இன்றைய தினத்தின் முக்கிய நிகழ்வுகள் - ஆகஸ்ட் 27 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2014

இன்றைய தினத்தின் முக்கிய நிகழ்வுகள் - ஆகஸ்ட் 27

கவிமணி பிறந்த நாள்

கவிமணி எனத் தமிழ் மக்களால் அழைக்கப்படும் தேசிக விநாயகம் பிள்ளை, 1876-ம் ஆண்டு இதே நாளில்தான், நாகர்கோவிலை அடுத்த தேரூரில் பிறந்தார்.

இயற்கை எழில் கொஞ்சும் நாஞ்சில் நாட்டில் பிறந்த கவிமணி, பெரும்பாலும் இயற்கையை மையக்கருவாக வைத்தே கவிதைகள் எழுதியுள்ளார். கவிதை மட்டுமின்றி, சமூக சீர்திருத்தம், பெண் விடுதலை, கல்வெட்டு ஆராய்ச்சி நூற்பதிப்பு போன்றவற்றிலும் கவிமணி மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

எட்வின் அர்னால்ட் என்பவர், ஆங்கிலத்தில் எழுதிய த லைட் ஆஃப் ஆசியா என்ற நூலை "ஆசிய ஜோதி" என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்தார் கவிமணி. இது மட்டுமன்றி, உமர்கய்யாம் பாடல்கள், மலரும் மாலையும் போன்றவையும் இவரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

இயற்கை, இலக்கியம், சமூகம், தேசியம் சார்ந்த கருத்துக்களை தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய தேசிக விநாயகம் பிள்ளைக்கு, 1940-ம் ஆண்டில், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கவிமணி எனும் பட்டம் வழங்கப்பட்டது.


கவிமணியின் நூல்கள்

ஆசிய ஜோதி , (1941)
மலரும் மாலையும், (1938)
மருமக்கள்வழி மான்மியம், (1942)
கதர் பிறந்த கதை, (1947)
உமார் கய்யாம் பாடல்கள், (1945)
தேவியின் கீர்த்தனங்கள்
குழந்தைச்செல்வம்
கவிமணியின் உரைமணிகள்

முதல் எண்ணெய்க்கிணறு தோண்டப்பட்ட தினம்

இருபதாம் நூற்றாண்டில் உலகில் நடந்த பெரும்பாலான போர்கள் பெட்ரோலியத்திற்காகவே நடந்துள்ளன. பெட்ரோலியம் இல்லாத ஒர் உலகை இன்று நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாததாகிவிட்டது. இந்த பெட்ரோலியம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகே, பரவலான பயன்பாட்டிற்கு வந்தது.

அதற்கு முன்னதாகவும் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதன் முக்கியத்துவத்தை மனித சமூகம் அறியாமலிருந்தது. "உண்ண முடியாத எண்ணெய்" என்று பெட்ரோலியம் பற்றி, மார்க்கோபோலோ மற்றும் அல்- மசூதி போன்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொழில்முறை பெட்ரோலியம் கண்டுபிடிப்பதற்கு முன்னதாகவே அஜர்பைஜானின் தலைநகர் பாகுவில் 500-க்கும் மேற்பட்ட எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும், 1859-ம் ஆண்டு பென்சில்வேனியாவில் உள்ள டிட்டுஸ்வில் நகரில் தோண்டப்பட்ட எண்ணெய்க்கிணறுதான் வெற்றிகரமாகத் தோண்டப்பட்ட முதல் எண்ணெய் கிணறு என அறியப்படுகிறது.

பாகு நகரில்தான் முதன் முதலாக எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டன. கர்னல் டிரேக் என்பவர் 1859-ம் ஆண்டு இதே நாளில்தான் வெற்றிகரமான முதல் எண்ணெய்க்கிணறைத் தோண்டினார்.



12 comments:

  1. இன்று மௌண்ட் பேட்டன் பிரபு அவர்களின் நினைவு தினம்....

    ReplyDelete
    Replies
    1. Adi Dravida welfare postingla Arunthathiyar ethana per poduvanga sir..?

      Delete
  2. Dear friends, tomorrow ll be the rocking day for tet & pgteachers...may god bless us...

    ReplyDelete
  3. நாளைக்கு நமது முதல்வர் அவர்கள் பணிநியமன ஆணை ஏழு பேருக்கு மட்டும் வழங்கப்படுவதாக தகவல் வருகிறது. மற்றவர்களுக்கு செப்.1 லிருந்து தொடர்ச்சி யாக பணியிடக் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறுவதாகவும் செய்தி

    ReplyDelete
    Replies
    1. We should not reveal like this.........

      That is why I mentioned "good news"

      Delete
  4. COUNSELLING DATES ARE EXPECTED

    TOMORROW !!!

    ReplyDelete
  5. Replies
    1. Fiiiiiiiinaly god open his eyes our family problem all will finished tomorrow god help us to get job i wish you a happy life friends

      Delete
  6. அன்பார்ந்த கல்விசெய்தி ஆசிரியர் அவர்களுக்கு ஒரு பணிவான‌ வேண்டுகோள்...
    தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வின்போது சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் முறை ஆகியவை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டால் அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும்.

    நன்றி...

    தேர்வு செய்யப்பட்ட அனைத்து இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. இன்றயை 28.08.2014. தினமணி யில் பணி நியமண ஆனை மான்புமிகு தமிழக முதல்வர் அம்மா வழங்குகிறார் ...உண்மை செய்தி..........

    ReplyDelete
  8. அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கு ..நன்றி. நன்றி. நன்றி.நன்றி நன்றி நன்றி..நன்றி..இன்றயை 28.08.2014. தினமணி யில் பணி நியமண ஆனை மான்புமிகு தமிழக முதல்வர் அம்மா வழங்குகிறார் ...உண்மை செய்தி..........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி