சென்னையின் மீது தாக்குதல் நடத்திய எம்டன் கப்பல் நூற்றாண்டு சிறப்பு கண்காட்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2014

சென்னையின் மீது தாக்குதல் நடத்திய எம்டன் கப்பல் நூற்றாண்டு சிறப்பு கண்காட்சி

எஸ்.எம்.எஸ். எம்டன் என்பது ஜெர்மனி கடற்படையின் கப்பல். முதல் உலகப் போரின் போது உலக நாடுகள் வியந்து பார்க்கும் அளவுக்கு அந்த கப்பலின் போரிடும் திறன் இருந்தது. கார்ல் வான் முல்லர் தலைமையில் இந்த எம்டன் கப்பல் அப்போதைய இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளான மலேசியா, இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தாக்குதல் நடத்தியது.



1914 ஆகஸ்ட் மாதத்தில் சீனாவில் இருந்து இந்த கப்பல், இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்தது. 1914 செப்டம்பர் 22ம் தேதி சென்னை கடற்கரையை நெருங்கிய எம்டன் கப்பல், தனது பீரங்கி குண்டுகளை ஏவியது. எம்டனிலிருந்து கிளம்பிய குண்டுகள் சென்னைத் துறைமுகத்துக்கு வெளியே நின்றிருந்த இங்கிலாந்து கப்பல், ஆங்கிலேயருக்குச் சொந்தமான பர்மா ஷெல் ஆயில் டாங்குகள், சென்னை உயர் நீதி மன்றம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை போன்றவற்றின் மீது விழுந்து வெடித்தன.

அதன் பிறகு மலேசியா கடல் எல்லை வழியாக சென்ற இந்த கப்பல் கடைசியாக ஆஸ்திரேலியாவில் எச்.எம்.ஏ.எஸ். சிட்னி கப்பலினால் கொக்கோஸ் என்ற இடத்தில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

இந்த கப்பல் வந்து குண்டுவீசிய நூற்றாண்டை நினைவு கூறும் வகையில், ஆஸ்திரேலிய தூதரகம் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் கண்காட்சி நடந்து வருகிறது.

இந்த கண்காட்சி நேற்று துவங்கி செப்டம்பர் 7ம் தேதி வரை நடக்கிறது. இதில், எம்டன் கப்பல், கேப்டன் கார்ல் முல்லர், எம்டன் கப்பலில் இருந்த ஜெர்மனி வீரர்கள் ஆகியோரின் படங்கள் உள்ளன. எம்டன் கப்பல் கடந்து வந்த நாடு, இறுதியாக கப்பல் தாக்கப்பட்டது ஆகியவற்றை தத்ரூபமாக விவரிக்கும் வகையில் அனைத்து தகவல்களும் அடங்கிய புகைப்படங்கள் இக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

இந்த கண்காட்சி குறித்து இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் ஷான் கெல்லி கூறும் போது, �சென்னைக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே எம்டன் கப்பல் மூலம் உள்ள வரலாற்று தொடர்பை இந்த கண்காட்சி பிரதிபலிக்கிறது.

முதலாம் உலகப் போரின் போது பல நாடுகளில் நுழைந்து தாக்குதல் நடத்தி விட்டு இந்த கப்பல் திரும்பியது. இந்த கப்பல் வந்து சென்ற நிகழ்ச்சி நடந்து நூறாண்டுகள் ஆகிறது. இந்நிலையில் அவற்றை நினைவு கூறும் வகையில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது� என்றார்.
ஆஸ்திரேலிய தூதரகம் ஏற்பாடு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி