTARD to scold a person... If he had done something unacceptable please do indicate and warn him...
      It's very sarcastic...
      are u all educated? Please remove your comments at once....

      Delete
    4. I know that person is going beyond the limit and he is a piece of shit.....

      Delete
    5. உண்மை செய்தி தான் history sir இது பாலிமர் செய்தி மொத்தம் 35 பேர் தான் கைது

      Delete
    6. This comment has been removed by a blog administrator.

      Delete
    7. This comment has been removed by a blog administrator.

      Delete
  8. Very good article maniyarasan ...

    ReplyDelete
  9. Ungaluku vera vala vetti illaya

    ReplyDelete
  10. Mani sir thanks for your good article. Nan BT illa PGT 2nd list a ethir paathutu iruken! Bcos 2 examlayum border la mis paniten.
    Sir conform a 2nd list varuma?

    ReplyDelete
  11. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  12. MANIYARASAN SIR NEENGAL KURUVATHU MUTRILUM UNMAIYE YEN SIR UNGALUKKU THERINTHA TRB OFFICERKITT ITH PATTHI KETKALAME SIR NAN 2ND LISTKAGATHAN VERA ENTHA EXAMKUM PADIKKAMA WAIT PANNITU IRUKKEN YENA NAN VAIPPA 0.04 MARKLA THAVARA VITTUTEN EN MANA NILAI ROMBA MOSAMA IRUKKU SIR 2ND LIST PATHI THERINTHAL KANDIPPAGA PATHI VIDAVUM

    ReplyDelete
  13. Dear rajalingam anna . Sc cut off ena irukum pls tel me. Namaku vaccant neraya iruke

    ReplyDelete
  14. Neengalum an tha tet m no time waste

    ReplyDelete
  15. திரு மணியரசன் அவர்களுக்கு.காலம் கடந்த போராட்டம் என்பது உண்மையே.ஆனால் முன்ன பின்ன செத்தா தான் சுடுகாடு தெரியும் எனும் பழமொழிக்கேற்ப விழிப்புணர்வு இன்மையே இதற்கு காரணம்.ஆனால் இவர்களின் செயல் தானே இப்பொழுது தாள் 1 நண்பர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.எனவே எவையும் நடந்த பிறகு நாம் ஆலோசனை சொல்வது எளிது என்பது தங்களுக்கு புரியாதது அல்ல.தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
  16. Yagava rayinum nakakka kavakal
    Sogappar sollilukkup pattu


    Pls yaraiyum thavaraga pesa vendan kurippaga nalai aasiriyaraga pogum nanbargal

    ReplyDelete
  17. YES MANIARASAN .....I APPRECIATE YOU....TOTAL NO OF BT TO BE APPOINTED 13777 OTHERS WILL BE SELECTED SOON.....WAIT AND SEE....PROOF KALVI MANYA KORIKAI 2014-2015

    ReplyDelete
  18. Hello BCM TET please just see your email id.and reply me.

    ReplyDelete
  19. Hello BCM TET please just see your email id.and reply me.

    ReplyDelete
  20. Hello BCM TET please just see your email id.and reply me.

    ReplyDelete
  21. Hello BCM TET please just see your email id.and reply me.

    ReplyDelete
  22. Hello BCM TET please just see your email id.and reply me.

    ReplyDelete
    Replies
    1. hai pls give the bcm details gentlenilo@gmail.com

      Delete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. p.g economics,commerce,physics final list eppo sir?

    ReplyDelete
  25. for bt 2nd list is there any chance in eng for sc pupils, , , plz any one reply im new to tis website

    ReplyDelete
  26. hello sir 2nd List yeppothu varum?

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி