ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2014

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர், கணினி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 2014-2015-ம் கல்வி ஆண்டுக்கான பொதுமாறுதல் (கலந்தாய்வு) அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஆன்-லைனில் நாளை (புதன்கிழமை) காலை 11.00 மணி முதல் நடைபெறும்.

 இந்த பதவிகளுக்கு ஆன்-லைனில் மாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்பித்தவர்கள் மட்டும் ஆன்-லைன் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீர்...
    வேலைவாய்ப்பு பதிவு தேவை இல்லை எனில் அந்த அலுவலகம் எதற்கு?
    வேலைவாய்ப்பு பதிவு அலுவலர்கள் எதற்கு?
    20 முதல் 30 வயது வரை வேலை என்றால், 30 ஆண்டுகளுக்கு
    பி. எட் படித்த மாணவர்கள் நிலை என்ன்?
    இரவு பகலாக டெட் தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி பெற்ற ( 30 வயதுக்கு மேற்பட்ட ) 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோர் கனவு கனல் நீரா?
    எங்களுக்கு உதவா ! தமிழக தலைவர்களே!
    நாங்களும் தமிழன் தானே!.....
    எங்களுக்கு உதவ உணர்வில்லையா/
    உணரவில்லையா?
    தமிழன் வாழ்வு இன்று தள்ளாடுகிறது...
    ஏற்றமும் மாற்றமும் உங்கள் கையில்.
    கடவுளாலும் கை விடப்பட்ட பட்டதாரிகள்
    யார் செய்த குற்றமிது - நாங்கள் தமிழ் நாட்டில் பிறந்தது குற்றமா?
    வளர்ந்தது குற்றமா? நாங்கள் தமிழ்நாட்டில் படித்தது குற்றமா?
    ஆட்சி மாறுகிறது -5 ஆண்டுகளில்
    காட்சி மாறுகிறது - எங்கள்
    வளர்ச்சி ( வயது) மாறுகிறது.
    இத்தனை காலம் வேலைதராதது - யார் குற்றம் ?
    நல்லவர்களே! கேளுங்கள் , நாங்களும் தமிழர்கள்தான்.
    தட்டிப்பறிப்பது எங்கள் வேலையை மட்டுமல்ல!
    எங்கள் வாழ்வும் தான்!
    மனிதர்களை தரத்தால் பிரித்து கடவுள் கொடுத்த
    வரத்தையும் தடுத்து விட்டீர்கள்! - ஏன்
    கடவுளாளும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள்.
    இந்த நிலையும் மாறும்......
    காலம் பதில் சொல்லும்...
    எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....
    அம்மா...
    நாங்களும் உங்கள் பிள்ளை தான்......

    ReplyDelete
    Replies
    1. மணி சார் ஒரு விளம்பரம் தான் நான் உங்கள் தளத்துக்கு புதியவன்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி