சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2014

சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?





ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.

* அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.

* இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.

* பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.

* இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
* சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

* பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.

* மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

* அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.

* சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

* இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்.

15 comments:

  1. Replies
    1. மாணவ மாணவிகளின் குடும்ப சூழ் நிலை காரணமாகவோ சுய சம்பாத்தியத்திற்க்காகவோ தனியார்களிடம் வேலை கேட்டு செல்கிறார்கள். மாணவ மாணவிகளின் சான்றிதழ்களை கட்டயமாக சிலர் வாங்கி வைத்துக்கொள்கின்றனர்.
      வேலை பிடிக்கவில்லை என்றோ சரிவரவில்லை என்றோ வேறு வேலைக்கு செல்லவிரும்பினால் சான்றிதழ்களை திரும்ப தருவதில்லை. சில மாணவ மாணவிகள் கேட்க பயந்து அங்கேயே விட்டு வந்துவிடுகிறார்கள்.
      இது போன்றவர்களிடம் சான்றிதழ்களை திரும்ப பெற என்ன செய்யவேண்டும்.? தர மறுப்பவர்களை என்ன செய்வது..?
      கொஞ்சம் விவரமாக மாணவ மாணவிகளுக்கு ''கல்விசெய்தி '' அறிவுறுத்துமா..?

      Delete
  2. அவசர தேவைக்கு CCM சாண்றிதழ் உடனடியாக சென்னை சென்று பெற்றுக் கொள்ளலாம். மாற்று சாண்றிதழ் கிடைக்கும் வரை CCMஐ பயன் படுத்திக் கொள்ளலாம்

    ReplyDelete
  3. Sre sir என்னுடைய dted grade sheet தொலைந்துவிட்டது எவ்வாறு பெறுவது??

    ReplyDelete
    Replies
    1. Dted grate marksheet kku ccm kitaiyathu duplicate mattume vangamutiyum

      Delete
  4. அவசர தேவைக்கு CCM சாண்றிதழ் உடனடியாக சென்னை சென்று பெற்றுக் கொள்ளலாம். மாற்று சாண்றிதழ் கிடைக்கும் வரை CCMஐ பயன் படுத்திக் கொள்ளலாம்

    ReplyDelete
    Replies
    1. AAS Sir, counselling inpothu nam enna certificates kondu sella vendum?
      Ippothu naam yenna enna certificates vangi vaipathu?

      Delete
  5. பயனுள்ள செய்தி நன்றி ஶ்ரீஶ்ரீ அவர்களே

    ReplyDelete

  6. காப்பி அடித்ததால் அதன் உரிமையாளர்களுக்கு நன்றி கூற வேண்டும்...
    அப்படி கூறவில்லை என்றால் அதற்கு........?


    http://goo.gl/jD04Mr

    ReplyDelete
    Replies
    1. உறுதியாக இது தினகரன் செய்திதான்... ஆனால் முழுக்க அவர்களுடையது அல்ல.. சரவணன் அவர்களின் பதிவு... அதனுடன் ஒரு படம் சேர்ந்து அங்கு வந்துள்ளது... ஆனால் அங்கே பெயரில்லை இருந்திருந்தால் அதையும் சேர்த்து கொடுத்திருப்பேன்...

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. ஐயா எனது மாணவி குடும்ப சூழல் காரணமாக கல்லூரியை பாதியில் நிறுத்தினார் ( 6 மாதம்).கல்லூரியில் சென்று சான்றிதழ் கேட்டால் தர மறுக்கின்றனர் .தரவேண்டும் எனில் 3 வருட கட்டணம் கேட்கின்றனர் . பணம் இல்லாத காரணமாகத்தான் படிப்பை பாதியில் நிறுத்தினார்.பணம் இருந்தால் படித்திருக்க மாட்டாரா? 1067 மார்க் +2 வில் எடுத்தார் BSC சேர்ந்த்து படித்தார் . அவர் சான்றிதழ் பெற என்ன செய்ய வேண்டும் தயவு செய்து தெரியப்படுத்தவும். நன்றி ஷ்ரி அவர்களே.

    ReplyDelete
  9. how to get genuineness for sslc & HSCஎவ்வாறு பெறுவது??

    ReplyDelete
  10. Sir என்ன தீர்வு .யாரிடம் அணுகலாம் தயவுசெய்து சொல்லுங்கள் .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி