ஆங்கிலவழிக் கல்விக்கு தனி ஆசிரியர்கள் தேவை? கல்வி அதிகாரிகள் நிராகரிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2014

ஆங்கிலவழிக் கல்விக்கு தனி ஆசிரியர்கள் தேவை? கல்வி அதிகாரிகள் நிராகரிப்பு


'ஆங்கில வழிக்கல்விக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்' என்ற கோரிக்கை, தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளி ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது. ஆனால், தனிஆசிரியர்கள் தேவை இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாநிலத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில், கடந்தாண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளிலும் துவங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 1,141 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.கோவையில் கடந்த இரு ஆண்டு களில், 249 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலவழி அறிமுகம் செய்யப்பட்டது; 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

நடப்பு 2014--15ம் கல்வியாண்டில் புதிதாக, 92 பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி துவங்கப்பட்டது; 5,800 மாணவர்கள் படித்து வருகின்றனர்.ஆங்கில வழிக்கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துவரும் நிலையில், இதற்கென தனி ஆசிரியர்கள்நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களே, கூடுதலாக ஆங்கில வழிக்கல்வி ஆசிரியர்களாகவும் பணியாற்ற வேண்டியுள்ளது. ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளில், சில ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் போதிய அனுபவம் இல்லாததால், ஆங்கில வழிக்கல்வி தடுமாறுகிறது. இதனால், மாணவர்களுக்கு போதுமான கல்வியை எடுத்துச்செல்ல முடிவதில்லை.

இதனை தவிர்க்க, ஆங்கிலம் படித்த தனி பட்டதாரி ஆசிரியர்களை அரசு நியமிக்கவேண்டும்' என்றார். ஆனால், அதிகாரிகள் தரப்பில், இந்தகோரிக்கை அவசியமற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரியிடம் கேட்டபோது, ''ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கப்படும் பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்;ஆட்கள் பற்றாக்குறை இல்லை. ஒவ்வொரு பள்ளியிலும் ஆங்கிலம் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், எவ்வித சிரமமும் இல்லை. ஆசிரியர்களுக்கும் ஆங்கிலம் பயிற்றுவிப்பு குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக முன்னேற்றம் காணப்படும் என்பதால், தனி ஆசிரியர்கள் நியமிக்க அவசியமில்லை,'' என்றார்.

6 comments:

  1. 2ND LIST EXPECTED CANDIDATES ., PLS. ORGANISE TO PROPOSE 2ND LIST

    FOR TRB NOTIFICATION ., WE ARE GETTING THE JOB FOR HAIRLINE INTERVEL CAP.,

    AND SO., WE PROPOSE TRB TO PUBLISTH THE 2ND LIST ANNOUNCEMENT FOR THE

    VACANCY OF 2031 SCHOOLS (KALLAR MBC SCHOOLS, AD, SC SCHOOLS, 3 CORPORATION SCHOOLS ) PLS. ANNOUNCED 2ND LIST.,

    ReplyDelete
    Replies
    1. MR. SATHEESH KUMAR SATHEESH SIR MADRUM UNNAVIRATHIL KALANDHU KONDIRUKKUM ANAIVARUKKUM

      UNNAVIRATHAM VETRI ADAYA VALTHUKKAL., UNGALIN MUYARCHIKKU NICHAYAM PALAN KIDAIKKUM DEAR FRIENDS.,

      Delete
  2. MR. SATHEESH KUMAR SATHEESH SIR MADRUM UNNAVIRATHIL KALANDHU KONDIRUKKUM ANAIVARUKKUM

    UNNAVIRATHAM VETRI ADAYA VALTHUKKAL., UNGALIN MUYARCHIKKU NICHAYAM PALAN KIDAIKKUM DEAR FRIENDS.,

    ReplyDelete
  3. உண்ணாவிரதம் வெற்றி அடைய வாழ்த்துகள் நண்பர்களே.

    ReplyDelete
  4. Muthugalai asiriar kavanathirku!..Economics tamil medium eruthi thervu pattiyalil etam petravarkal,Tharpothu 11 merpattavarkal 2013 pg trb il cv mutithu Eruthi pattiyalil varum nilaiel ullanar.evargalal last cut off il erupavar bathikapattullanar.Matra patankalai sariparkavum.

    ReplyDelete
  5. உண்ணாவிரதம் வெற்றிகரமாக முடியும் வரை சோர்வு அடைய வேண்டாம் நண்பர்களே. இறுதியாக நல்ல தீர்ப்பு உங்கள் பக்கமே.
    வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் தோழர்களின் கடின உழைப்பிற்கு .
    தோற்றவர்கள் வெற்றி பெரும் பொழுது வெற்றி பெற்றவர்களுக்கு கண்டிப்பாக நியாயமும் வெற்றியும் கிடைக்கும். வெற்றி வெற்றி வெற்றிக் ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி