பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணை: கணித ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2014

பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணை: கணித ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு.


பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணைக்கு தமிழ்நாடு கணித ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்தது.
நிகழாண்டு பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இந்த அட்டவணையின்படி செப்டம்பர் 18-ஆம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாளும், 19-ஆம் தேதி கணிதத் தேர்வும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கணிதத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக அட்டவணையில் விடுமுறை அளிக்கப்படாததற்கு தமிழ்நாடு கணித ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்தது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.விஜயகுமார் கூறியது:பிளஸ் 2 பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு செயல்முறைத் தேர்வின் மூலம் 50 சதம் மதிப்பெண்கள் அளிக்கப் படுகின்றன. ஆனால், கணிதப் பாடத்துக்கு 200 மதிப்பெண்களுக்கும் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டியுள்ளது. மேலும், பொதுத் தேர்வில் தோல்வியடையும் பெரும்பாலான மாணவர்களில் கணிதப் பாடத்திலேயே அதிகம் உள்ளனர்.இதற்கிடையே, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுக்கு 50 சத பாடம் எடுóத்துக் கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், காலாண்டுத் தேர்வில் ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு எழுதிய அடுத்த நாளே கணிதத் தேர்வை மாணவர்கள் எழுதும்பட்சத்தில் பல மாணவர்கள் கணிதத்தில் தோல்வியடைய நேரிடலாம். இது அவர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தப் பாதிப்பு பொதுத் தேர்வு வரை தொடரவும் வழிவகுக்கக்கூடும்.எனவே, மாணவர்களின் நலன் கருதி ஆங்கிலம் இரண்டாம் தாள் முடிந்து குறைந்தபட்சம் ஒருநாள் விடுமுறை விட்டு கணிதப் பாடத்துக்கான தேர்வு நடத்த வேண்டும் என்றார் அவர்.

10 comments:

  1. நாங்கள் யாருடைய உரிமையும் பறிக்கவில்லை எங்களின் உரிமைக்காக போராடுகிறோம்.....

    இன்று 100க்கும் மேற்பட்டவர்கள் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டதால் முதல் கட்டமாக கைது செய்யப்பட்டனர்....

    பின்பு மெரினாப்பகுதியில் புதிதாக வந்த இடைநிலை ஆசிரியர்கள் 45பேர் இரண்டாம் கட்டமாக கைது....

    தற்போது 200க்கும் மேற்பட்டோர் டிஆர்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையெ மனுவாக கொடுத்தனர்....

    வெய்ட்டேஜ் முறை மாறும் நியாயம் வெல்லும் காலம் வெகு தூரம் இல்லை....

    வெற்றியோடு சென்னை திரும்புவோம் இல்லையேல் அநாதை பிணங்களாக சென்னையில் கிடப்போம்.....

    ஏமாந்த நண்பர்களே துணிந்து வாருங்கள் வெற்றி நமதே....
    தற்போது டிஆர்பி அலுவலகம் முற்றுகை செய்யப்பட்டுள்ளது.....

    ReplyDelete
  2. Expected cutt off for paper 1 yarukkavathu therinthal inge pathi vidavum

    ReplyDelete
  3. Paper 1 expected cutt off therinthal inge pathividavum

    ReplyDelete
  4. DEAR KALVISEITHI ADMIN PLS PORATAM AND CASES PONDRA PATHIVUKALAI PUBLISH PANNATHINKA.IT,S MY HUMBLE REQUEST.THANK YOU SIR.

    ReplyDelete
  5. Dear admin,

    Paper2 second list varuma. Varum ena ethirparthu kondu ullen.


    Mani sir sonnathu pola DSE 2449 BT 500 BT Other dept vacancy list varuma.

    ReplyDelete
  6. Dear admin,

    Paper2 second list varuma. Varum ena ethirparthu kondu ullen.


    Kalvi maniya korikai DSE 2449 BT 500 BT Other dept vacancy list varuma.

    ReplyDelete
  7. Dear admin,

    Paper2 second list varuma. Varum ena ethirparthu kondu ullen.


    Kalvi maniya korikai DSE 2449 BT ADTW(1408 - 669 sgt)739 BT vacancy list varuma.

    ReplyDelete
  8. I too expect Muthu raja! It will come

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி