உலகத்தரத்திற்கு இணையாக தமிழ்நாட்டில் உயர்கல்வியை கொண்டு வாருங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2014

உலகத்தரத்திற்கு இணையாக தமிழ்நாட்டில் உயர்கல்வியை கொண்டு வாருங்கள்

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் தொலை நோக்கு பார்வை 2023-ஐ நனவாக்க உலகத்தரத்திற்கு இணையாக தமிழ்நாட்டில் உயர்கல்வியை கொண்டுவாருங்கள் என்று துணைவேந்தர்களுக்கு கவர்னர் கே.ரோசய்யா வேண்டுகோள் விடுத்தார்.
 
கவர்னர் கே.ரோசய்யாபல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டம் நேற்று சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில் கவர்னர் கே.ரோசய்யா பேசியதாவது:-உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் 200 உள்ளன. அவற்றில் ஒரு கல்வி நிறுவனம் தான் இந்தியாவில் உள்ளது என்பது கவலைஅளிப்பதாக உள்ளது .இந்தியாவில் 600 பல்கலைக்கழகங்கள் உள்ளன. எனவே 21-ம் நூற்றாண்டை நமதாக்கிக் கொள்ளும் வகையில் பல்கலைக்கழகங்கள் 

சிறந்துவிளங்கவேண்டும்.கல்வியில், வளர்ச்சி, புதிதாக உருவாக்கும் தன்மை, போட்டிப்போட்டு வெற்றிபெறும் தன்மை ஆகியவை இருக்கவேண்டும். பல்கலைக்கழகங்களில் மாணவர்களும், ஆசிரியர்களும் ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்தினால் புதிய கண்டுபிடிப்புகளில் சாதனை படைக்க முடியும். 2020-ம் ஆண்டில் 20 வயது முதல் 29 வயது வரை உள்ள உலக இளைஞர்களில் இந்தியாவில் 60 சதவீதம் பேர் இருப்பார்கள். இந்தியாவில் உயர்கல்வி படிப்போர் சதவீதம் 15 முதல் 18 வரைதான் உள்ளது. 

ஆனால் நாம் இதை 30 சதவீதமாக அதிகரிக்கச்செய்யவேண்டும்.ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வைபிரதமர் நநேரந்திரமோடி கூறுகையில், ‘உயர்கல்விநிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் இளைஞர்களை திறமைமிக்கவர்களாகவும், தொழில் தொடங்குவதற்கான திறமைஉள்ளவர்களாகவும், ஆராய்ச்சியுடன் கூடிய கல்வி கற்பவர்களாகவும் உருவாக்கவேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு இருக்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வை 2023-ஐ நனவாக்க உலகத்தரத்திற்கு இணையாக தமிழ்நாட்டில் உயர்கல்வியை துணைவேந்தர்கள் கொண்டுவாருங்கள். மேலும் அறிவு சார் வளர்ச்சியையும், மனிதாபிமானத்தையும், ஆராய்ச்சியுடன் கூடிய தொழில்கல்வியையும் மாணவர்களிடத்தில் உருவாக்குங்கள்.இவ்வாறு கவர்னர் கே.ரோசய்யா பேசினார்.

மருத்துவ கல்லூரிகள்உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் பேசுகையில், 93 அரசு கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அண்ணாபல்கலைக்கழக மண்டல மையங்கள் மற்றும் விடுதிகள் கட்ட ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் பேசுகையில் தற்போது 19 அரசு மருத்துவகல்லூரிகள் உள்ளன என்றும் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவகல்லூரிகள் தொடங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

துணைவேந்தர்கள்கூட்டத்தில் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.வேலுமணி, டி.கே.எம்.சின்னையா, டாக்டர் எஸ்.சுந்தர் ராஜ், கே.ஏ.ஜெயபால், கே.சி.வீரமணி, அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் மு.ராஜாராம், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவபல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் டி.சாந்தாராம், தமிழ்நாடு திறந்தநிலைபல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் பி.வணங்காமுடி, தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுபல்கலைக்கழக துணைவேந்தர்(பொறுப்பு) கிரேஸ் ஹெலினா, அண்ணாமலைபல்கலைக்கழக சிறப்பு அதிகாரி சிவதாஸ்மீனா, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஹேமந்த் குமார் சின்ஹா, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார் ஜெயந்த், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், உயகல்வித்துறை இணைச்செயலாளர் ஜெ.உமாமகேஸ்வரி, கால்நடைத்துறை செயலாளர் விஜயகுமார், விளையாட்டுத்துறை செயலாளர் நஜிமுதீன் மற்றும் பல்வேறு துணைவேந்தர்கள், ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி