குரூப் 4ல் தேறியவர்கள் பரிதவிப்பு : பணியில் சேர்வதில் சிக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2014

குரூப் 4ல் தேறியவர்கள் பரிதவிப்பு : பணியில் சேர்வதில் சிக்கல்.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 'குரூப் 4' தேர்வில்வெற்றி பெற்று, பணி நியமன ஆணை கிடைத்தும், தமிழ்வழியில் பயின்ற தனித்தேர்வர் என்ற காரணத்திற்காக, பணியமர்த்தப்படாத பலரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
கடந்த 2013 ஆக., 25 ல், 3550 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் 4' தேர்வு நடந்தது. லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதினர். 2014 மார்ச் 5 ல், முடிவுகள் வெளியானது. வெற்றி பெற்றவர்களுக்கு மார்ச் 26 முதல், இட ஒதுக்கீட்டிற்கு ஏற்ப, மே 6 வரை 'கவுன்சிலிங்' நடந்தது. அதில், நியமன ஆணை பெற்றவர்களுக்கு பணி ஒதுக்கீட்டின்படி, அந்தந்த துறை அலுவலகங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. அதன்படி, பலர் ஜூன் மாதம் பணியில் சேர்ந்து, 2 மாத சம்பளமும் பெற்று விட்டனர். தமிழ்வழிக்கல்வி மூலம் 10 ம் வகுப்பு தனித்தேர்வு எழுதி, 'குரூப்4' தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அவர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கு பணி நியமன ஆணையுடன் சென்ற போது, இவர்கள் குறித்த தகவல் வரவில்லை, எனக்கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பலரும், சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தை போனில் தொடர்பு கொண்டும், நேரிலும் சென்றும் கேட்ட போது, 'தனித்தேர்வில் தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீடு' எனக்கூறி, அரசின் உத்தரவு பெற்ற பின் தான், உங்களது பணி நியமன ஆணை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பப்படும், என கூறி விட்டனர். இதனால், பரமக்குடியில் மட்டும் 3பேர் பணி நியமன ஆணை கையில் இருந்தும், பணியில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: இதற்கு முன் நடந்த அனைத்து தேர்வுகளிலும், எங்களைப் போல் வெற்றி பெற்றவர்களை எந்த சிக்கலுமின்றி பணியில் அமர்த்தியுள்ளனர். குடும்பச்சூழல் காரணமாக, தமிழ் வழிக் கல்வியில் படித்து, தனித்தேர்வு எழுதி பகல், இரவு பாராமல் படித்து, டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வில் வெற்றி பெற்றும், வேலை கிடைக்காததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இருந்த தொழிலையும் விட்டுவிட்டு, பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம், என்றனர்.

4 comments:

  1. Group 4 typist la school education dep. Placement cou. And posting eppo reply pl. I am 2 month waiting after got the order

    ReplyDelete
  2. தமிழ் வழியில் பயின்ற ஓரெ காரணத்திற்க்காக மட்டும் 27.5.2012 அன்று TRB PG தேர்வு எழூதி தேர்வு செய்யப்பட்டும் (27 months) இதுவரை வேலை பெறாத PG candidates History 35, Commerce-57 Economics – 51 இவர்களூக்கு எப்போ வேலை ? இவர்களூக்கு அரசு வேலை தருமா ? இல்லை ஏமாற்றூமா ?
    இந்த கேள்விய நான் கடந்த 18 மாதம கேட்டு , கேட்டு நோயாளீயாக உள்ளேன். எதர்க்கு அரசு exam வைக்கனும் வீண் ஆசையை வளர்க்கவா

    ReplyDelete
  3. tnpsc very slow process in typist post appointment..selected candidates affected..

    ReplyDelete
  4. itha ellam applicationlaye check panni Hall ticket kudukalame...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி