நூறு சத தேர்ச்சி ஆசிரியர்களுக்கு பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2014

நூறு சத தேர்ச்சி ஆசிரியர்களுக்கு பயிற்சி.


தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை நூறு சதவீத தேர்ச்சி அடைய செய்ய, ஆசிரியர்களுக்கு மாநில அளவில் சிறப்பு பயிற்சி அளிக்கபள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

2014--15ல் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில், அனைத்து உயர், மேல்நிலை பள்ளிகளிலும் 100 சதவீத தேர்ச்சியை பெறச்செய்யவேண்டும் என, அரசு இலக்குநிர்ணயித்துள்ளது. இத்தேர்ச்சியை தொட அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளித்து, மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தவும், பொது தேர்வை எவ்வித அச்சம் இன்றி எதிர்கொண்டு, அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைய செய்யவேண்டும் என்பது நோக்கம். இதற்காக, பாட ஆசிரியர்களுக்கு அவர்தம் பாடங்களில் பணியிடை பயிற்சி நடத்தப்பட உள்ளது.

சிறப்பு பயிற்சி: மாநில அளவில் நடக்கும் இப்பயிற்சிக்கு முதன்மை கருத்தாளர்களாக, கல்வி மாவட்டத்திற்கு 10-ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத்தந்த பட்டதாரி ஆசிரியர்கள் 2 பேர்; பிளஸ் 2-வில், தமிழ், ஆங்கிலம்,கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வரலாறு, புவியியல், வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல் ஆகிய பாடங்களில் 100சதவீத தேர்ச்சியை பெற்றுத்தந்த முதுகலை ஆசிரியர்கள் 2 பேர் வீதம், ஆசிரியர்கள் பெயர், மொபைல் எண் விபரங்களை, அந்தந்த மாவட்ட சி.இ.ஓ.,க்கள் சேகரித்து, பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் பயிற்சி பெறும் இவர்கள், மாவட்ட வாரியாக உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.

3 comments:

  1. கல்வித்துறையை கலக்கம் அடையச் செய்த பெருமை இந்த அரசையே சேரும்...

    ReplyDelete
  2. பயிற்சி தேவையில்லை... பணியிடங்களை நிரப்பினாலே போதும் 100% தானா வரும்...

    ReplyDelete
  3. teachersikku payirchi alipathu useless.maanavan manathu vaithu padithalthan result varum.teachers mutalaka illai.sattathitam manavanauku sathagamaga irupathal teachers manavanidam gaigetum suulal ullathu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி