டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிய தலைவர் எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2014

டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிய தலைவர் எப்போது?


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிய தலைவர் நியமனம்குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ஊழியர்களும், தேர்வர்களும் உள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த ஏ.நவநீதகிருஷ்ணன், மாநிலங்களவை இடைத் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பொறுப்பை கடந்த ஜூன் மாதம் அவர் ராஜிநாமாசெய்தார். இதன்பின், தலைவர் பொறுப்பை டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராகஉள்ள பாலசுப்பிரமணியன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

தலைவர் நியமனம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை திறம்பட செயல்படுத்தும் நபர் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஊழியர்களும், தேர்வர்களும் முன்வைக்கின்றனர்.புதிய தலைவர் தேர்வு செய்யப்படாமல் இருப்பது, குரூப் 2 போன்ற முக்கிய தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதில் தாமதத்தை ஏற்படுத்துவதாகவும், விரைவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டால் பணிகள் தொய்வின்றி விரைந்து நடைபெற வாய்ப்பு ஏற்படும் என்று தேர்வாணைய வட்டாரங்கள் கூறுகின்றன.இது குறித்து, அரசுத் துறை வட்டாரங்களிடம் விசாரித்த போது, டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான உரிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி