கலந்தாய்வு குறித்த சில விளக்கங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2014

கலந்தாய்வு குறித்த சில விளக்கங்கள்.

தெரிவுப் பட்டியலில் இடம் பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.அதோடு விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடவும் வாழ்த்துக்கள்.

ஏற்கனவே DTED படிப்பதற்காக கலந்தாய்வில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு இதைப் பற்றிய முன்னறிவு இருக்கும் அதே நேரத்தில் கலந்தாய்வு குறித்து மேலும்  சில விளக்கங்களை  எழுதுவது  நாளை கலந்தாய்விற்கு செல்லும் PG நண்பர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் சிறிது தெளிவை உண்டாக்கும் என நினைக்கிறேன்.

1) கலந்தாய்வு தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் onlineவாயிலாக நடைபெறும்.கலந்தாய்வு நடைபெறும்இடத்திற்கான பட்டியல் http://www.kalviseithi.net/2014/08/tet-pgtrb-counseling.html என்ற வலைத்தள முகவரியிலுள்ளது.

2) BV இடம் பெற்றவருக்கு முதலில் அதனை தொடர்ந்தே CV இல் இடம்பெற்றவருக்கு பின்பும்பள்ளியைத் தேர்ந்தெடுப்பதாற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்பது தவறு.கலந்தாய்வில் மாவட்ட அளவில் weightage தரவரிசை அடிப்படையிலேயே நடைபெறும்.

3)  விண்ணப்பத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள நிரந்தர முகவரிக்கு உரிய மாவட்டத்திலேயே உங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

4) நீங்கள் உங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளியைத்  தேர்ந்தெடுக்க விரும்பவில்லையென்றால் பிற மாவட்டங்களைத் தேர்ந்தெடுக்க மறுநாள் வாய்ப்பு அளிக்கப்படும்.

5) கலந்தாய்விற்கு செல்லும் பொழுது தேர்வு நுழைவுச் சீட்டு( Exam hall ticket), சான்றிதழ் சரி பார்த்தலுக்கான அழைப்பு கடிதம்(CV call letter), தெரிவுப் பட்டியலில் இடம் பெற்றதற்கான சான்ற( selection list copy of you),உண்மை சான்றிதழ்கள்.( original certificates) மற்றும் சிறிய அளவிலான புகைபடங்கள்(passport size photo)கொண்டு செல்லுதல்  உதவிகரமாக அமையும்.

6)மேலும் பிற மாவட்டத்தினை தேர்வு செய்ய இருப்போர் கையில் தமிழக வரைபடமும்,மாவட்ட வாரியாக தெரிந்த நண்பர்களின் தொலைபேசி எண்ணை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

7)கலந்தாய்வு போது Computer முன் உங்களுக்கான இடத்தினை காண்பித்து உடனாடியாக தேர்ந்தெடுக்க நேரிடும்.எனவே முன்னதாகவே 2,3 மாவட்டங்களை தேர்வு செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

8)மேலும் நமக்கு நாமே உதவிக்கொள்வோம்...என்ற கல்விச்செய்தி இணைப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

9)கலந்தாய்வு போது உடன் ஒருவரை அழைத்துச்செல்லலாம் எனவே பதட்டம் இன்றி உங்களுக்கான சரியான இடத்தை தேர்வு செய்யுங்கள்.

வழக்குகளின் நிலை. 
வரும் 01/09/2014 திங்கள் கிழமையன்று அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு வருகிறது.ஆனால் அவ்வழக்கினால் எவ்வித மாற்றமும் வராது என இறைவன்மீது நம்பிக்கை கொள்வோம்.

தேர்ந்தெடுத்த பள்ளியில் உங்களது முழுத்திறமையினையும் காட்டுங்கள்.மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுங்கள்.பணிசிறக்க கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்.

69 comments:

  1. I will see u on counl thankr sir

    ReplyDelete
    Replies
    1. சம்பளம் பேங்கல போடுவாங்களா கைல குடுப்பாங்களா.சம்பளம் அடுத்தமாசம் கொடுத்துடுவாங்களா யாராவது தெரிந்தால் கூறுங்களேன்

      Delete
    2. Good evening sir,
      I viewed the place . Please tell the source of the councelling venue . Because I haven't received any INTIMATION FROM CEO of any other. Please reply Admin.

      Delete
    3. Government will credit salary in your account, even if you join in 20th of this month, 10 days salary will be credited in your account, if you join in 8th of this month you receive 23 days salary,
      aprom ore treat thaan, enjoy
      schoolla students konjam iruppaanga avangalayum appappo konjam paathukonga

      Delete
    4. anyone pls reply fr this i have doubt . actually im dindigul district. when we had a tet exam i was in madurai so i wrote madurai address in application and i had written an exam at madurai also. where i have to go fr counselling to madurai or dindigul? pls anyone clear my doubt im in confusion pls pls reply

      Delete
    5. Hai. Any one have Theni dist. Paper 1.Topers details. If u have pls send to this mail. beautyking29@gmail.com

      Delete
  2. Mani sir, paper 1 remining posting any news plz share???????..???.????

    ReplyDelete
    Replies
    1. இதுவரை அது குறித்த எந்த தகவலுமில்லை.ஆனால் விரைவில் அதுவும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

      Delete
    2. mani nan trb ku phone panni kettan anal avargal ethu pattri ethuvum triathunu solitanga............but thena mani il monday poduvathga soli irukerargal pakkalam............

      Delete
  3. I will see u on counl thanks sir

    ReplyDelete
  4. மணியரசன் நண்பரே. ..
    74, 75 மதிப்பெண் எடுத்தும் வேலை கிடைக்கவில்லை. . எங்களுக்காக எழுத உங்கள் பேனா முன் வரவில்லையா?
    எங்கள் கண்ணீர் கதையை உங்கள் பேனாவிடம் கூறுங்கள். மை இல்லாமல் கண்ணீராலேயே எழுதும். .
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களது வருத்தத்தை என்னால் மிகத் தெளிவாக உணர முடிகிறது.

      பட்டதாரி ஆசிரியர்களை விட இடைநிலை ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் நிலை மிக மோசம்.அதிலும் குறிப்பாக BC,MBC விண்ணப்பதாரர்கள் மிக கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

      பெயரளவில் 1650 காலிப் பணியிடங்கள் நிரப்பப் பட்டாலும் BCமற்றும் MBC தேர்வர்களுக்கு ஒதுக்கப் பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 350 கூட தாண்டாது.இதில் உள் ஒதுக்கீடு,பெண்களுக்கான ஒதுக்கீடு வேறு.

      bc,mbc ஆண் தேர்வார்களின் எண்ணிக்கை மொத்தம் 200 ஐ கூட தாண்டாது.

      6 மாத கால கடுமையான உழைப்பு அதன் பிறகு சவால் நிறைந்த வெற்றி அதனைத் தொடர்ந்த பல சோதனைகள் ஓராண்டுகால காத்திருப்பு இந்த துன்ப நிலைகள் யாவையும் கடந்த பின்பு TET தேர்வின் இறுதியிலும் மிக துன்பமான முடிவு.

      தாள் 110 மதிப்பெண் எடுத்த BC பிரிவை சேர்ந்த பல ஆண்களுக்கு பணி கிடைக்கவில்லையே. 110 மதிப்பெண் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல.மிக அதிகமான அற்பணிப்பு உணர்வு தேவை.

      TET தாள் 1 இன் முடிவு பலருக்கு பலவற்றின்( No explanation) மீது பலபேரது மீது மிகுந்த கசப்பான உணர்வை உண்டாக்கிவிட்டது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

      கடந்த 2012 தேர்வின் போது 10,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு கிட்டதட்ட தேர்வில் வென்ற அனைவரும் பணி பெற்ற சூழல் இருந்த பொழுது 2013 இல் வெற்றி பெற்றவருக்கு இந்த மோசமான முடிவை இறைவன் ஏன் தந்தான் என்று நீங்கள்தான் அவனிடம் கேட்க வேண்டும்.

      உங்களின் மிக ஏமாற்றமான இந்த முடிவிற்கு என்னால் எந்த வித பிராயசித்தமும் செய்ய முடியாது.

      அப்படி ஏதேனும் ஒன்று உண்டு என்று நீங்கள் நினைத்தால் சொல்லுங்கள் நிச்சயம் செய்கிறேன்.நீங்கள் சொல்ல போகும் அந்த செயல் Article எழுதுவதுதான் என்று சொன்னால் நிச்சயமாக அதன் மூலம் எந்த மாற்றமும் உங்கள் வாழ்வில் ஏற்பட்டுவிடாது.

      நண்பர்கள் சிலர் என்னை தவறாக புரிந்து கொண்டுவிட்டனர்.மணியரசன் மாறி விட்டார் என்று comment எழுதுகிறார்கள்.நிச்சயம் நான் எந்த வகையிலும் மாறவில்லை.எப்பொழுதும் போல்தான் இருக்கிறேன்.

      நான் இறுதிப் பட்டுயலில் இடம்பெற்றதையோ அல்லது வருகிற 03/09/2014 அன்று கலந்தாய்வு இருப்பதையோ எனது குடும்பாரிடம் கூட இன்னும் சொல்லவில்லை.ஆனால் கல்விச்செய்தியை எனது ஊரைச் சேர்ந்த சிலர் பார்த்துவிட்டு எனது எனது குடும்பத்தாரிடமும் ஊரிலும் பரவ செய்துள்ளனர்.ஆயினும் அவர்கள் கேட்கும் கேட்கும் கேள்விகளுக்கு எனது பதில் "காத்திருங்கள் சொல்கிறேன்" என்பதே.

      "கடின உழைப்பு வீண் போகாது" என்ற மிகத் தேய்ந்து போன பழமொழியையே நானும் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.ஆனால் நான் அனுபவத்தின் மூலம் சொல்கிறேன்.அந்த அனுபவத்திற்கு விளக்கம் எழுத வேண்டுமென்றால் பல பக்கங்கள் இடம் பெரும்.

      பெற்றோர் மற்றும் கடவுளின் ஆசீர்வாதத்தோடு மீண்டும் கடின உழைப்பை செலுத்துங்கள்.விரைவில் வாழ்வின் உச்சத்தை எட்டுவீர்கள்.

      Delete
    2. Councelling நடைபெறும் எங்கிருந்து From which official websie பெறப்பட்டது? Please reply

      Delete
    3. உங்களது பதிலை நான் எனது தன்னம்பிக்கைக்கு உரமாக்கிக்கொள்கிறேன்.
      எங்களுக்காக இரக்கம் கொண்ட தன்மை ஒரு தமிழாசிரியரின் உண்மையான வெளிப்பாடு. . நீங்கள் தமிழ் ஆசிரியரே..

      Delete
    4. புதிதாக அரசுப்பணியில் சேரும் அணைத்து ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். அரசுப்பள்ளியை தனியார் பள்ளிகளை விட உயர்வாக போற்றும் அளவுக்கு உங்கள் பணி இருக்க வேண்டுமாய் என் முதல் கோரிக்கை. அதோடு உங்களுக்கு பின் அரசுப்பணிக்காக காத்திருக்கும் எங்களுக்கும் வாய்ப்புகளை வழங்க உங்கள் அருகாமையில் உள்ள மாணவர்களை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும். உங்களுக்குப் பின் நாங்களும் உங்களை போல பின்பற்றுவோம்.

      செய்திகளை உடனுக்குடன் வெளியிடும் கல்விசெய்திக்கும் அதில் மிகப்பெரும் பங்களிப்பாக விளங்கும் மணி ஸ்ரீ போன்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..

      அதே நேரம் மிகச்சிறிய வித்தியாசத்தில் வாய்ப்பை தவறவிட்ட ஆசிரியர்கள் மனம்தளராமல் கூடுதல் பணியிடங்கள் அறிவிக்க அரசுக்கு நாம் கோரிக்கை வைப்போம்.

      நன்றி,
      கருப்புசாமி 7200670046

      Delete
    5. எத்தனை காரணங்கள் கூறினாலும் 2வது பட்டியல் வருகிறது. 3000 போஸ்ட்ங் என்றெல்லாம் எழுதிவிட்டு கடைசியில் உங்கள் துருதிஷ்டம் என்ற உங்கள் வார்த்தை சுட்ட இதயங்கள் பல... காலம் பதிலளிக்கும் நண்பரே. வெற்றி எங்களை விட்டு விலகி இருக்கிறது. கருத்து வேறுபாடு இருப்பினும் உங்கள் பணி அறப்பணியாக சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

      Delete
    6. velaipithan நண்பரே..நான் 74 weightage பெற்று.ம் எனக்கு என் தாய் மண்ணில் வேலை இல்லை. .
      திறமைக்கு எங்கும் மதிப்புண்டு..
      நான் இன்றும் இந்த அரசாங்க சம்பளத்தை விட அதிகமாகவே பெற்றுவருகிறேன்.
      என்னுடைய எண்ணம் என்
      மண்ணில் பணியாற்றுவதே,,,
      74 weightage _ no job .
      Semacomedy

      Delete
    7. சத்யஜித் நண்பரே நான் உங்கள் முன்னோடி. என்னைப் போல் ஒருவன் மிக்க மகிழ்ச்சி. தோல்வியால் துவண்டோமல்லர்.. வெற்றி வாகை சூடும் மறக்குடியர்.. நாம். உங்கள் எண்ணம் ஈடேறும் எனது வாழ்த்துகள்.

      Delete
  5. .அதோடு விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடவும் வாழ்த்துக்கள்."ஒரு அழுத்தம் "தெரிகிறதே.தாங்கள் மதவெறியரோ.

    ReplyDelete
    Replies
    1. சுயநலவாதி மணி இதற்கு அர்த்தம் சொல்லு...நீயெல்லாம் நடுநிலையானவனா சொல்லு....

      Delete
    2. உன்னைப் போன்றவனுக்கு பதிலெழுத என் .................. கூட உத்வேகம் பெறாது.

      Delete
    3. deepavali, cristmas,pongal,ramzan , sadurthipondrea indiya vilakkaluku valthu solbovargal madaveriyara? enna koduma sir.

      Delete
    4. மணியரசன் சார் உங்கள் வருத்தம் குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த ஆசிரியர் களுக்கு மட்டும்தானா GT ல் அணைத்து பிரிவினர்களுடனும் போட்டி போடமுடியமை , தனி ஒதிக்கீடு இல்லாமல் கண்ணை மூடி கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும் OC பிரிவினரின் உருவம் தோன்றவில்லையோ ? அவர்களின் லட்சியம் , அவர்களின் துன்ப நிலை தங்களுக்கு தெரியவில்லையா ?

      Delete
    5. ungal nilayai naan ariven ,naanum oc quata,last yearil oc enpathal pgt chance miss aanathu,intha yearil pg tet paper2 pass muyarchi mattume thunai

      Delete
  6. ADW போஸ்ட்டிங் சேர்த்து போடடுங்கள் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களே. எங்களுக்கும் வாழ்க்கை கொடுங்கள்.

    ReplyDelete
  7. I too vpm. So no need attested in any xerox copy. Please clear doubt sir

    ReplyDelete
  8. ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நமக்கு ஆறுதல் சொல்ல நம்மை தவிர எவரும் இல்லை,.

      Delete
    2. Ungalukku future undu friends, don't worry

      Delete
    3. Bugal sir aruthal vendam.namaku thevai in um hard work

      Delete
    4. கடவுள் ஒவ்வொரு வேண்டுதலுக்கும் இல்லை என்று ஒரு போதும் கூறியதில்லை
      1.தருகிறேன்
      2.இப்போது இல்லை
      3.வேறொன்று தருகிறேன்
      என்ற பதில்களை மட்டுமே தருகிறார்.

      Delete
  9. நாளை கலந்தாய்வு செல்லும் நண்பர்களே முறையான அழைப்பு கடிதம் ஏதும் பெற்றீர்களா

    ReplyDelete
  10. paper 1 adi dravida school list 669 posting list monday poduvathaga solierukerarkal.....................nampikaiga irungal...nanpargalea......nan .50 il vaipai thavara vitutan........any paper 1 sc community pls contact 9585802036

    ReplyDelete
    Replies
    1. Sir ninga sonnathu unmaiya sir.monday kandipa ethir parkalama sir.en wife 0.19 la miss panitanga sir.pls reply me sir.sc candidate than sir.

      Delete
    2. second list take some more time because they give first choice for school education department after remaining department may be second list surely takes more than one month .
      because always corporation school appointment and school education department nearly more than three months its government procedure.because my brother working in Chennai corporation school so i am telling you friends

      Delete
  11. Maniarran sir PG&BT erantilum select anavarkal PG select panu patchathil BT Vacancy fill panna vaipu ullatha reply please

    ReplyDelete
  12. eallurm readya irunga eangala asaikati mosam panuna mathiri ungalaum panaporanga next monthla nenga ealurum poratam panuvenga.court eallathaum mataha poguthu.wait and see

    ReplyDelete
    Replies
    1. அது என்னவோ உண்மைதான்.சீனியர்கள் பாதிப்படைவதை ஒருபோதும் ஏற்கமுடியாது

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  13. palani m ethu enudaia num9585802036 pls call

    ReplyDelete
    Replies
    1. KARPOORA சார் தினமணி பேப்பர் ல வியாழன் or திங்கள் அன்று adw dep list விடறதா போட்டாங்க சார் .அதன் பிறகு எந்த தகவலும் இல்லை சார் .notification விட்ட trb selection list விட்டு தான் ஆக வேண்டும்.பொருத்து இருப்போம் .list வர வில்லை என்றல் நேரடியாக trb கு சென்று விசாரிக்கலாம் சார் .

      Delete
  14. Any one rely , sep 3 attand panninavanga sep 4 other dist Ku strand pan a mudiuma becoz my native & nowdays dist r various

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் செப் 3 எந்த பணியிடமும் தேர்வு செய்யவில்லையெனில் செப் 4 அல்லது 5 மாநில தர வரிசைப்படி மற்ற மாவட்ட கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

      Delete
    2. sir. please SC MATHS WTG 64.25 AND ABOVE IRUKKUM CANDICATE UPLOAD HERE.MATHS LAST CUTOFF 64.44. SO, PLEASE SOLLUNGA SIR

      Delete
  15. pavi sir salary bank acc poduvanga but muthlla order varattumsir piragu edaipattri yosikkalam

    ReplyDelete
  16. சென்னையில் மாபெரும் பேரணி....

    பாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    கோரிக்கைகள்
    1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..

    2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..

    3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...

    இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...

    முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
    இப்படிக்கு
    பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு....
    Contact :
    Rajalingam Puliangudi-
    95430 79848
    Selladurai - 9843633012
    Paramanantham - 98428 74329
    Kapilan - 909201 9692

    ReplyDelete
    Replies
    1. sir pass panavangluku next appointment la 1st preference kuduka solunga plsss.. yelaruku sethi poradunga

      Delete
    2. dear rajalingam sir idharku melum GO and 5% relaxation case endha maatrathaiyum thara poovadhilai . indha tet 2013 il vetri petravargalukku adutha niyamanathil munnurimai vendiyum alladhu posting increase vendiyum poradalam(this is my personal openion) by TET PASSED BUT NOT SELECTED UNLUCKY TEACHER

      Delete
  17. I am maths my wgt 63.28 bc and ph any chance for second list plz Yaravathu sollunga first list la 0.96 mark ph koottavula enaku job kidaikala plz tell me sir

    ReplyDelete
  18. Mani arasan sir plz tell me sir second list la bc ph ku evvalavu vacant

    ReplyDelete
  19. ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன்இறந்து விட்டான்.அவன் அதை உணரும் போது கையில்ஒரு பெட்டியுடன்கடவுள் அவன் அருகில் வந்தார்.கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கானநேரம்நெருங்கி விட்டது......."ஆச்சரியத்துடன் மனிதன்"இப்பவேவா?இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடையதிட்டங்கள் என்ன ஆவது?""மன்னித்துவிடு மகனே........உன்னைக்கொண்டு செல்வதற்கானநேரம் இது.........""அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?""உன்னுடைய உடைமைகள்.........""என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடையபொருட்கள், உடைகள், பணம்,.............?""இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........அவை பூமியில் நீ வாழ்வதற்கானது.........""என்னுடைய நினைவுகளா?.............""அவை கண்டிப்பாகஉன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........""என்னுடைய திறமைகளா?...........""அவை கண்டிப்பாகஉன்னுடையது கிடையாது.........அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது.......""அப்படியென்றால் என்னுடைய குடும்பமும்நண்பர்களுமா?......""மன்னிக்கவும்...........குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கானவழி..........""அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?""உன் மனைவியும் மக்களும்உனக்கு சொந்தமானது கிடையாது.........அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............""என் உடல்?...........""அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று.........""என் ஆன்மா?""இல்லை........அது என்னுடையது.........."மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்துஅந்தப்பெட்டியை வாங்கி திறந்தவன்அதிர்ச்சிக்குள்ளாகிறான்........காலி பெட்டியைக் கண்டு..........கண்ணில் நீர் வழிய கடவுளிடம்"என்னுடையது என்றுஎதுவும் இல்லையா?" எனக் கேட்க,கடவுள் சொல்கிறார்,"அதுதான் உண்மை. நீவாழும்ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாகவாழ்வதுடன்,நல்ல செயல்களை மட்டும் செய்.எல்லாமே உன்னுடையது என்று நீநினைக்காதே........"* ஒவ்வொரு நொடியும் வாழ்* உன்னுடைய வாழ்க்கையை வாழ்மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......* அது மட்டுமே நிரந்தரம்.......* உன் இறுதிக் காலத்தில் நீ எதையும்உன்னுடன்கொண்டு போக முடியாது.............

    ReplyDelete
    Replies
    1. மிக அருமையான கருத்து கொண்ட சிறுகதை நண்பரே.

      Delete
    2. எவ்வித மாற்றமும் வராது enpathey நிலை

      Delete
    3. mataram eanpathay nilaiyanathu.wait an see

      Delete
    4. yanai irunthalum aaiyeram ponnu , iranthalum aaiyeram ponnu ,
      enna irukkum pothu mattravarkalukku nam mithu sirithu mariyathi um , payamum irrukkum enpathey நிலை நண்பர்களே

      Delete
  20. Maniyarasan sir enaku job kidaikuma second list la

    ReplyDelete
  21. மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  22. விண்ண்ப்பத்தில் அஞ்சலக முகவரி மட்டுமே கேட்கப்பட்டிருந்தது. நிரந்தர முகவரி கேட்கவில்லையே?

    ReplyDelete
  23. DEAR FRIENTS என்னுடைய சொந்த மாவட்டம் திருவாருர் , நான் தேர்வெழுதியது காஞ்சிபுரம் மாவட்டம்,சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தது காஞ்சிபுரம் மாவட்டம் , எனக்குறிய கலந்தாய்வு மாவட்டம் எது? நான் முதல் நாள் எங்கு செல்ல வேண்டும்.தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்......

    ReplyDelete
    Replies
    1. mr.குட்டிதுரை ஹால் டிக்கெட் address ல் உள்ள மாவட்டதிற்கு செல்ல வேண்டும். எதற்கும் ஒரு நாள் முன்பு சென்று உறுதிப் படுத்திக் கொள்ளவும்.

      Delete
  24. counselling mudinthu paniyil eppothu join panna vendum? any idea?

    ReplyDelete
  25. VILLUPURAM DT HISTORY TET SELECTED CANDIDATE SEND UR DETAIL TO MY ID myamma12345@gmail.com

    ReplyDelete
  26. COUNSILING- IL "PH TEACHER" KU FIRST PREFERENCE KODUPANGALA?

    ReplyDelete
  27. Sir hall ticket miss pannite. Cv call letter um illa. Trb web site la varala. Na ennatha panrathu

    ReplyDelete
    Replies
    1. EPPADEENGA IPPADILLAM IRUKKA MUDIUTHU.............?TEACHER VELAIKU POI ETHAIUM MISS PANNIRATHEENGA.....MADAM

      Delete
  28. sir. please SC MATHS WTG 64.25 AND ABOVE IRUKKUM CANDICATE UPLOAD HERE. LAST CUTOFF 64.44. SO, PLEASE SOLLUNGA SIR

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி