பேஸ்புக் பகிர்வு: 'வீட்டுக்கு வீடு கேமரா வைப்போம்'- கடலூர் காவல்துறையின் கனிவான வேண்டுகோள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2014

பேஸ்புக் பகிர்வு: 'வீட்டுக்கு வீடு கேமரா வைப்போம்'- கடலூர் காவல்துறையின் கனிவான வேண்டுகோள்.



வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம், இதுதான் நமக்கு மிகவும் பரிச்சியமான வாசகம். ஆனால், கடலூர் புறநகர் காவல்துறையினர் வீட்டுக்கு வீடு கேமரா வைப்போம்; குற்றம் நடப்பதை தடுப்போம் என வித்தியாசமான ஒரு பிரச்சாரத்தை துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்து செய்துள்ளனர்.

கஷ்டப்பட்டு சம்பாதித்து சேமித்த நகை, பணம் திருடு போவதை விட தடயம் இல்லாததால் அதை கண்டுபிடிக்க முடியாமல் போவது மிகவும் வேதனையானது என விளக்கமளித்த காவல்துறையினர், பல பவுன் நகை களவு போகாமல் தடுக்க ஒரு பவுன் நகைக்கான பணத்தை செலவு செய்து கேமரா வைக்கலாமே என யோசனை தெரிவித்துள்ளனர். சிந்தித்து செயல்படுங்கள் என மக்களின் சிந்தனையையும் தூண்டி விட்டுள்ளனர் இந்த வித்தியாச பிரச்சாரத்தின் மூலம்.பல்வேறு வழக்குகளில் சிசிடிவி பதிவின் மூலம் குற்றவாளிகளை காவல்துறையினர் பிடித்துள்ளனர். இந்த அடிப்படையில், வீட்டுக்கு வீடு கேமரா பொருத்துங்கள் என்ற வேண்டுகோள் சிலருக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கலாம்.வேறு சிலரோ, செக்யூரிட்டி, சிசிடிவி கேமரா, பீரோக்களில் அலார்ம், சுற்றுச் சுவர்களில் கண்ணாடி துண்டுகள், பெண்கள் கைப்பைகளில் பெப்பர் ஸ்பிரே என தற்காப்புஏற்பாடுகள் விரிந்து கொண்டே செல்கிறதே. பொதுமக்களை காப்பதற்குதான் காவல்துறை எனவும் கேள்வி எழுப்பலாம்.எது எப்படியோ, பேஸ்புக்கில் போகிற போக்கில் கவர்ந்திழுத்த இந்த துண்டு பிரசுரம் வாசிக்க சுவாரஸ்யமானதே.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி