ஆசிரியர் நியமன கவுன்சலிங் இன்று தொடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2014

ஆசிரியர் நியமன கவுன்சலிங் இன்று தொடக்கம்.


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 14 ஆயிரத்து 700 பேருக்கு ஆசிரியர்பணி நியமனம் வழங்கும் கவுன்சலிங் இன்று தொடங்குகிறது.

கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில், சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்புசான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது.அதன்படி, 14,700 பேர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர். தவிர, முதுநிலைப் பட்டதாரிகளின் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கும் மேனிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்பட உள்ளது. இதற்கான கவுன்சலிங் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி 5ம் தேதி வரை இணைய தளம் மூலம் நடக்கிறது.

அரசு, நகராட்சி உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களும், அரசு மற்றும் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளிகளில் காலியான பட்டதாரி, ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களிலும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள இருப்பிட முகவரியில் மாவட்டத் தில் உள்ள இடங்களில் கவுன்சலிங் நடக்கும்.கல்விச் சான்றுகள், ஆசிரியர் தேர்வு வாரிய தெரிவு கடிதம் ஆகியவற்றுடன் கவுன்சலிங்கில் பங்கேற்க வேண்டும்.கவுன்சலிங் 32 மாவட்டங்களில் நடக்கிறது.சென்னையில் மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேனிலைப் பள்ளியிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஸ்ரீலட்சுமி மேனிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரத்தில் டாக்டர் பி.எஸ் சீனிவாசன் நகராட்சி மேனிலைப்பள்ளியிலும் கவுன்சலிங் நடக்கிறது. இன்று தொடங்கும் கவுன்சலிங்கில் அந்தந்த மாவட்டத்துக்குள் காலியாக உள்ள பணியிடங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

11 comments:

  1. BREAKING NEWS : புதிதாக நியமிக்கப்படும் 14,700 ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும்

    பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவு

    ReplyDelete
    Replies
    1. சேலத்தில் துவங்கியுள்ள கலந்தாய்வில் கொடுத்துள்ள அறிவிப்பு...

      தேர்வர்கள் அவர்களது சான்றொப்பம் வாங்கப்பட்ட சன்றிதல்களின் நகல்களினை ( பள்ளி கல்லூரி சான்றுகள் & TRB தளத்திலிருந்து பெறப்பட்டவை..) அவர்கள் குறிப்பிட்டுள்ள வரிசைப்படி வைக்க சொல்லியுள்ளார்கள்... அசல் சான்றிதழ்களையும் அதே முறைப்படி அடுக்கி வைக்க சொல்லியுள்ளார்கள்...

      Delete
    2. Sri sir one doubt TRB website la irunthu download panna Hallticket and cv letter laium attested vanganumanga sri sir

      Delete
  2. BEST WISHES TO ALL P.G.

    CANDIDATES !!

    PLEASE COMMUNICATE

    COUNSELLING UPDATES TO US !!

    ReplyDelete
  3. Anybody pls say - counselling PH....ST......SCA......Ana rank kotuparkala? Or weightage paid kotuparkala? Last year appadi nadandhathu? Pls sollungal......

    ReplyDelete
  4. ================================
    MEDICAL CERTIFICATE IS TO PRODUCED TO THE HEAD MASTER !!
    ================================

    ஆணை பெற்ற தேர்வர்கள்

    மருத்துவரிடம் உடற் தகுதி

    சான்றிதழ் பெற்று தாங்கள்

    பணிபுரியப்போகும் பள்ளி

    தலைமையாசிரியரிடம் பணியில்

    சேரும் தினத்தன்று சமர்பிக்க

    வேண்டும்.

    ReplyDelete
  5. WHEN WILL ADW SELECTION LIST TRB PUBLISH? PLS RPLY?
    WGT:64.33 SC CANDIDATE ANY CHANCE TO COME IN SECOND LIST PAPER1?

    ReplyDelete
  6. Second list councelling mundichadhum announce panna chance iruku..wait pannunga.

    ReplyDelete
  7. thank uuuuuuuuu............
    WGT:64.33 SC CANDIDATE ANY CHANCE TO COME IN SECOND LIST PAPER1?

    ReplyDelete
  8. Sc female 69.05 chance iruka please sollunga 2nd list Varuma adw list vandal counciling date detail pannuvangla please contact us missed call 08491098330

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி