தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணி: ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணைநிர்ணயிப்பதில் குளறுபடி இருப்பதாக வழக்கு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2014

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணி: ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணைநிர்ணயிப்பதில் குளறுபடி இருப்பதாக வழக்கு.


தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ‘கட்-ஆப்‘ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில்குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழ் பட்டதாரி ஆசிரியர் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர்பவுசிநேசல் பேகம்(வயது 38). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

நான், பி.லிட்(தமிழ்)., பி.எட்., படித்துள்ளேன். மேலும், தமிழ் பண்டிட் பயிற்சியும் முடித்துள்ளேன். நான், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவள். கடந்த 18.8.2013 அன்று நடந்த பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில் 150-க்கு 94 மதிப்பெண் பெற்றேன். இதைதொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டேன். பின்பு, தகுதித்தேர்வில் எடுத்த மதிப்பெண், ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் ஆகியவற்றை கணக்கிட்டு தகுதியானவர்களின் தற்காலிக பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

மறுத்து விட்டது

நான், 100-க்கு 60.86 மதிப்பெண்கள் பெற்றதாகவும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களை பொறுத்தமட்டில் 61.44 கட்-ஆப் மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. பிளஸ்-2, பி.லிட்., பி.எட்., ஆகியவற்றில் நான் பெற்ற மதிப்பெண்கள், வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி எனக்கு, 60.86 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. பி.லிட்., பி.எட்., படித்தவர்களும், பி.லிட்.,படித்து தமிழ் பண்டிட் முடித்தவர்களும் தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். பி.லிட்., பி.எட்., படித்தவர்களுக்கு பி.எட்., படிப்பில் பெற்ற மதிப்பெண் வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பி.லிட்., படித்து தமிழ் பண்டிட் முடித்தவர்களுக்கு தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண் வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கட்-ஆப் மதிப்பெண்

நான், பி.எட்., முடித்துள்ளேன். அதே போன்று தமிழ் பண்டிட்டும் முடித்துள்ளேன். தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொண்டால் ஆசிரியர் தேர்வு வாரியம் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்கு நிர்ணயித்துள்ள கட்-ஆப் மதிப்பெண்ணை விட அதிகமாக 62.13 மதிப்பெண்கள் பெற்று விடுவேன். பி.எட்., படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொண்டதால் எனக்கு கட்-ஆப் மதிப்பெண் கிடைக்கவில்லை. எனவே நான், தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொண்டு பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுஇருந்தது.

நோட்டீசு

இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில் வக்கீல் சேவியர்ரஜினி ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். மேலும்,பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனங்கள் அனைத்தும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே இருக்கும்என்றும் அவர் உத்தரவிட்டார்.

43 comments:

  1. Ipdiye case case nu podunga apdina than next year la posting poda mudium...epdi case podalam nu room pottu yosikirangapa

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. சகோதரியே, cv போயிருந்தப்பவே தமிழ் பண்டிட் படிப்பினை கணக்கெடுத்துக் கொள்க என கூறிப்பிட்டிருக்க வேண்டியதுதானே!!, நீங்க ... சும்மா சும்மா மேலயே குத்தம் சொல்லிக்கிட்டு.,

      Delete
    3. சகோதரியே, cv போயிருந்தப்பவே தமிழ் பண்டிட் படிப்பினை கணக்கெடுத்துக் கொள்க என கூறிப்பிட்டிருக்க வேண்டியதுதானே!!, நீங்க ... சும்மா சும்மா மேலயே குத்தம் சொல்லிக்கிட்டு.,

      Delete
  2. நண்பர்களே,

    கல்விச்செய்தி வலைத்தளம் cyber crime துறையின் மூலம் சில அதிகாரிகளால் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.தேவையின்றி comment எழுதி நீங்களே உங்கள் வாழ்க்கையை பாழ்படுத்திக் கொள்ளாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ethathan nan mothalaya sonnen, antha rajalingam mattuvan

      Delete
    2. IS IT TRUE WE CAN NOT BELIEVE......NEVER FRIGHTEN US..

      Delete
    3. அப்படி யா?????

      Delete
    4. மணி தோழரே நீங்கள் ஏன் பயபடுகிர்கள்?
      selection லிஸ்ட் ஏதாவது மாற்றம் வந்து விடும்னு பயமா?
      இந்த வலைதளத்தை அதிகாரிகள் கவனித்தால் தான் டெட் கண்டிட்டட்ஸ் வேதனையும் வலியும் அவர்களுக்கு தெரியும்

      Delete
    5. திரு.மணியரசன் அவர்களே நீங்கள் கூறுவது 100% உண்மை.

      அரசாங்கத்தை கடும் சொற்களால் விமர்சிப்பவர்களுக்கு இது ஒரு முன்னெச்சரிக்கை...

      இவர்களுக்கெல்லாம் பட்டால் தான் தெறியும்...

      கல்விச் செய்தி அட்மினிஸ்ட்ரேஷன் ஐயா அவர்களுக்கு.....

      தயவு செய்து சிறிது காலம் இங்கு கமண்ட் செய்வதை தடை செய்யுங்கள்.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. ஆபாசமாக மெசெஜ் அனுப்புவது ஐடி சட்டம் 2008 சட்டபிரிவு 66A படி குற்றம் மேலும் போலி ஐடி உருவாக்கி வேறு ஒருவர் போல் காட்டி மற்றவர்களை மேசடி அல்லது அவர்களது மனங்களை புண்படுத்துதல் சட்ட பிரிவு 66D படி குற்றம் எனவே யாரும் கமெண்ட் மூலம் தாக்குதல் நடத்தினால் இச்சட்டங்களுக்கு உட்பட்ட குற்றம் ஆகும் எனவே அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும்.

      கார்த்திக் பரமக்குடி

      Delete
  3. I am maths my wgt 63.28 bc and ph any chance for second list plz Yaravathu sollunga first list la 0.96 mark ph koottavula enaku job kidaikala plz tell me sir mani sir

    ReplyDelete
  4. I am maths my wgt 63.28 bc and ph any chance for second list plz Yaravathu sollunga first list la 0.96 mark ph koottavula enaku job kidaikala plz tell me sir

    ReplyDelete
  5. I am maths my wgt 63.28 bc and ph any chance for second list plz Yaravathu sollunga first list la 0.96 mark ph koottavula enaku job kidaikala plz tell me sir,

    ReplyDelete
  6. I am maths my wgt 63.28 bc and ph any chance for second list plz Yaravathu sollunga first list la 0.96 mark ph koottavula enaku job kidaikala plz tell me sir,

    ReplyDelete
  7. maths bc la 68 weightage eduthavanga not within cutoff....


    ReplyDelete
    Replies
    1. மிக அநேகமாக நீங்கள் cybercrime விசாரணைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என நம்புகிறோம்.

      Delete
    2. AGAIN I TELL U NEVER FRIGHTEN US.... MR.MANIYARASAN CAN U TELL US WHAT IS WRONG PREPARE LIST WHICH ONE IS CRIME ... DONOT TELL nambukiroom. REMEMBER U ONLY TOLD NOT ADMIN OK

      Delete
    3. Mr Tamil nanban,

      உங்களது comment குறித்து எனக்குத் தெரியாது.இதை நான் உங்களுக்கும் எழுதவில்லை.குற்றப் பிரிவிற்கு உட்படும் அளவிற்கு எழுதப்பட்ட சில comments இப்போது இங்கே இல்லை.

      இதில் பயமுறுத்த எதுவுமில்லை.சமீபத்தில் கூட கல்விச்செய்தி வாசகர் ஒருவர் cybercrime விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரை மிரட்டி அனுப்பி விட்டார்கள்.பெரியதாக வேறெந்த செயலும் நடைபெறவில்லை.

      அதிலிருந்து அவர் இங்கே comment செய்வதில்லை.அவர் அனுமதி பெற்ற பின் அவரது பெயரை இங்கே எழுதுகிறேன்.

      Delete
    4. சைபா் கிரைம் ஏன் நாா் பணம் வாங்கி கொண்டு வேலை கொடுக்கும் அதிகாரிகளை எதிா்த்து வேலை பாா்க்க மாட்டேங்குது.......

      வேலையை எதிா்பாா்த்து எதிா்பாா்த்து ஏமாந்து போன எங்கல பத்தி cybercrime விசாாிச்சா என்ன...... CBI வந்து விசாாிச்சா என்ன......
      போங்க சாா்......

      Delete
  8. cyber crime பற்றி பேச உனக்கு தகுதி இல்லை....

    ReplyDelete
    Replies
    1. குற்றம் நிரூபிக்கப்பட்டு FIR போடும் போது உணர்வீர்கள்.உணர்ச்சிவசப்படுவது தவறென்று புரியும்

      Delete
    2. WE KNOW WHAT WE ARE DOING ... NO NEED UR ADVICE

      Delete
  9. My inner mind says that we are going to get order soon...including tamil teachers
    Evlovo thangittom.....
    Idha thangamaattoma.....
    Be confident friends..
    (Trb selected the candidates as per the instructions given to them.......dont say that word Kularupadi...)

    ReplyDelete
  10. Apadi cv la katalanalum clarification campla solliruntha trb officer change panni iruppangala ... antha time la enna pannanga intha sister?

    ReplyDelete
  11. இங்க மணியரசன் மணியரசன் ஒரு நல்லவர் இருந்தாரு. அவர யாராவது பாத்திங்கள. அந்த நல்லவரு 2 லிஸ்ட் வரும்னாரு அதுல 3000 போஸ்ட்டிங்னாரு கட்ஆப் 2மார்க் மேல குறையும்னாரு. அதனால யாரும் போராட்டத்துல கலந்துக்க வேணாம்முன்னு மறைமுகமா சொன்னாரு.
    அவ்வளவு நல்லவரு. அவருக்கு எதிரா யாராவது கமெண்ட் பன்னினா உடனே டெலிட் பன்னுவாரு. ரெம்ப நல்லவரு. வல்லவரு. அவர பத்தி யாருக்காவது தெரிஞ்சா செல்லுங்க.

    ReplyDelete
    Replies
    1. வருத்தப்படாத வாலிபர் சங்கம்,

      யாருமே நம்ப மருதா பொழுது 2 வது பட்டியல் வரும் என்று நான் தான் சொன்னேன்.அவ்வாறே இப்பொழுது வந்தும் விட்டது.

      பள்ளிக்கல்வித்துறையில் தற்போதுள்ள 2489 காலிப் பணியிடங்கள் வெளியிடப்படாதது உங்களது துரதர்ஷ்டம்.இதைப் பெற நீங்கள் போராட்டம் அல்லது நீதிமன்றம் போன்றவற்றை நாடுவது உங்களது விருப்பம்.

      நான் யாரையும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாமென்று சொல்லவில்லையே!

      நான் சொல்வதையெல்லாம் கேட்கும் அவ்வளவு நல்ல மனிதர்களா நீங்கள்?

      Delete
    2. மணி சார் பேப்பர் 1 selection list எப்போது வரும் .அதில் எனக்கான வாய்ப்பு எப்படி இருக்கும் wt 70.94 sc சொல்லுங்க சார் .

      Delete
  12. Madam nenga c.v attend panum podhu sollalaya..weightage clarification campla sollalaya...

    ReplyDelete
  13. இன்றாவது தெரியுமா பணி நியமன தேதி?
    Mr.vijayakumar Chennai sir,
    Ungal comments ai matume unmaiyendru nambiyirukum nanbargalukaga indru our thagaval?

    ReplyDelete
  14. கலந்தாய்வு தேதி விரைவில்

    வெளியாக உள்ளது.

    ReplyDelete
  15. Maniyarasan
    Velai vaippu kidaikathavaral avargal niyayathai ketkirarkal......
    Neengal arasukku ethiraga ethanaiyo articles eluthavillaiya? ( listil name varuvatharkku munbu )
    Arasukku ethiraga kadumaiyana ethirppum , villaiyilla suggestions valangiyavargal neengal.

    ReplyDelete
  16. tamil subject last cut off mark konjam yaravathu sollunga

    ReplyDelete
  17. Vijaya kumar chennai sir,
    Good afternoon. sir what about the case sir?

    ReplyDelete
  18. chennai and coimbatore corporation schoolku mattum notification vitturukkanga other corporation schools ellam ceo office controla?

    ReplyDelete
  19. KALVI SEITHI ADMIN AVARGALUKKU., MANIARASAN SIR UNGALIDAMUM THAN, UNGALAL

    MATTUM MUDITHA VISAYAMTHANAE.,

    NEENGAL SPOKEN ENGLISH PRACTICE -KKU EAN MUKKIYATHUVAM KODUKKA

    KOODATHU ? NAM KALVISEITHIYIL ETHANAYO ENGLISTH PG, BT TEACHERS

    IRUKKUM POTHU SPOKEN ENGLISH PAYIRECHIYAI KODUKKA MUDIYUMA ?

    RESPECTED DEAR ADMIN & RESPECTED MR. MANI ARASAN SIR,..

    PLS. CONSIDER SPOKEN ENGLISH TRAINING FOR KALVISEITHI

    READERS AND GOVERMENT SCHOOL STUDENTS IS VERY USEFUL.,

    IPPO PUDIYATHAGA TEACHER JOB-KKU POGUM TEACHER-KALAE., ORU

    LAPTOP VANGI KALVISEITHI-I KANPITHU SPOKEN ENGLISH PRACTICE

    NADATHALAMAE., STUDENTS ARE VERY BRILLIANT FROM GOVERNMENT SCHOOL.,

    UNGALAL MUDIYUM ENDRA ORAE NALL ENNATHODU UNGALIDAM

    VIRUMBI KETTU KOLGIREN RESPECTED ADMIN AND RESPECTED MR. MANI ARASAN SIR.,

    SEY VEERGALA ? SEYVEERGALA ? SPOKEN ENGLISH PRACTICE THROUGH

    KALVISEITHI SEIYVEERGALA ? UNGALIN ANSWER-KKA KATHRIUKIREN.,

    ReplyDelete
  20. dear Friends TET Paper 2 unnaviratha Porattam Yenna Anathu ?

    ReplyDelete
  21. TET Paper 2 Tamil ku vacant innum athigappaduthappaduma? Correcta therinthavargal sollungalen plz?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி