ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு 30-ம் தேதி ஆரம்பம்-மாலைமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2014

ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு 30-ம் தேதி ஆரம்பம்-மாலைமலர்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2353 முதுகலை ஆசிரியர்கள், 10698 பட்டதாரி ஆசிரியர்கள், 1649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 14700 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பணி வழங்குவதற்கான கலந்தாய்வு வரும் 30-ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
  •  அதன்படி முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 30-ம் தேதியும், வேறு மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 31-ம் தேதியும் நடைபெறும்.

  • இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மாவட்டத்திற்குள் உள்ள பணியிடங்களுக்கு செப்டம்பர் முதல் தேதியும், வேறு மாவட்டங்களில் உள்ள பணியிடங்களுக்கு 2-ம் தேதியும்,

    பட்டதாரி ஆசிரியர்களைப் பொருத்தவரை, மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு செப்டம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 32 மையங்களில் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

40 comments:

  1. கல்விச்செய்திக்கு என் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. தொடக்க கல்வி துறையில் உள்ள ஆங்கிலம் ்& கணிதம் காலிபணியிடங்களை நிரப்ப ஏன் அரசு ஆர்வம் காட்டவில்லை. தகுதி உள்ள TET PASSED தேர்வர்கள் கொண்டு நிரப்பலாம் அல்லவா ்.

      Delete
    2. இரண்டாம் தேர்வு பட்டியலை எதிர் நோக்கி உள்ள தேர்வர்கள். தொடக்க கல்வி துறையை கவனிக்கவும். காலிபணியிடங்கள் உள்ளன

      Delete
    3. தாள் 1 ல்

      கடந்த முறை அறிவித்தது
      3000 வேகன்சி.

      நிரப்பப்பட்டது
      10000 வேகன்சி.

      அது சாத்தியமாகும் போது
      நமது வெற்றியும் சாத்தியமாகும்.

      கடந்த முறை
      எங்கே பின்பற்றினர்கள் இடஒதுக்கீடு.


      Delete
    4. என்னை பாராட்டிய உதடுகள்-இன்று
      என்னை தூற்றுகின்றன. .....

      ஏன் என்று விளங்கவில்லை
      விளக்கம் தர யாருமில்லை.

      வேதனை நிறைந்த வாழ்க்கையில்
      இது தனி போராட்டம்.

      வரம் தா இறைவா.....
      சோதனைகளை வெல்லும் வரை
      சோர்ந்துபோகக் கூடாதென்று....

      நன்றி-பிரகாஷ்

      Delete
    5. Sathya moorthy sir, no words ....

      Delete
    6. Kuninthu paarthaal kadugum malaiyaam
      Nimirnthu paarthaal malaiyum kadugaam. Arasu pani illayel vaalkayae illaya.tnpsc upsc bank exam ctet hyena anaithum irukkum poluthu man am thalaral kudathu

      Delete
  2. Thanks a lot Vijay Kumar Chennai sir ur realy great ur the HERO of kalviseithi

    ReplyDelete
  3. ADIW SCHOOL POSTING PAPER 1????????

    ReplyDelete
  4. TET & PGTRB மாவட்டத்திற்குள் ஆன்லைன் கலந்தாய்வு எவ்வாறு நடைபெறும்?
    ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிட்டபடி உரிய நாட்களில் நடைபெறும். கலந்தாய்வு நடைபெறும் இடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தால் நாளை அறிவிக்கப்படும்.

    காலை 9 மணிக்கு கலந்தாய்வு துவங்க இருப்பதால், கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் அனைவரும் காலை 7.30 மணிக்கே உரிய இடத்திற்கு செல்லவும்.

    மாவட்டத்திற்குள் கலந்தாய்வு -

    மாவட்டத்திற்குள் கலந்தாய்வு எனும் போது பாடவாரியாக மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் பட்டியல் தேர்வர்கள் பார்வைக்காக ஒட்டப்படும்.(பெரும்பாலும் இதுதான் நடைமுறை).

    மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பாடவாரியாக தேர்வு பெற்றுள்ள தேர்வர்கள், வரிசைகிரமமாக நிறுத்தப்படுவார்கள்.தேர்வு பெற்றவர்கள் அனைவரும் கலந்தாய்வு நடைபெறும் அறைக்குள் அனுமதிக்கப்பட்டு அமரவைக்கப்படுவார்கள். (குறிப்பு - எந்த காரணம் கொண்டும் தேர்வர்கள் உடன் செல்லும் மற்ற நபர்கள் கலந்தாய்வு நடைபெறும் அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே அலைபேசி தொடர்பை பயன்படுத்த தயாராக இருக்கவும்)

    பாடவாரியாக அழைக்கப்பட்ட தேர்வர்கள் தர வரிசைப்படி அழைக்கப்பட்டு பட்டியலில் உள்ள இடத்தில் தங்களுக்கு தேவையான இடத்தை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்படுவார்கள். தேர்வர்கள் தேர்ந்தெடுக்க அதிகபட்சம் 30 நொடிகள் அல்லது 1 நிமிடம் மட்டுமே தரப்படும். மேலும் அக்குறிப்பிட்ட நேரத்தில் அலைபேசியை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே முன்னதாகவே தேர்ந்தெடுக்கப்படவேண்டிய இடங்களை வரிசைகிரமமாக தர எண் இட்டு தயாராக எடுத்து சென்றால், முதலாவது இடம் இல்லாவிட்டால் இரண்டாவது இடம் என்றவாறு தேர்ந்தெடுக்க இயலும்.

    தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆணை வழங்கும்முன் மீண்டும் ஒரு முறை தங்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்படலாம். எனவே நாம் முன்னதாக அறிவுறுத்தியபடி அனைத்து அசல் மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்கள், புகைப்படம் என அனைத்தையும் தயாராக கொண்டு செல்லவும். குறிப்பாக வேறு மாநில பட்டம் பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்கள் மதிப்பீடு செய்யப்பட்டிருப்பின் அச்சான்றிதழ்களையும் கொண்டு செல்லவும். கலந்தாய்வு நடைபெற்று கொண்டிருக்கும்போதோ (அ) முழுமையாக முடிவுற்ற பின்போ தான் தாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளியில் தாங்கள் பணிபுரிய உரிய ஆணை வழங்கப்படும். எனவே தேவையான தண்ணீர், இதர சிறு உணவு பொருட்களையும் கொண்டு செல்லவும்.

    ReplyDelete
    Replies
    1. Kalngarai vilakkaam kalvisethikku in nenjarntha nandrigal pala kurippaga nanbar maniarasan
      Avargalukkum tet sagakkalukkm nandrigal sevai thodara vazhthukkal

      Delete
  5. TNTET & PGTRB வேறு மாவட்டத்திற்கு ஆன்லைன் கலந்தாய்வு எப்படி நடைபெறும்?
    வேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு -

    தங்கள் சொந்த மாவட்டத்தில் பணி செய்ய உரிய காலிப்பணியிடம் தாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை எனில் அடுத்த நாள் நடைபெறும் வேறு மாவட்டத்திற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் ( சொந்த மாவட்டத்திற்குள் பணி பெற கலந்தாய்வு எங்கு நடைபெற்றதோ அதே இடத்தில் தான் வேறு மாவட்டத்திற்குள் பணிபுரிய கலந்தாய்வும் நடைபெறும். மாற்றம் இருப்பின் முதன்மைகல்வி அலுவலகத்தால் முறைப்படி அறிவிக்கப்படும்).

    வேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு எனும் போது, மாநில அளவில் தங்கள் தர எண் பார்க்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தர எண் (From .... to....) பெற்றுள்ளவர்கள் மட்டும் கலந்தாய்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். தங்களுக்கான காலிப்பணியிடங்கள் கணினி திரையில் வந்து கொண்டே இருக்கும். (Scroll Down Type)

    தங்களுக்கு முந்தைய நபர் எந்த மாவட்டத்தில் எங்கு உள்ளாரோ அவருக்கு உரிய நேரத்தில் அவர் தனக்கு தேவையான இடத்தை தேர்ந்தெடுக்க இயலும். அவர் தேர்ந்தெடுத்த இடம் உறுதிபடுத்தப்பட்ட பிறகே அடுத்த தர வரிசை எண் உள்ளவர் எந்த மாவட்டத்தில் உள்ளாரோ அங்கு கணினி உயிர்பெறும். இதுபோன்று தங்களுக்கான நேரம் வரும் போது தாங்கள் தங்கள் பள்ளியை தேர்ந்தெடுக்க இயலும். மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும் போது தேர்வர்களுக்காக வழங்கப்பட்ட நேரத்தை விட வேறுமாவட்டத்தை தேர்ந்தெடுப்பர்வர்களுக்கு மிக குறைந்த நேரமே வழங்கப்படும். எனவே அதற்கு தக்கபடி தயாராக இருக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. very useful information sir thx.. in ladt thread i hav posted some questions. can u plz help us to sort out that

      Delete
  6. Welfare department paper 1 what happen ??????????????

    ReplyDelete
  7. Maniarsan sir palliyai eappadi thernthu eaduppathu eathani options tharuvargal nan thrichy dst etthani kali pani idangal irukku eanpathai eappadi therinthu kolvathu pls sonllunga sir

    ReplyDelete
  8. சத்தியமூர்த்தி 9543391234
    மகேந்திரன்
    7299053549
    தீபன்
    8012482604
    சத்யஜித்
    09663091690
    தேனி நண்பர்
    9597724532
    கருப்புசாமி
    7200670046
    மகேஷ்
    8883579062
    அரியலூர் நண்பர்
    9094239223
    சாமி
    9994427026
    பாண்டியன்
    9677486457
    தர்மபுரி நண்பர்
    9094316566
    தஞ்சாவூர் நண்பர்
    9344837508
    நல்லதம்பி
    9543689366
    நாகை நண்பர்
    9524132556
    குழந்தை
    9994282858
    நாமக்கல் நண்பர்
    8883845503
    ஆனந்த்
    9626023733

    மேலும் சில நண்பர்கள்
    9843521163
    8681039619
    9524132556.
    நன்றி.

    PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
    வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...

    *இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
    சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
    உண்ணா விரத போராட்ட முறையோ;
    கிடையாது.. .... .....

    திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
    வெற்றி கிட்டும்...

    பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

    நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

    நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
    இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

    "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
    தெய்வத்தால் ஆகா தெனினும்"

    தொடர்புக்கு. .
    கருப்புசாமி:7200670046

    சத்திய மூர்த்தி 95433 91234

    ReplyDelete
    Replies
    1. Before going to meet on Monday @TRB office, pls send our request to following govt mail id

      cmcell@tn.gov.in
      cmsec@tn.gov.in
      trb.tb@nic.in
      schsec@tn.gov.in
      mlajolarpet@tn.gov.in

      for example:
      1. Please increase the vacancy for English medium
      2. Fill vacancy for upcoming year 2013-14 with the eligible passed TET candidates.
      3. Kindly Allocate BC, MBC candidates in welfare schools.

      Many thanks to Karrupasamy for your kind information.

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Vellore District:

    வேலூர் மாவட்டத்தில் கலந்தாய்வு - ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலுர் எனும் இடத்தில் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது

    ReplyDelete
  11. TET & PGTRB Posting - Press News:
    பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall Ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
    - CEO Vellore


    For View Vellore CEO's Press News: - Click Here For Download


    Vellore District:

    வேலூர் மாவட்டத்தில் கலந்தாய்வு - ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலுர் எனும் இடத்தில் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இதர மாவட்டங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும் இடம் விரைவில் பதிவேற்றப்படும்.

    ReplyDelete
  12. maniarasan, sri, vijay chennai, pls tell me the when paper II 2nd list publish for other subject, and also pls tell any chance for increase the vacancy of paper2?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே தொடக்க கல்வி துறையை அரசு இன்னும் தொடவில்லை. காத்திருப்பீர். நல்ல செய்தி வரும் .

      Delete
    2. nandri nanbaray neengalavathu pathil alluthir mikka nandri..,

      Delete
  13. Paper 1 welfare department posting government holiday va???????????
    Illa department close saa??????

    ReplyDelete
  14. Paper 1 sir.
    We r also waiting minority selection list.
    There is no proper annoucement trb

    ReplyDelete
  15. resident adress salem exam centre trichy entha districtla counciling pls

    ReplyDelete
  16. please remove that symbol tngovt " vaaimaye vellum " this is don't comfort for our govt , 82-89 govt empl but 90 & above 90 job less good govt & good cm valga ne pallandu . theivam nenru kollum but arasan anrey kolvan , 90ku mel eduthu pass anavarigalin sabam summa vidathu , there is no fault in 82-89 teachers , fault only in tngovt

    ReplyDelete
  17. Whether they will fill the backlog vacancy first or current vacancy or weightage mark basis
    on the day of counselling itself they will give the appointment order or separate day.
    please explain about counselling

    ReplyDelete
  18. THANK YOU. SO. MUCH. KALVISEITHI.

    ReplyDelete
  19. Raja sir, dont give up... u can rock.... be brave sir,,,, i can understand ur feelings... becz i am also like u.. but u should be like fenix bird... u can...

    ReplyDelete
  20. நள்ளிரவு ஆனது கூட தெரியாமல் எத்தனை நல் உள்ளங்களின் கண்களில் கண்ணீர் மழையோ இப்போது?ஏ கடவுளே! ஒரு சிலருக்கு அமிர்தமும் ஒரு சிலருக்கு கண்ணீரும் நீ தந்தது ஏன்?அனைவரும் உன் பிள்ளைகள்தானே...ஆறுதல் இல்லாமல் அழும் என்னுடன் பிறவா ஆசிரிய சகோதர சகோதரிகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்....!!!

    ReplyDelete
    Replies
    1. Thanks dear.. really we are with tears...and lost our sleep...

      Delete
  21. 28 Aug 2014

    புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 30-08-2014 முதல் 05-09-2014 வரை கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.in- ல் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள 14,700 ஆசிரியர்களுக்கான நியமனக் கலந்தாய்வு இணையதளம்
    வாயிலாக, நடத்தப்படவுள்ளது. அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு /நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய நடுநிலை/ தொடக்கப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள்/ இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு இணையதளம் வாயிலாகக் கீழ்க்கண்ட அட்டவணையின்படி காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், பின்வரும் இடங்களில் நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    முதுகலை ஆசிரியர்கள்- (மாவட்டத்திற்குள்) 30-08-2014
    முதுகலை ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்) 31-08-2014
    இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) 01-09-2014
    இடைநிலை ஆசிரியர்கள்(வேறு மாவட்டம்) 02-09-2014
    பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) 03-09-2014
    பட்டதாரி ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்) 04-09-2014 மற்றும் 05-09-2014
    கலந்தாய்வு நடைபெறும் இடம்

    1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.
    2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்
    3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்
    4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.
    5 திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்
    6 ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு
    7 காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
    8 கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
    9 கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரூர்.
    10 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
    11 மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜி மருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.
    12 நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.
    13 நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.
    14 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.
    15 புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.
    16 இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.
    17 சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்.
    18 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்).
    19 தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்
    20 நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.
    21 தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.
    22 திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், திருவண்ணாமலை.
    23 திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாருர்.
    24 திருவள்ளூர் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
    25 திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்
    26 திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.
    27 திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி
    28 தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.
    29 வேலூர் nஉறாலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர்.
    30 விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.
    31 விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
    32 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

    ReplyDelete
  22. I am selected in tamil second list .for me when is counsling

    ReplyDelete
  23. i am bc ph english, i lost job by 0.37 mark difference , but my next lowest tet mark bc ph candidate got job by +2 mark wght.
    have any chance to me additional list? please tell me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி