அறிவியல் ஆசிரியர்களுக்கு செப்.,1 ல் கருத்தாளர் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2014

அறிவியல் ஆசிரியர்களுக்கு செப்.,1 ல் கருத்தாளர் பயிற்சி

விருதுநகர்: அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில், 9 மற்றும் 10 ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, மண்டல அளவிலான கருத்தாளர் பயிற்சி முகாம், செப்.,1 முதல் 3 நாட்கள் நடக்கிறது.

மாணவர்களுக்கு எளிதில் புரியும்வகையில் அறிவியலை கற்பிப்பது, அவர்களை போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்வது, பள்ளி அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிப்பது உள்ளிட்டவை குறித்து இம்முகாமில் பயிற்சியளிக்கப்படுகிறது. இதற்காக 32 மாவட்டங்கள் கோவை, திருச்சி, நாகை, தேனி, விருதுநகர் என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் இப்பயிற்சியில், சிறப்பு மற்றும் முதன்மை கருத்தாளர்கள் (மூத்த ஆசிரியர்கள்) 72 பேர், கருத்தாளர்கள் 264 பேர் பங்கேற்கின்றனர். அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட மாவட்ட உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “இப்பயிற்சி பெறுவோர் பின்னர் மாவட்ட பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பர். மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை துாண்டுவதே இதன் முக்கிய நோக்கம்,” என்றார்.


3 comments:

  1. BREAKING NEWS :

    புதிதாக நியமிக்கப்படும் 14,700

    ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள்

    பணியில் சேர வேண்டும்

    பள்ளிக்கல்வி இயக்குனர்

    வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவு

    ReplyDelete
  2. BEST WISHES TO ALL P.G.

    CANDIDATES !!

    PLEASE COMMUNICATE

    COUNSELLING UPDATES TO US !!

    ReplyDelete
  3. Hai my name is hema I finish msc b.ed computer ithuku govermenla yathachum news irukua irutha soiluga frienda

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி