தேர்ச்சி விகிதம் 95 % உயர வேண்டும்: பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2014

தேர்ச்சி விகிதம் 95 % உயர வேண்டும்: பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலர்.


அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90-லிருந்து 95 சதவீதமாக உயர வேண்டும்என, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி. சபீதா அறிவுறுத்தியுள்ளார்.திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களுக்கான கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொதுத் தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, இந்த ஆய்வுக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமை வகித்துப் பேசினார்(படம்).பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி. சபீதா, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி. சபீதா பேசியதாவது:கல்வித் துறையின் வளர்ச்சிக்கு ரூ. 65 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.கடந்த 2012ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 358 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றன. 2013இல் 453 பள்ளிகளாகவும், 2014இல் 887 பள்ளிகள் என 100 சதவீத தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன.அதேபோல் பிளஸ் 2 தேர்வில், 2013ஆம் ஆண்டு 42ஆக இருந்த 100 சதவீத தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை, 2014இல் 113 பள்ளிகளாக அதிகரித்துள்ளன. மேலும், மாநில அளவிலான முதல் 3 இடங்களில், அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.தரமான கல்வி அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக அரசு 71,708 ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டது. அதில், 53,788இடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மாணவர்களுக்கு விளையாட்டு ஆர்வமும் தேவை என்பதைக் கருத்தில்கொண்டு, 2011-12 ஆம் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் சதுரங்க விளையாட்டு தொடங்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சதுரங்கப் போட்டியில், மாநிலம் முழுவதிலுமிருந்து 11.50 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் சிறந்த 24 பேர் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.அதேபோன்று, நிகழாண்டில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க 15 லட்சம் மாணவர்கள்விண்ணப்பித்துள்ளனர்.கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில், மாநிலத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்கள், தர வரிசையில் பின்னடைவு பெற்றுள்ளன. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு 8ஆம் இடத்திலிருந்த மதுரை மாவட்டம் 16ஆவது இடத்துக்கும், 21ஆவது இடத்திலிருந்த திண்டுக்கல் 22ஆவது இடத்துக்கும், 17ஆவது இடத்திலிருந்த தேனி மாவட்டம் 25ஆவது இடத்துக்கும் பின்னோக்கிச் சென்றுள்ளன.அதேபோன்று, பிளஸ் 2 தேர்வில் முதலிடத்திலிருந்த விருதுநகர் 3ஆம் இடத்துக்கும், 12ஆம் இடத்திலிருந்த சிவகங்கை 13ஆவது இடத்துக்கும், 8ஆம் இடத்திலிருந்த மதுரை 16ஆவது இடத்துக்கும், 17ஆவது இடத்திலிருந்த திண்டுக்கல் 19ஆம் இடத்துக்கும், 9ஆம் இடத்திலிருந்த தேனி 15ஆவது இடத்துக்கும் தரம் குறைந்துவிட்டன.

பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளிலும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். பொதுத் தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக உயர்வதற்கு தலைமையாசிரியர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.பிற்பகலில் நடைபெற்ற கூட்டத்தில், ஈரோடு மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் சிறந்த தேர்ச்சி விகிதத்தை உருவாக்க, ஆசிரியர்கள் மற்றும் 234 தலைமையாசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

9 comments:

  1. Magizhchi....... Aasiriyar illamal therchi vizhukadu eppadi uyarum........ Epidila sinthikiranga...... Ennathan nadakum nadakatume....... Iruttinil neethi pirakatume....... Thannale velivarum kalangathe.......... Don't worry don't worry be happy.... Don't worry don't worry be happy

    ReplyDelete
    Replies
    1. Tet poratam thoondiyathan karanamaka sathesh and rajalinkam methu FIR PATHIVU seithulathaka porata kuzu urupinarkal therivithanar.so dear friends ivarkalai nambi poratam ena ponal unkal methum FIR podapadum. pls don,t go.it,s true.ithu unkal nanmaikaka than.

      Delete
  2. this year no counselling only government and students drama views

    ReplyDelete
  3. Arasu palligalil maanavargal um athigam sera vendum therchi % athigamaga vendum aasiriyargalaiyum niyamika vendum....... neenga onnum comedy keemady pannalaye

    ReplyDelete
  4. அடுத்த இலக்கு...

    தேசிய AD நல வாரியத்திடம் விளக்கம் கேட்டு Notice அனுப்ப வேண்டும்.

    2012 ல் தமிழக அரசு TET நடத்திய போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். அந்த 2 தேர்வுகளுக்கு தளர்வு வழங்க கூறி ஏன் தமிழக அரசிடம் நீங்கள் பரிந்துரை செய்யவில்லை. அப்போது எங்களுக்கு நடந்த வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்தீர்களா?... 2013 TET தேர்வுக்கு மட்டும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு எல்லாம் முடிந்த நிலையில் 5 மாதம் கழித்து தளர்வு வழங்க பரிந்துரை செய்ததன் நோக்கம் என்ன..?
    நீங்கள் காலம் தாழ்த்தி பரிந்துரை செய்த மதிப்பெண் தளர்வால் TNTET 2013 Notification ல் உள்ளபடி 60% மதிப்பெண் எடுத்து முதலில் தகுதி பெற்றவர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டது வன்கொடுமையிலும் கொடுமை. எனவே தாங்கள் 2012 ல் நடந்த தேர்வுகளுக்கும் மதிப்பெண் தளர்வு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். இல்லையேல் 60% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதை செய்வதற்குத் தான் ஒரு நல வாரியம். ஒரே இனத்தை சேர்ந்த முதலில் தகுதி பெற்றவருக்கு முன்னுரிமை வழங்குவதால் எந்த வன்கொடுமையும் ஆகாது.


    ஜெயகிருஷ்ணன் TRB க்கு அனுப்பிய நோட்டீசுக்கு பதில் மனுவாக
    தேசிய AD நல வாரியம் அனுப்பிய வன்கொடுமை கடிதத்தை தான் காரணம் காட்டும்-jayakrishnan sir அப்படியே இவர்களுக்கும் ஒரு Notice அனுப்புங்கள்

    வெற்றி நிச்சயம்....

    இந்த letter ah anuppa எத்தன கோடி கொடுத்தாங்களோ.. எல்லாம் பணமும் நம்ம 1 year சம்பளம் தான்....

    ReplyDelete
  5. why dont u do that alan... why are u insisting jayakrishnan..... bayama??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி