அரசு பள்ளியில் அவலம் 2 ஆசிரியர்கள்.. 3 மாணவர்கள்...! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2014

அரசு பள்ளியில் அவலம் 2 ஆசிரியர்கள்.. 3 மாணவர்கள்...!



கமுதி அருகே 3 மாணவர்கள் மட்டுமே பயிலும் அரசு பள்ளியில் 2 ஆசிரியர்கள் உள்பட 5 பேர் பணியில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே காடாமாங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாங்குளத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்போது 3 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களில் ஒருவர் 4ம் வகுப்பிலும் மற்ற இருவர் 5ம் வகுப்பிலும் படித்து வருகின்றனர்.

மூன்று மாணவர்கள் மட்டுமே படிக்கும் இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள்,ஒரு சத்துணவு அமைப்பாளர், 2 உதவியாளர்கள் என 5 பேர் பணியில் உள்ளனர். இவர்களுக்காக அரசு மாதந்தோறும் சம்பளம் மற்றும் இதர செலவுகள் என ^80 ஆயிரம் வரை வழங்கி வருகிறது.தொடக்கப்பள்ளி என்பதால் தற்போது 5ம் வகுப்பு பயிலும் மாணவிகள் இருவரும், அடுத்த கல்வியாண்டில் வேறு பள்ளியில் சேர்ந்துதான் படிக்க வேண்டும். இதனால் அடுத்த ஆண்டு பள்ளியில் ஒரு மாணவர் மட்டுமே படிப்பார். அவரும் வேறு பள்ளியில் 5ம் வகுப்பில் சேர்ந்து விட்டால், 2 ஆசிரியர்கள், 3 பணியாளர்கள் என மாணவர்களே இல்லாமல் பள்ளியை மூட வேண்டிய நிலை ஏற்படும். கிராம மக்கள் கூறுகையில், ‘வறட்சி காரணமாக பலர் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு சென்று விட்டனர்.

கிராமத்தில் மக்கள்தொகையே குறைவுதான். அதனால் பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது’ என்கின்றனர்.கமுதி வட்டார உதவி தொடக்ககல்வி அலுவலர் அண்ணாதுரையிடம் கேட்டபோது, ‘’பள்ளியின் நிலை குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், அடுத்த கல்வியாண்டில் தற்காலிகமாக பள்ளி மூடப்படும் வாய்ப்பு உள்ளது,’’ என்றார்.

5 comments:

  1. அதான் pap1 க்கு குறைந்த காலி பணியிட அறிவிப்பா???

    ReplyDelete
  2. இப்படியே சென்றால் தாள் 1 என்ன ஆகும்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. என்னதான் TET exam வைத்து எடுத்தாலும் நமது அரசு ஆசிரியர்களோ ஒற்றுமையோடும் முழுமன‌தோடும் பாடம் எடுக்க போவதும் இல்லை???????தமது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க போவதும் இல்லை??????பாதிக்கப்படுபவர்கள் அரசு ஏழை மாணவர்கள்?????கல்விப் பணி தொடர வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete
  5. idu pontu niraiya paaligal ramanatha puram district il ullana. avaigalai moodi vitu pakkathu palligalodu inaithu tharamana kalviyai kodukka arasu muyaluma?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி