3 கார்களை பற்களால் இழுத்த 60 வயது "இளைஞர்'! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2014

3 கார்களை பற்களால் இழுத்த 60 வயது "இளைஞர்'!

போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கன்னியாகுமரியில் 3 கார்களை கயிற்றால் கட்டி, பற்களால் 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்து சாதனை படைத்தார் 60 வயது ஓட்டுநர் சந்திரன்.
நாகர்கோவில் வட்டவிளை காமராஜர்நகரைச் சேர்ந்தவர் சந்திரன் (60). கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை அருகே வாடகை கார் ஓட்டி வருகிறார். இவர், இளைஞர்கள் மத்தியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது என்பதை வலியுறுத்தியும் சாதனை நிகழ்த்த விரும்பினார்.

                                                               


அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அன்று, கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து 3 கார்களை கயிற்றால் கட்டி, அவற்றை பற்களால் 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்து வந்தார்.மேலும், 1,700 கிலோ எடையுள்ள காரை, தனது மார்பில் ஏற்றியும் சாதனை படைத்தார். இதை, ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கண்டு வியந்தனர்.

இதுகுறித்து, சந்திரன் கூறுகையில், நான், இளம் வயதில் சர்க்கஸ் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்தேன். பின்னர், கன்னியாகுமரியில் கடந்த 25 ஆண்டுகளாக கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறேன். என்னுடைய 60-ஆவது பிறந்த நாளையொட்டி (ஆக.24), இளைஞர்கள் மத்தியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளேன்.

நான் முறைப்படி யோகா கற்றிருப்பதாலும், போதைப் பொருள்கள் எதையும் பயன்படுத்தாததாலும், நாள்தோறும் உடற்பயிற்சி செய்து வருவதாலும், 60 வயதிலும் என்னால் இளைஞரைப் போல செயல்பட முடிகிறது என்றார்.

3 comments:

  1. pal lal eluka villai...kairu iru kaigaluku naduvil...udal balathal eluthullar...pal just help,any way muyarciku valthukkal

    ReplyDelete
  2. புதிய ஆசிரியர்கள்

    நியமிப்பதற்கான கலந்தாய்வு

    தேதியும் விரைவில் வெளியாக

    உள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி