7 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிறார் - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2014

7 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிறார் - தினமணி

1,649 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் வெளியீடு



தொடக்கக் கல்வித் துறைக்காக 1,649 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது.


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரத்து 500 பேரிலிருந்து தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) மூலம் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொடக்கக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளில் மொத்தமாக இந்த ஆண்டு 2,582 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

இதில் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள 1,649 காலிப்பணியிடங்களுக்கான இடைநிலை ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் மட்டும் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

ஆதிதிராவிடர் நலத் துறை உள்ளிட்ட பிற துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளுக்காக 900-த்துக்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் வரும் வியாழக்கிழமை அல்லது திங்கள்கிழமை வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.

இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைக்குப் பிறகு சுமார் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் ஆசிரியர்களிலிருந்து சுமார் 11 ஆயிரம் பேர் தகுதிகாண் மதிப்பெண் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரத்து 500 பேரிலிருந்து 1,649 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஆங்கிலம், கணிதம், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

7 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிறார்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை (ஆக.28) வழங்குகிறார்.

இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக நியமிக்கப்படுகின்றனர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் இரண்டு பாடங்களுக்கான ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களில் சில துறைகளுக்கான ஆசிரியர்கள் தவிர 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வைத் தொடங்கி வைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் 7 பேருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா நேரில் வழங்குகிறார்.

பணி நியமனக் கலந்தாய்வு எப்போது?

இப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பெரும்பாலும் அடுத்த வாரத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. இந்தப் பணி நியமனக் கலந்தாய்வு தேதிகள் ஓரிரு நாளில் இறுதிசெய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

38 comments:

  1. கல்விசெய்தி நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. இது நேற்றே உறுதியாக
      அறியப்பட்ட தகவல் எனினும் சில
      காரணங்களால் இதை வெளிப்படயாக
      கூற இயலவில்லை...பணிநியமனம்
      பெறப்போகும் அனைவருக்கும்
      வாழ்த்துக்கள்...உங்கள் கஷ்டங்கள்
      அனைத்தும் இன்றுடன்
      நிறைவடைகின்றன...

      Delete
    2. NANDRI SRI Sir, iravu urangineera illaya KAALAIYIL uruthipaduthapatta

      seithiyai thanthulleer. SIR COUNSELING date patri yeathum thagaval indru

      kaalaiyil ethirpaarkalama.

      Delete
    3. இன்று வெளியாகும் என்று செய்திகளில் வந்துள்ளது அதனால் எதிர்பார்க்கலாம்...

      Delete
    4. SRI ONLY FOR U
      MANIYARASAN
      MR VIJAYAKUMAR CHENNAI
      RAJALINGAM PULIANKUDI
      PRATAP AN
      VIJAY VIJAY
      KALVISEITHI
      அனைவருக்கும் இதயத்திலிருந்து ஈரம் கசிய நன்றிகளை தெரிவித்துக்
      கொள்கிறேன்

      Delete
    5. நன்றி நண்பரே.. உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்...

      Delete
    6. நண்பர்களே! பேப்பர் 1 வெல்பர் டிபார்மெண்ட்ல SC எவ்வளவு வெயிட்டேஜ் இருந்தா எதிர்ப்பார்க்கலாம்??? Pls reply sir...

      Delete
  2. 100 % உண்மையான தகவல்

    ReplyDelete
  3. Thank you kalviseithi for your information

    ReplyDelete
  4. இது நேற்றே உறுதியாக அறியப்பட்ட தகவல் எனினும் சில காரணங்களால் இதை வெளிப்படயாக கூற இயலவில்லை...பணிநியமனம் பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் இன்றுடன் நிறைவடைகின்றன...

    ReplyDelete
  5. THANKS FOR UR INFORMATION.......KANNATHASAN SIR
    SRI SIR..........
    .....MANIYARASAN SIR PARANDHU SELLUM NERAM VANTHU VITTATHU...........

    ..

    ReplyDelete
    Replies
    1. thunbangal thool thool naan pg and tet paper2 selected maniyarasan sir,,sri sir,kayal sir ullitta anaithu nanbargallukkum vazhthukkal

      Delete
    2. darshini madam all the best

      Delete
    3. உங்களுக்கும் வாழ்த்துக்கள் Mrs dharshini haarathy and Mr.prasad sir.

      Delete
    4. Mani sir suda suda daily news koudutha ungalukum ella frdkum manamarntha nandrikal

      Delete
  6. ம்ம்ம்..பட்டையை கிளப்புங்கள்..

    ReplyDelete
  7. any body when is the councelling

    ReplyDelete
  8. Congratulations to all selected teachers...vaazhthukkal nanbargale....

    ReplyDelete
  9. Thanks kalviseithi for information about counselling.

    ReplyDelete
  10. எல்லோரும் பட்டையை கிளப்புகிறார்கள் இந்த டார்க் நைட் சார் கானோம்

    ReplyDelete
    Replies
    1. பணி நியமனம் பெறப்போகும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள். இனி என்றும் உங்கள் வாழ்வில் இனிமை நிறைய வாழ்த்துக்கள்.

      இறைநம்பிக்கை உள்ளவர்களுக்கு இறைவனும் இல்லாதவர்களுக்கு அதே இறைவனின் மறுபக்கமான இல்லாய்மையும் அருள் புரிவதாக.

      காலையிலேயே என்னை வம்புக்கு இழுக்கிறீறே சண்டியரே.....
      கல்விச்செய்தியில உக்காந்தா இந்த நாளே போய்டும்பா....

      Delete
  11. Sir please yesterday itself am asking any news about 2nd list for paper 1 ?am bc am missed in .22 difference.vacancy increase aguma?

    ReplyDelete
  12. THANK U PRASAD SIR...
    UNGALUKUM VALLTHUKKAL......MATRUM THERVU PETRA ANAIVARUKUM VALLTHUKKAL.........

    ReplyDelete
    Replies
    1. அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

      Delete
    2. NANDRI SATHEESH Sir , ungalukum VIRAIVIL PANI kidaika

      KADAVULIDAM vendikolgiren.

      Delete
    3. Satheesh Kumar Satheesh sir
      இன்று 7 பேருக்கு அம்மா பணி நியமனம் செய்கிறார் என செய்தி வெளி வந்து இருக்கிறது. september 1 ம் தேதி பேரணி நடக்குமா சார் ?

      Delete
  13. பணிநியமனம் பெறும் புதிய ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ஏழைக் குழந்தைகள் வாழ்வை கல்வியால் உயர்த்துவோம் என்று அழுத்தமாய் சபதமெடுங்கள்...

    ReplyDelete
  14. all the best teachers kalakungaa

    ReplyDelete
  15. பணி நியமன ஆணை பெற காத்திருக்கும் ஆனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  16. All the best all of u ....vijayakumar sir neenga sonna athiradi sema thank u. . SRI ONLY FOR U
    MANIYARASAN
    MR VIJAYAKUMAR CHENNAI
    PRATAP AN
    VIJAY VIJAY
    KALVISEITHI . Thank u..

    ReplyDelete
  17. Above 70 Paper 1 BC & MBC Candidate to write online Petition for CM CELL increase the Vacany . Do Quickly that is Last chance.

    ReplyDelete
  18. THANK GOD ALWAYS...
    Hearty Thanks To KALVISEITHI

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி