'ஒன்பது மாவட்டங்களில் (இடைநிலை) ஆசிரியர் காலியிடம் இல்லை' - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2014

'ஒன்பது மாவட்டங்களில் (இடைநிலை) ஆசிரியர் காலியிடம் இல்லை' - தினமலர்

'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடம் இல்லாததால், செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், குறிப்பிட்ட, ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்ல வேண்டாம்' என, தொடக்க கல்வி இயக்குனர்,இளங்கோவன் அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பு: தொடக்க கல்வித்துறையில், 1,649 இடைநிலை ஆசிரியர், 167 அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு, செப்., 1ம் தேதி முதல் நடக்கிறது. 'செல்ல வேண்டாம்' அன்று,

மாவட்டத்திற்குள் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, பணி நியமன கலந்தாய்வு நடக்கிறது. ஒரு மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெற, செப்., 2ம் தேதியும், மாவட்டத்திற்குள் உள்ள பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு, செப்., 3ம் தேதியும், வெளி மாவட்டங்களுக்கு பெறுவதற்கான கலந்தாய்வு, செப்., 4ம் தேதியும் நடக்கிறது. 

இதில், சென்னை, திண்டுக்கல்,கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியில்லை.

எனவே, செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்ல வேண்டாம்.இந்த மாவட்டங்களில், இரண்டாம் நாள் நடக்கும் கலந்தாய்விற்கு செல்லலாம். இவ்வாறு, இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

90 சதவீதம் : இதற்கிடையே, முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், நேற்று நடந்தது. இதில், 1,000 பேர், தங்களது சொந்த மாவட்டங்களில், பணி நியமனம் பெற்றதாக, பள்ளிக்கல்வி வட்டாரம் தெரிவித்தது. மொத்தம் உள்ள, 14,700 இடங்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமான காலியிடங்கள், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட, வட மாவட்டங்களில் தான் உள்ளன. இதனால், அதிகளவில் தேர்வு பெற்ற தென் மாவட்ட தேர்வர்கள், வேறு வழியில்லாமல், வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.

14 comments:

  1. Replies
    1. மாமன்னர் 23ம் புலிகேசி அவர்களே
      தங்கள் ராஜியத்தில் காலிப்பணியிட பட்டியலை
      எவ்வாறு பெற்றீர்கள்

      Delete
    2. Medical certificate counciling ku munnadiye vangidalama r counciling ku aparamtha vanganuma.....

      Delete
    3. கவுன்ஸ்லிங் அன்று தேர்வு எழுதிய மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமா அல்லது Hall tiket ல் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்திற்கு செல்லவேண்டுமா

      Delete
  2. Friends
    Please share the Sg vacancy list in your districts. (Except these 9 district)It will help me a lot on Tuesday.

    ReplyDelete
  3. All the best maniarasan. Enanku oru doubt? BV iku rank koduthutu than CV iku rank koduparkala? Anybody pls tell me?

    ReplyDelete
  4. Aasiriyar kali paniyidame illai enbathu magizhchithan. Irupinum oru vartham oru sila dt athiga paniyidam thevaipadugirthu enpathu varuthamalikirathu bcoz athil enathu dt ullathu.. Oru palliyil 2009ku piragu oru PG maths staff kooda illai enpathuthan

    ReplyDelete
  5. கவுன்ஸ்லிங் அன்று தேர்வு எழுதிய மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமா அல்லது Hall tiket ல் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்திற்கு செல்லவேண்டுமா

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Hall ticket la kodutha unga addressla enda district mentioned panninomo anda district counseling ku dan poganum

      Delete
  6. For Clarification reg. Hall ticket, counselling place, medical fitness,etc contact 9865135331

    ReplyDelete
  7. கல்வி செய்திக்கு காலை வணக்கம்,பட்டதாரி ஆசிரியருக்கு மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடக்குமா இல்லை இதேபோல் வேறு மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள சொல்வார்களா,,கடவுளே அனைவருக்கும் அவரவர் மாவட்திலயே கிடைக்க வேண்டும் ..நண்பர்களே , அறிவியல் துறைக்கு எவ்வாறு நடைபெறும் ... இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் என நான்கு துறைகளுக்கும் சேர்த்து அதிக wtge உள்ளவர்களை அழைப்பார்களா, அல்லது துறைவாரியாக அதிக wtge உள்ளவர்களை அழைப்பார்களா தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே...

    ReplyDelete
  8. தர்மபுரி மாவட்டம்பாலக்கோடு வட்டத்தில் பணி பெற விரும்புவோர் இடம் தொடர்பான தகவல்களுக்கு 8144228196 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி