தேர்வு விதிமுறைகளுக்கு பிறகு சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2014

தேர்வு விதிமுறைகளுக்கு பிறகு சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது.


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுஇன்று நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 81,000 பேர் பங்கேற்கின்றனர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி. எஸ்.சி.) சார்பில் ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ், ஐ.பி. எஸ், ஐ.ஆர்.எஸ், உள்ளிட்ட 24 உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்தி வருகிறது. இத்தேர்வுக்காக ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முதல்நிலை தேர்வு இன்று நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை (145 மையம்), மதுரை (31 மையம்), கோவை (22 மையம்) ஆகிய 3 நகரங்களில் மொத்தம் 198 மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வை சுமார் 81, 052 பேர் எழுத உள்ளனர். சென்னையில் 61,003 பேரும், மதுரையில் 9704 பேரும், கோவையில் 10,345 பேரும் தேர்வு எழுதுகின்ற னர். சென்னை கோடம் பாக்கத்தில் உள்ள பதிப்பக செம்மல் கே.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பார்வை திறன் குறைபாடு கொண்ட 309 பேருக்காகதனியாக தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.இன்று நடக்கும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு விதிமுறைகளில் சில சட்ட திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள் ளது. இந்த திருத்தங்கள் தொடர்பான அறிவிப்பை யும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

3 comments:

  1. MEETING IN CHENNAI !!

    ஆசிரியர் காலிப்பணியிட

    ஆய்வுக்கூட்டம் சென்னையில்

    ஆக.,26ல் நடக்கிறது!!

    ReplyDelete
    Replies
    1. Rajalingam paper&TV la varunum aasai pattu Chennai la irrukkeratha sonnargal ,
      Entha TV la vara
      1.pogo TV
      2.sutti tv
      3.animal plant
      4.national geo
      5.discovery
      Tell me

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி