போராட்டம் நடத்தினால் தண்டனையா : ஆசிரியர் கூட்டணி செயலர் கேள்வி - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2014

போராட்டம் நடத்தினால் தண்டனையா : ஆசிரியர் கூட்டணி செயலர் கேள்வி - தினமலர்

முறையான நியாயங்களுக்காக போராடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வன்மையாக கண்டிக்கிறோம்,என தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி தேசிய பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். காரைக்குடியில் அவர் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி திட்டம் 2002ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2015-ம் ஆண்டுக்குள் அனைத்து குழந்தைகளையும், பள்ளியில் சேர்க்க வேண்டும், இடைநிற்றல் இன்றி தரமான
இலவச கட்டாய கல்வி தர வேண்டும் என்பது நோக்கமாகும். 2015-க்குள் இத்திட்டம் நிறைவேற வாய்ப்பு இல்லை. 188 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டதும், 334 சங்கங்கள் ஒருங்கிணைந்த அமைப்பானது, பெல்ஜியத்தில் உள்ளது. இந்த அமைப்பு 2030-க்குள் அனை

வருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும், என்ற திட்டத்தை வகுத்து, அதன் விழிப்புணர்வை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உறுதி பூண்டுள்ளது. அதன் அடிப்படையில், அகில இந்திய தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி இத்திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் செப்.5-ம் தேதி டில்லியில் கருத்தாய்வு கூட்டம், 18-ம் தேதி உலக தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம், 19-ம் தேதி ஊர்வலம் நடக்க உள்ளது. இதில்,இந்தியாவிலிருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். 2030-ல் அனைவருக்கும் கல்வி கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். தனியார் பள்ளிகள் பயிற்சி பெறாத ஆசிரியர்களை பாடம் நடத்த வைக்கின்றனர்.

இந்தியாவிலேயே உத்தர பிரதேசத்தில் அதிக அளவாக 80 ஆயிரம் பயிற்சி பெறாத ஆசிரியர்கள்

பணியாற்றி வருகின்றனர். அரசு பள்ளிகளில், பயிற்சி பெறாத ஆசிரியர்கள் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம். அறிவிப்பு இன்றி போராட்டம் நடத்தினால் தண்டனை என்று அறிவிப்பதை விட, அந்த சூழல் வராமல் அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, முறையான நியாயங்களுக்காக போராடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வன்மையாக கண்டிக்கிறோம்,என்றார்.

6 comments:

  1. KEEP IT UP SATHISH I PRAY THE ALMIGHTY LET UR GOAL BE REACHED

    ReplyDelete
    Replies
    1. இன்று கவுன்சிலின் தேதி முடிவு செய்யப்படுகிறது . வெள்ளிக்வெள்ளிக்கிழமைக்குள் அறிவிக்கப்படும் . பணி நியமனம் செப்டெம்பர் 17க்குள் இருக்கும் . இது தாள் 1, தாள் 2 மற்றும் முதுகலை மூன்றுக்கும் பொருந்தும் ..

      thanks ‎TNTET & PGTRB

      Delete
    2. Mr.Asiriyan
      Would you please share ur opinion to hsudhan28@gmail.com

      Delete
    3. Is it true mr.aasiriyan sir..please send the details to vmsandip@gmail.com

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. 27.5.2012 அன்று TRB PG தேர்வு எழூதி தேர்வு செய்யப்பட்டும் (27 months) இதுவரை வேலை பெறாதவர்கள்
    History 35,
    Commerce-57
    Economics – 51 இவர்களூக்கு எப்போ வேலை ? இவர்களூக்கு அரசு தருமா இல்லை ஏமாற்றூமா ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி