புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 30-08-2014 முதல் 05-09-2014 வரை கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2014

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 30-08-2014 முதல் 05-09-2014 வரை கலந்தாய்வு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.in- ல் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள 14,700 ஆசிரியர்களுக்கான நியமனக் கலந்தாய்வு இணையதளம்
வாயிலாக, நடத்தப்படவுள்ளது.

 அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு /நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய நடுநிலை/ தொடக்கப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள்/ இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு இணையதளம் வாயிலாகக் கீழ்க்கண்ட அட்டவணையின்படி காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

 பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், பின்வரும் இடங்களில் நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  1. முதுகலை ஆசிரியர்கள்- (மாவட்டத்திற்குள்)   30-08-2014
  2. முதுகலை ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்)    31-08-2014
  3. இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்)  01-09-2014
  4. இடைநிலை ஆசிரியர்கள்(வேறு மாவட்டம்)   02-09-2014
  5. பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்)    03-09-2014
  6. பட்டதாரி ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்)     04-09-2014 மற்றும் 05-09-2014
கலந்தாய்வு நடைபெறும் இடம்

1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.
2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்
3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்
4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.
5 திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்
6 ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு
7 காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
8 கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
9 கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரூர்.
10 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
11 மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜி மருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.
12 நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.
13 நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.
14 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.
15 புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.
16 இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.
17 சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்.
18 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்).
19 தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்
20 நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.
21 தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.
22 திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், திருவண்ணாமலை.
23 திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாருர்.
24 திருவள்ளூர் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
25 திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்
26 திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.
27 திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி
28 தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.
29 வேலூர் nஉறாலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர்.
30 விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.
31 விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
32 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

24 comments:

  1. Thanks MANIYARASAN sir
    I bow your well done jobjob....
    Very good......

    ReplyDelete
  2. Good... Any news about paper 1 ADW list?

    ReplyDelete
    Replies
    1. i think, after this counsling (5-9-2014), absents and PGT slectied vacancies are filled by waiting list canditaes. then puplished WELFARE dept slection canditaes..

      Delete
  3. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் ....முதல் கடவுள் பிள்ளையார் அப்பனை வணங்கி நமது ஆசிரியர் பணியை இனிதே துவங்குவோம் ...

    ReplyDelete
    Replies
    1. விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் ...

      Delete
  4. Good morning to all new teachers.Mani sir duty la eppo join pannanum?

    ReplyDelete
  5. DEAR VELMURUGAN SIR..
    i think, after this counsling (5-9-2014), absents and PGT slectied canditaes vacancies are filled by waiting list canditaes. then puplished WELFARE dept slection canditaes..correcta sir..please

    ReplyDelete
  6. மணி சார் & ஸ்ரீ சார் தேர்வு வாரியத்தின் தெரிவு கடிதம் என்பது எது என்று தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்

    ReplyDelete
  7. Any one tel me my certificate verification have finished in thiruvallur district but my native place in thanjavur district. Which place i will go for counselling now.

    ReplyDelete
  8. மணி சார் & ஸ்ரீ சார்

    Paper 1 minority list eppo varum( urdu, kannada, Telugu )

    ReplyDelete
  9. Dest admin sir
    Minority list
    Paper 1
    Paper 2
    Epo varum
    Late ku karanam theriuma sir
    please clarify

    ReplyDelete
  10. கல்வி செய்திக்கும் நண்பர்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..ஆணை முகத்தனை தொழுது உங்கள் கல்வி பணியினை தொடங்க வாழ்த்துக்கள்.பணி நியமனம் பெற போகும் நண்பர்களே சிறந்த ஆசிரியராக விளங்க அந்த 5 கரத்தான் ஆசி வழங்குவான்

    ReplyDelete
  11. Mani sir Shall we take the biodata form to the counselling centre? Then if you know the selected candidates in Tirunelveli District in Science subjects please tell me.

    ReplyDelete
  12. NINATHU PARUKANGAL UNSELECTED TEACHERS INTHA NILAI MARA VENDUM

    ReplyDelete
  13. I WISH ALL THE SELECTED TEACHERS.BUT FUTURE TEACHERS DEF SUFFERED.SO MY IDEA IN SELECTING PROCEDURE.BASED ON........
    1)TET MARK
    2)COMUNITY
    3)EMPL SENIORITY
    NO BODY CAN AFFECT THIS METHOD.IF U LIKE THIS COMMENT

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. KALVI SETHIKU MANAMARNTHA NANDRIKAL PAL.GUD JOB TO GIVING LOT OF INFO.

    ReplyDelete
  16. did anybody know about. joining date

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி