விரைவில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான ஆலோசனைக் கூட்டம்:ஸ்மிருதி இரானி தகவல. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2014

விரைவில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான ஆலோசனைக் கூட்டம்:ஸ்மிருதி இரானி தகவல.


தேசிய கல்விக் கொள்கையை புதிதாக வகுப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் விரைவில் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற கேசவ் நினைவு கல்வி அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், மாநில அளவிலும், பிராந்திய அளவிலுமாக இந்த கூட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

நவீன காலத்திற்கு ஏற்ற வகையிலும், நமது தேசிய மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்படும் என்று ஸ்மிருதி இரானி கூறினார். தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் 1986-ஆம் ஆண்டு கல்விக்கொள்கை, தேசிய பெருமிதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய ஸ்மிருதி இரானி, புராதன இந்தியாவின் பெருமையை எடுத்துரைக்க வேண்டிய தேவை உள்ளதாகத் தெரிவித்தார்.சர்வதேச அளவில் புகழ்பெற்ற வெளிநாட்டினர் குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும் நமது இளைஞர்கள், நமது நாட்டின் மதிப்புமிக்கத் தலைவர்கள் குறித்து அறிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். மேலும், மத்திய அரசு சார்பில் அடுத்த ஆண்டு, தாய் மொழி தினம் கொண்டாட திட்டமிடப்பட்டு வருவதாகவும் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி