நிகழாண்டில் மேலும் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் : பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்-Dinamani News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2014

நிகழாண்டில் மேலும் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் : பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்-Dinamani News


கல்வித்துறையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதுமையான திட்டங்களோடு, ஆசியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களின் கல்வி அலுவலர்கள் மற்றும் பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது: தமிழக அரசு கல்வித்துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, இந்த நிதி ஒதுக்கீடு செய்ததன் முழு பலனையும் பெற முடியும்.

தமிழக மாணவர்கள், கல்வியின் மூலம் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக முதல்வர் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்களில், 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வில் 70 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சிப் பெற்ற 234 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பிளஸ்2 தேர்வில், இந்த 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சிப் பெறவில்லை. இவர்களின் எதிர்காலம், தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கும் வகையில், தரத்தில் பின் தங்கிய மாணவர்களின் மீது கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களை சிறப்பாக உருவாக்க வேண்டும்.

தொடர்ச்சியாக பல ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம், பின் தங்கியதற்கான காரணங்களை கண்டறியப்பட வேண்டும். கல்வியில் பின்தங்கிய தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள், தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் பெற்றுள்ளன. தோல்வி நிலையானது இல்லை. இதனை புரிந்து கொண்டு, இழந்த பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியில் தலைமையாசிரியர்கள் ஈடுபட வேண்டும். 2011ஆம் ஆண்டு, 71ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தது.கடந்த 3 ஆண்டுகளில் படிப்படியாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.நிகழாண்டில் மேலும் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்அவர்.

2013-14 கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 13 மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கும், 35 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலிருந்து சிறந்த தொடக்கப் பள்ளிகளாக தேர்வு பெற்ற தலா 3 பள்ளிகளுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பழனி கல்வி மாவட்ட அளவிலான மாவட்ட சதுரங்கப் போட்டியை அமைச்சர் கே.சி.மணி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 356 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் 331 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி ஆகியவற்றையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மக்களைவை உறுப்பினர் எம்.உதயக்குமார், வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பழனிச்சாமி, மேயர் வி.மருதராஜ், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநர் லதா, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

47 comments:

  1. Choose the correct answer: Nigalandu enbathu...... A) 2014 calendar year B) 2015 calendar year C) 2014.,2015 academic year D) ethuvumillai

    ReplyDelete
    Replies
    1. OUT OF UNSUCESSFUL 35000 PAP 2 CANDIDATES ONLY 200 ARE PROTESTING REMAINING WANT THE FRUIT FROM THE PROTESTS BUT THEY DONT WANT TO PROTEST

      BUT THE GOVT. MAY MEAN THAT 98% ACCEPTED WHAT GOVT. HAS DONE AND WILL GO AHEAD THAT IS WHAT IS HAPPENING SO ONLY THE FIRST LIST WENT TO SCHOOL EDUCATION DEPT.

      PROTESTING FRIENDS SORRY TO SAY THIS UR PROTEST WILL GO IN VAIN JUST FOR LACK OF STRENGTH

      Delete
    2. I AM A SELECTED CANDIDATE BUT PRAY FOR THOSE WHO FIGHT FOR JUSTICE

      Delete
    3. 2 ம் பட்டியல் வருவதற்கு எவ்விதமான வாய்ப்பு இல்லை

      Delete
    4. மாற்றுத்திறனாளிகள் தொடர்ச்சியாக போராடி வெற்றி பெற்றனர்,
      த்ற்போது நடைபெற்ற போராட்டமும் அரசை யோசிக்க வைத்துள்ளது,
      மறைக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன,
      கட் ‍‍ஆப்‍ மேலும் குறையும், தேர்வு செய்யப்படவுள்ள ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்,

      Delete
    5. பணி நியமனம் தாமதம் ஆகலாம், வேறு வழி இல்லை, அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி

      Delete
    6. is it called second list?????

      Delete
    7. Avsrgal stylel sonal D,ethuvumillai

      Delete
  2. அனைத்து TET நண்பர்களுக்கும் வணக்கம் !
    நண்பர்களே ! வாழ்த்துகள் !

    நேற்றைய மற்றும் இன்றைய அறவழி போராட்டம் அரசுத்தரப்பில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுதிருக்கும்.
    நண்பர்களே ! வாழ்த்துகள் !
    நாளையும் நமது அறவழி போராட்டம் தொடர்கிறது . பின் வாங்க வேண்டாம்.
    ஒரு கை ஓசை எழுப்பாது . முட்டி மோதினால் மட்டுமே விதை விருட்சமாகும் .
    நாம் பிறருக்ககாக போராட வேண்டாம் . நாம் நமக்காகவும் நமது உரிமைக்காகவும் வாய் திறந்தால் போதும்.
    இப்போது விட்டு விட்டால் நமக்கு எப்போதும் வேலை கிடைக்காது.
    நாம் யாரும் தலைமை தாங்க வேண்டாம் ஒன்றுகூடினால் போதும் .
    டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்துவோம்
    அனைவரும் ஒன்றுகூடுவோம். அண்ணாசதுக்கம் வாரீர் . அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை செய்வோம் .
    வழக்குகள் அனைத்தும் நமக்கு சாதகமாகவே உள்ளது .வெற்றி நிச்சயம்.
    முதல்வர் அம்மா நமக்கு சாதகமாக நல்ல ஒரு முடிவை எடுப்பார். நம்புவோம் .NCTE rules படி 1.30 மணி நேர தேர்வை அம்மா அவர்கள் மாற்றி 3 மணி நேர தேர்வாக செய்யவில்லையா ? NCTE என்ன செய்தது ? அம்மா நினைத்தால் எதுவும் முடியும் .தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து பணி நியமனம் செய்ய முடியும்.
    தொடர்புக்கு
    9865066553
    9626496990
    9042911424

    ReplyDelete
  3. மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஏன் இப்பிரச்சனையில் மாவுனம் காக்கின்றார்

    ஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் நாம் இப்போது போரடவிட்டால்
    உண்மையில் நாம்தான் ஊனம்முற்றோர்

    ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும்
    தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage மற்றும் 5%
    மதிப்பெண் தளர்வு முறையால் எங்களை போன்ற மூத்த ஆசிரியர்களின் வேலையும் தன்மானத்தையும் பறித்துவிட்டனர்.

    இப்போது இப்பிரச்சனைக்காக போரடும் எங்களையும் எங்களுடன போரடிய பெண் ஆசிரியைகளையும் கைது செய்து எங்களிடம் கடைசியாக மிஞ்சி இ௫க்கும் உயிரையும் பறிக்க பார்க்கின்றனர்...

    தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage முறையால் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும பணிஇழந்து நாங்கள் அவமானப்பட்டு இனி வாழ்வதைவிட போரடி சாவதே மேல். எடுத்துக்கொள்ளுங்கள் எங்கள் உயிர்களை...
     
    நண்பர்களே
    சில௫க்கு சில விஷயாங்கள் எளிதாக கிடைக்கின்றன ஆனால் நமக்கோ போரடித்தான் பெறவேண்டும் என்றால் போரடித்தான் பார்ப்போமே...

    பாதிக்கப்பட்ட நண்பர்களே ஒன்று கூடுங்கள்
    ஒன்று கூட்டுங்கள்
    நாமக்காக போரடும் நண்பர்களுக்கு தோள் கொடுங்கள்.
    சென்னைக்கு வா௫ங்கள்

    Weightage மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பணியிழந்து விட்டுக்குள் முடங்கி இ௫ந்ததும் போதும் போரடி வெல்லாலம்
    வா௫ங்கள் சென்னைக்கு
    நம்மை போன்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்தி௫க்கிறார்கள் உங்களுடன் சேர்ந்து போரட

    இவ் போட்டம் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல்  82
    க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல்  ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை

    மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

    Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

    இவ் போரட்ட செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
    Msg மூலமாகவோ
    Facebook Status Sharing
    Twitter
    What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.

    பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
    தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.

    நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் போரட்டத்திற்கு  ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.

    சென்னையில்
    சந்திப்போம் வா௫ங்கள்

    ReplyDelete
  4. 2013 ல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அனைவரும் ஒன்று கூடி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருக்க நான் தயார்...நான் இறந்தாவது என் ஆசிரிய குடும்பங்களை வாழவைக்க நான் தயார்...pls contact mganesamoorthy1988@gmail.com..

    ReplyDelete
    Replies
    1. செத்த பிறகு சம்பளத்த யாருங்க வாங்குறது.......

      Delete
    2. நீங்கள் வாங்கிக்கொள்ளுங்க

      Delete
  5. 2013 ல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அனைவரும் ஒன்று கூடி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருக்க நான் தயார்...நான் இறந்தாவது என் ஆசிரிய குடும்பங்களை வாழவைக்க நான் தயார்...pls contact mganesamoorthy1988@gmail.com..

    ReplyDelete
  6. 7லட்சம் பேர் இருக்கையில் வெறும் 70000 posting கூட போட முடியாதா
    ?அப்படியானால் இனியும் படித்துக் கொண்டிருப்பவர்களின் நிலைதான் என்ன?அப்படி இருக்க எதற்கு அனைவருக்கும் கட்டாயக்கல்வி..?என்னுடன் படித்த என் நண்பர்கள் எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டனர்...ஆனால் இன்று அவர்கள்தான் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்..படித்த நானோ இன்று பலரின் கேளி கிண்டல்களுக்கு ஆளானதுதான் மிச்சம்

    ReplyDelete
  7. 7லட்சம் பேர் இருக்கையில் வெறும் 70000 posting கூட போட முடியாதா
    ?அப்படியானால் இனியும் படித்துக் கொண்டிருப்பவர்களின் நிலைதான் என்ன?அப்படி இருக்க எதற்கு அனைவருக்கும் கட்டாயக்கல்வி..?என்னுடன் படித்த என் நண்பர்கள் எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டனர்...ஆனால் இன்று அவர்கள்தான் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்..படித்த நானோ இன்று பலரின் கேளி கிண்டல்களுக்கு ஆளானதுதான் மிச்சம்

    ReplyDelete
  8. யாருமே இல்லையா இங்க இப்போ...கல்விச்செய்தியும் நானும் மட்டும்தான் இப்போ தூங்காம இருக்கறங்க போல..

    ReplyDelete
  9. 2 papers pg & pt la select anavanga pg ku poita pt vacancy 2nd listla viduvangala? Plz tell any infrmtn

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. I am going to be a mad. This is all the political games. There is no end till the m.l.a. election. I lost my job in a private school because I passed the tet exam. My management asked me whether you are complete this academic year. How can I answer? Now I am going to 100 days work in my village. My village people tease me now. I could understand because they were mostly ill literate. How they know my situation? I lost my job in decimal point 0.53 in English major. I belong to mbc, male. Age is 32. I got 95 in dead (tet) exam. My lost hope is a second list. But there is no news about second list. Please pray me for getting a post in second list by all the selected and non selected candidates.

    ReplyDelete
    Replies
    1. I appreciate your hard work,perseverance etc... God bless us.My relative also like that BC F 65.310

      Delete
  12. My village is not reachable area. If I send any message first I will come out from my village. Now time is 4:30. I can't get a peaceful sleep through last one year. Who am I blame? Me or politicians. In 2012 I got 86 in the tet exam. Now I got 95. But not in the selected list. I am new to this site. I don't blame anyone. But how can I save my life?

    ReplyDelete
    Replies
    1. MR. JITHAN SIR, UNGALUKKU NICHAYAM VELAI KIDAIKKUKUM SIR., U R MISSING HAIRLINE CAP. ONLY. ENGLISH VACANCY IS JUST 100 VACANCY VANDHAL

      KOODA POTHUM MR. JITHAN SIR., KAVALAI PADA VENDAM., UNGALIN

      MUYARCHIKKUM, ULAIPPUKKUM NICHAYAM PALAN KIDAIKKUM SIR.

      I PRAY TO GOD U WILL GET JOB FOR 2ND LIST., JUST I KNOW UR SITUTATION SIR. DONT WORRY., PAYAPADAVENDAM.,

      WELFARE SCHOOL=IL 3 CORPORATION SCHOOLS VACANCY LIST VITTUTHAN

      AAGA VENDRUM., PARPOM ., TRB- INNUM ENNA ENNA VILAYATTU ELLAM

      TET PASSED CANDIDATES VALKAIYIL VILAYADA KATHIRUKIRARGAL

      ENDRUTHAN THERIYAVILLAI., EPPADIYUM POSTING INCREASE PANNI IRUKKALAM.,

      DEAR TRB OFFICIALS., POSTING INCREASE PANNUNGAL.,

      Delete
  13. Second list?
    Second list?
    Second list? Please, please, please..,

    ReplyDelete
  14. 2nd list unda sir? en nanbargalukkaga koorungal i am tet paper 2 selected candidate

    ReplyDelete
    Replies
    1. Truly will come. Did you see the notification? What is your major sir and weightage?

      Delete
    2. major english weitage 62.5 quata sgt.

      Delete
  15. pg and tet appoinment eppothu???????????????

    ReplyDelete
  16. OUT OF UNSUCESSFUL 35000 PAP 2 CANDIDATES ONLY 200 ARE PROTESTING REMAINING WANT THE FRUIT FROM THE PROTESTS BUT THEY DONT WANT TO PROTEST

    BUT THE GOVT. MAY MEAN THAT 98% ACCEPTED WHAT GOVT. HAS DONE AND WILL GO AHEAD THAT IS WHAT IS HAPPENING SO ONLY THE FIRST LIST WENT TO SCHOOL EDUCATION DEPT.

    PROTESTING FRIENDS SORRY TO SAY THIS UR PROTEST WILL GO IN VAIN JUST FOR LACK OF STRENGTH

    ReplyDelete
  17. DEAR 2ND LIST EXPECTED CANDIDATES,
    USHA EDN, MYTHILI, CHANDRASEKAR, DHILIP, SELNI, GANGA DEVI, JITHAN, MR. AAS SIR, SENTHILKUMAR, AROCKIA MARY, MARUDU PANDIAN, KALAI, ANAND ANAND, VENU SIRI, ANAND, SINGARAVELAN , SEN, UMAPATI, SAKTHI UNDERTAKER D, & ALL OF MY FRIENDS,
    PLS. ENQUIRE TRB TO REQUEST FOR 2ND LIST VIA PHONE.,

    AND WE MAKE KORIGGAI MANU ONDRAI READY PANNI ANAIVARUM POST-IL

    VIRAIVIL (DATE FIXING VIRAIVIL ) 2ND LIST WELFARE SCHOOLS, 3 CORPORATIONS

    SCHOOLS LIST VITUVATHARGU KORIGAI MANU ANUPPUVOM., NICHAYAM RESPONSE

    KIDAIKKUM., NAAM NERMAIYAGA SEYYUM ENDHA MUYARCHIKKUM PALAN KIDAIKKUM., PARPPOM.,

    ANY 2ND LIST NEWS PATRI THERINTAL PLS CONTACT : APPLERED201230@YAHOO.COM

    ReplyDelete
    Replies
    1. I am also ready sir.... We need second list....

      Delete
    2. Undertaker sir i'll become a teacher or not i don't know but surely will become MAD.i chat with u already sir female english MBC 64.65 wtg.i missed my chance in 0.53 .i am waiting for 2 nd list . I think i m unlucky fellow.

      Delete
  18. Sorry to say this sir palan kidaipathu kadiname namathu porattakkuzu sarbil eerkanave ethu kurithu manu kodutthagivittathu any way good all t best

    ReplyDelete
  19. GOOD MORNING SUDHAGAR E SIR, NICHAYAM 2ND LIST VITTAGA VENDRUM.,

    KOVAI CORPORATION SCHOIL 56, THENI KALLAR SCHOOL - APPROX.20 (THENI NANBAR KOORINAR) IDHAE POL AD ST SCHOOL MATTUMAE 1360 KKUM MEL SCHOOL ULLATHU.,

    ATHIL KURANTA PATCHAM 1500 VACANCY AAVATHU VARUM., APPADI ANDHA VACANCY - I FILL PANNAMAL

    KALAM KADATHINAL COURT PADIYERA THAYANGA MATTOM.,

    ReplyDelete
  20. Paper 1selection list???????????¿?????¿???????????

    ReplyDelete
    Replies
    1. en adutha porathuku date kekurena sir ,.,.ammavuku idukellam time illa

      Delete
  21. varusathuku 2 time tet vaikiromnu sollitu ipa oru examuke ithanai pirachanaiya?????????????

    ReplyDelete
  22. innum select kooda aagama irrukira and ippa bed padikiravaga enna vali ,.,.,.,.,private schoolku kondatamthan

    ReplyDelete
  23. bed mudichavangaluku freeya aadu maadu vallangum plan irundha adhaiyavadu udane amalpaduthunga,/.,.,.,cm,.,.,.milk rate nalla pogukuthu

    ReplyDelete
  24. private schoolku engala ellam adimaatu villaiku vithuda plan panreengala

    ReplyDelete
  25. hi
    how is possible pg candidates numbers in 1267.
    Total vacancy as per notification 2276 including tamil Major.
    Now Tamil Major vacancy closed in 605.
    Balance vacancy position pending for result and posting. (1671).
    Now final result not yet published 3 subjects (commerce, economics, and physics) total vacancy 785.
    May be the above 3 subjects final list not published before counseling Total vacancy 886 only.
    but our honourable education minister and secretary both are tell same way in 1267 posting how is possible.
    Pls think and solution give.


    Regards
    Senthilkumar. v

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி