ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு தொடங்கியது முதல் நாளில் 906 ஆசிரியர்களுக்கு ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2014

ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு தொடங்கியது முதல் நாளில் 906 ஆசிரியர்களுக்கு ஆணை


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்குவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தொடங்கியது.
முதல் நாளன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் இருக்கும் காலியிடங்களுக்கான கலந்தாய்வு நடந்தது. முதல் நாளில் 906 முதுகலை ஆசிரியர்களுக்கு உடனடியாக பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டதாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் கலந்தாய்வு நடந்தது. இதில் கலந்துகொண்ட 29 பேரில் 4 பேருக்கு பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி டி.ராஜேந்திரன் தெரிவித்தார்.முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மாவட்டத்துக்குள் இருக்கும் காலியிடங்களுக்கு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், வேறு மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

5 comments:

  1. Sri sir pls tell me? Bv iku rank kodhthu than CV iku rank tharuvarkala?

    ReplyDelete
  2. ==========================
    MORE VACANCY IN THE
    FOLLOWING DISTRICTS ONLY !!
    ==========================

    14,700 இடங்களில், 90

    சதவீதத்திற்கும் அதிகமான

    காலியிடங்கள்,
    1). விழுப்புரம்,
    2). கடலூர்,
    3). திருவண்ணாமலை,
    4). வேலூர்,
    5). தருமபுரி உள்ளிட்ட,

    வட மாவட்டங்களில் தான் உள்ளன.

    ReplyDelete
  3. Friends
    Please share the Sg vacancy in your district on tomorrow (Except these 9 district)it will help me a lot on tuesday

    ReplyDelete
  4. கல்வி செய்திக்கு காலை வணக்கம்,பட்டதாரி ஆசிரியருக்கு மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடக்குமா இல்லை இதேபோல் வேறு மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள சொல்வார்களா,,கடவுளே அனைவருக்கும் அவரவர் மாவட்திலயே கிடைக்க வேண்டும் ..நண்பர்களே , அறிவியல் துறைக்கு எவ்வாறு நடைபெறும் ... இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் என நான்கு துறைகளுக்கும் சேர்த்து அதிக wtge உள்ளவர்களை அழைப்பார்களா, அல்லது துறைவாரியாக அதிக wtge உள்ளவர்களை அழைப்பார்களா தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி