பட்டதாரி ஆசிரியர்கள் கைதாகி விடுதலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2014

பட்டதாரி ஆசிரியர்கள் கைதாகி விடுதலை

ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும். வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

.கடந்த 18-ந் தேதி நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் அன்று கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அவரிடம் கோரிக்கைகளை தெரிவிக்க உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து, முதல்- அமைச்சர் வீடு, தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று காலையில் கூடினார்கள்.

இதையறிந்த போலீசார், அவர்களை அங்கு தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்களை, மைலாப்பூரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் போலீசார் அடைத்து வைத்தனர்.பின்னர், அவர்கள் அனைவரையும் மாலையில் போலீசார் விடுவித்தனர்.

7 comments:

  1. Our Honorable CM is best.......

    ReplyDelete
  2. Appointment order குடுக்க போறாங்களாம். போராட்டம் அம்மாவின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டதா என தெரியவில்லை. Above 90 below 90 என பிரித்து பார்க்காமல் weightage system தை எதிர்த்து அனைவரும் ஒற்றுமையாக போராடலாம் என கூறி இருந்தால் அனைவரும் வந்து போராடி இருப்பர். அம்மாவின் கவனமும் நம்மீது திரும்பி இருக்கும்.
    எந்த weightage system வந்தாலும் அனைவருக்கும் பணி கிடையாது. ஆனால் இந்த முறை மாறும் போது seniorsக்கு பணி கிடைக்க வாய்ப்புள்ளது. சென்ற முறை தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைத்ததால் தேர்ச்சி பெற்றால் பணி என்ற மனநிலையில் இருந்து விட்டோம். அது இல்லை என்றவுடன் நம்மால் அதை தாங்க முடியவில்லை. நாம் கடினமாக படித்தோம். நல்ல மதிப்பெண் பெற்றோம். நமக்கு பணி கிடைக்கவில்லை. கடவுளை நம்புவோம். ( நம்பிக்கை உள்ளவர் மட்டும்) மறுபடியும் படிக்க வேண்டும் என்றால் கஷ்டமாக தான் இருக்கு. என்ன செய்வது. இதற்கு TET exam la fail ஆகி இருக்கலாம் என தோன்றுகிறது. உண்மை நிலையை ஏற்றுகொள்வோம். Prepare for next exam. I am also a unluckly senior candidate .

    ReplyDelete
  3. Appointment order குடுக்க போறாங்களாம். போராட்டம் அம்மாவின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டதா என தெரியவில்லை. Above 90 below 90 என பிரித்து பார்க்காமல் weightage system தை எதிர்த்து அனைவரும் ஒற்றுமையாக போராடலாம் என கூறி இருந்தால் அனைவரும் வந்து போராடி இருப்பர். அம்மாவின் கவனமும் நம்மீது திரும்பி இருக்கும்.
    எந்த weightage system வந்தாலும் அனைவருக்கும் பணி கிடையாது. ஆனால் இந்த முறை மாறும் போது seniorsக்கு பணி கிடைக்க வாய்ப்புள்ளது. சென்ற முறை தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைத்ததால் தேர்ச்சி பெற்றால் பணி என்ற மனநிலையில் இருந்து விட்டோம். அது இல்லை என்றவுடன் நம்மால் அதை தாங்க முடியவில்லை. நாம் கடினமாக படித்தோம். நல்ல மதிப்பெண் பெற்றோம். நமக்கு பணி கிடைக்கவில்லை. கடவுளை நம்புவோம். ( நம்பிக்கை உள்ளவர் மட்டும்) மறுபடியும் படிக்க வேண்டும் என்றால் கஷ்டமாக தான் இருக்கு. என்ன செய்வது. இதற்கு TET exam la fail ஆகி இருக்கலாம் என தோன்றுகிறது. உண்மை நிலையை ஏற்றுகொள்வோம். Prepare for next exam. I am also a unluckly senior candidate .

    ReplyDelete
  4. Muyandraal Mudiyathathu Yendru Yeduvum Illlai , Vungal Porattam Vetri adaya Vazthukkal And Prayer......... Unity is Strength

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி