ரூ.ஒரு லட்சம் பரிசுடன் உ.வே.சா. உலகத் தமிழர் ஆராய்ச்சி விருது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2014

ரூ.ஒரு லட்சம் பரிசுடன் உ.வே.சா. உலகத் தமிழர் ஆராய்ச்சி விருது

முத்துப்பேட்டை ரகமத் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் உ.வே.சா. உலகத் தமிழர் ஆராய்ச்சி விருது வழங்கப்படும் என்று அந்த அறக்கட்டளையின் நிறுவனர் எம்.ஏ.முஸ்தபா தெரிவித்தார்.

முத்துப்பேட்டை ரகமத் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவில் அவர் இதை தெரிவித்தார்.அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படவுள்ள உ.வே.சா. உலகத் தமிழர் ஆராய்ச்சி விருது ரூ.ஒரு லட்சம் ரொக்கப் பரிசும், சான்றிதழும் கொண்டது.

                                                                       


இந்த விருதுக்கு உரியவர்கள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் அவர் கூறினார். உ.வே.சா. தமிழ் ஆராய்ச்சி விருதுக்கு நிகழாண்டு தலைப்பு "ஐம்பெரும் காப்பியங்களில், காப்பியமும் தமிழன் வாழ்வியலும்' என்பதாகும். 2015 மார்ச் 31-க்குள் கட்டுரைகளை அனுப்பிவைக்க வேண்டும். தொடர்புக்கு செல்பேசி எண் 9486788776.

இந்த விழாவில், சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழக தமிழத்துறைத் தலைவர் ரெத்தின வெங்கடேசன் பேசியது:
மனிதனின் அடையாளம் அவனது தாய்மொழியாகும். பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் மொழி சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வேற்று மொழி கலப்பில்லாமல் பேசப்படும் நிலையில், தமிழகத்தில் தமிழர்களே புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு பேசப்படுவது வேதனையளிக்கிறது.

வல்லினம் த, மெல்லினம் ம, இடையினம் ழ மூன்றும் சேர்ந்து தமிழானது. அதுபோல மனிதர்களும் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டும்.
ஆசிரியர், மாணவர் உறவுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையும், உ.வே.சாவும். இதில் உ.வே.சா அலைந்து, திரிந்து பல்வேறு நூல்களை பதிப்பித்ததன் காரணமாகவே தமிழுக்கு இன்று செம்மொழி அந்தஸ்து கிடைத்தது என்றார்.

நிகழ்ச்சிக்கு, திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் குமரேசமூர்த்தி தலைமை வகித்தார். நிகழ்ச்சியையொட்டி, மாணவிகளின் கலை, பாடல்கள் நிகழ்ச்சியும், மழைநீர் சேகரிப்பு குறித்த பட்டிமன்றமும் நடைபெற்றன.

அரசு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கும், இலக்கிய நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பள்ளி தாளாளர் எம்.ஏ.முஸ்தபா, சிறப்பு விருந்தினர் முனைவர் ரெத்தின வெங்கடேசன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

6 comments:

  1. நேற்றுத்தான் உ.வே.சா. பங்களிப்பை மேற்றோள்காட்டி விவாதித்தோம். இதோ வந்துவிட்டது சவால். தமிழாசிரியர்கள் உங்கள் தமிழ் மொழியறிவையும் தமிழன் வரலாறு குறித்த பார்வையையும் கட்டுரையாக வடியுங்கள். சுவாரஸ்யம் என்னவெனில் சிலம்பைத்தவிர மற்ற நான்கும் பௌத்த, சமணத்துக்கு மிக நெருக்கமான தொடர்புடையன. தேவார, திருவாசகங்கள் வலியுறுத்தும் சிவ வழிபாட்டிற்கு முற்றிலும் மாறான ஒரு பண்பாடு தமிழனுக்கு உண்டு என்பதை உறுதி செய்வன. ஆராய்ந்து வென்றிட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இதில் கவனிக்கவேண்டிய பகுதி சிங்கப்பூர், மலேசியத்தமிழர்கள் சுத்தமான தமிழ் பேசுகிறார்கள் என்று முனைவர் ரெ.வெ. பேசியிருப்பது. இதை உதாரணங்களுடன் மறுக்கவியலும். அதைக்காட்டிலும் முக்கியமான விஷயம் மலேசியத்தமிழர்களில் அனேகமாக 75-80% மலாயில் சிந்தித்து தமிழில் உரையாடுவார்கள். சிங்கப்பூர்த்தமிழர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் பேசுவார்கள். மேற்கண்ட இரண்டு நாட்டுத்தமிழர்களின் வாக்கிய அமைப்புகள் இதை எடுத்துக்காட்டும். You take care of yourself என்று சிந்தித்து 'நீயே உன்னை சொந்தமா பாத்துக்க' என்று பேசுவார்கள். ஆங்கிலக்கலப்பிற்கும் குறையேதுமில்லை. கீழ்க்கண்ட மலேசியக்காணொளியைப் பாருங்கள். அவர்கள் நடைமுறை வாழ்வில் பேசுவது இப்படித்தான்.
    http://youtu.be/23_ZJ1OEorA

    சிந்திக்கும் மொழியே தாய்மொழி என்ற வகையில் இவர்கள் தமிழ் பேசுபவர்கள் மட்டுமே ஆனால் இவர்கள் தாய்மொழி மலாயோ ஆங்கிலமோ ஆகும். நான் கூடத்தான் வேறு எந்தமொழிக்கலப்புமில்லாமல் ஆங்கிலம் பேசுகிறேன். நான் ஓர் ஆங்கிலேயனா?!

    முனைவர் ரெ.வெ. தன் அறையை விட்டு வெளியே வந்து சிங்கப்பூர்/மலேசியத் தமிழர்களுடன் தமிழில் உரையாடிப்பார்ப்பது நல்லது.

    இன்னொன்று யோசியுங்கள். இவர்கள் அவ்வளவு சுத்தமான தமிழர்களாயிருந்தால் சிறந்த சமகால இலக்கியங்கள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலிருந்தும்தானே வந்திருக்கவேண்டும்? ஏன் இன்றும் தமிழ் பாழ்பட்டுப்போன the so called தமிழ்நாட்டுத் தமிழர்களிடமிருந்தே வருகின்றன? முக்கியக்காரணம் சிங்/மலே தமிழர்கள் வேற்றுமொழியில் சிந்திப்பதுதான். அது எழுத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டுப்போகும்.

    புலம்பெயர்ந்த தமிழர் இலக்கியம் என்று பார்த்தாலும் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா போன ஒரு எஸ்.பொன்னுத்துரையோ, கனடா போன ஒரு அ.முத்துலிங்கமோதான் எழுத்தில் பிரகாசிக்கிறார்கள். சிங்கப்பூர், மலேசியத்தமிழர்களின் தரம் அந்த அளவுக்கு இருந்ததில்லை; இனி இருக்கப்போவதுமில்லை. ஏனெனில் ஐந்தாம் வகுப்புக்குமேல் மலேசியாவில் எங்கும் தமிழ்வழியில் பயிலவழியில்லை. சிங்கப்பூரில் நிலைமை இன்னும் சுத்தம். SINDA (singapore indian development association) என்றொரு அமைப்பை வைத்துக்கொண்டு வீட்டிலாவது தமிழ்பேசுங்கள் என்று கெஞ்சி வருகிறார்கள். சிங்கப்பூர் வசந்தம் செய்தியில் வெளியான ஒரு காணொளியில் இன்று சிங்கப்பூர்த் தமிழ் மாணவர்கள் பேசும் அழகைப்பாருங்கள்.
    http://youtu.be/KIbqOwsKN9E

    ReplyDelete
  3. thank u so much sir pls more post

    ReplyDelete
  4. எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பதறிவு

    ReplyDelete
  5. tamiloum angilamum mattoumea eani namakou muthanmaiyana mouli

    ReplyDelete
  6. கேஸ் போட யாரும் போகாதீங்க பணம் பறிக்கும் வழிகளில் இதுவும் ஒரு தொழிலாக தற்போது நடைமுறையில் உள்ளது . போராட்டம் , உண்ணாவிரதம் , மனு கொடுப்போம் என்ற போன்ற பல trb office ல் , வள்ளுவர் கோட்டம், போன்று இடங்களில் ஒன்று கூடுவோம் என்ற வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் இது என் அனுபவம் . அனைவரும் விழிப்புணர்வு பெறவே இதை கூறினேன் . தவறான நோக்கத்தில் அல்ல .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி