பகுதிநேர ஆசிரியர் கணக்கெடுப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2014

பகுதிநேர ஆசிரியர் கணக்கெடுப்பு.


கடந்த 2012ம் ஆண்டில், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் உடற்கல்வி, ஓவியம்,இசை, மற்றும் தையல் கல்வி கற்பிக்க, மாநிலம் முழுவதும் 16,549பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்; திருப்பூர் மாவட்டத்தில் 543 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
மாதந்தோறும் மதிப்பூதியமாக 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. வாரத்தில் மூன்றுஅரை நாட்கள் வீதம் மாதத்தில், 12 அரை நாட்கள் பணிபுரிய வேண்டும் என்பது விதிமுறை.பகுதிநேர ஆசிரியர்களின் மதிப்பூதியத்தை 2,000 ரூபாய் வரை உயர்த்த, அரசு தரப்பில் ஆலோசிப்படுவதாக, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது, மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர் விவரம்,பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர் தேவையாக உள்ள காலி பணியிடம் குறித்த விவரங்களை அனுப்புமாறு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, தொடக்ககல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதனால், கூடுதலாக பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

8 comments:

  1. ------------------------------
    சென்னயில் மாபெரும் பேரணி !
    ------------------------------

    வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஏழு நாட்களாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. சட்டசபையில் GO 71 சொல்லிய போது எங்கே இருந்தீர்கள், அரசியல் கட்சிகள் 5% இடஒதுக்கீடு என்று சொல்லிய போது எங்கே இருந்தீர்கள், CV நடக்கும் போது எங்கே இருந்தீர்கள், நீதிமன்றம் GO 71 சொல்லிய போது எங்கே இருந்தீர்கள்,தன் பெயர் list யில் இல்லை என்றவுடன்,போராட்டமா.. எந்த அரசியல் கட்சியும்,சமுக அமைப்பும் உங்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள், ஏன் உங்களுக்கே தெரியும் உங்களுடைய போராட்டம் வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா ?என்று அதுவும் மாண்புமிகு அம்மாவை சொன்னது சொன்னதுதான் GO 71.மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்ற கொள்கையோடு மூண்றாவது முறையாகபொறுப்பேற்று இந்தியாவிலே கல்வியில் முதல் நிலை வர வேண்டும் என்று சிறப்பான ஆட்சியில் GO 71 னை நீக்க மிகவும் கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது எது நடக்குமோ அதை செய்யலாம் .நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்

      Delete

    2. டாடி........... எனக்கு ஒரு டவுட்டு...........

      எங்க sir சரியா படிக்காததால 82-89 மார்க் எடுத்து fail ஆகிட்டாரு.

      MP எலக்சன் வந்ததால அவுங்களுக்கு கருணை அடிப்படையில relaxation குடுத்ததனால pass ஆகி வேலக்கி வந்ததா சொல்லுறாரு.

      அது மாதிரி. நானும் சரியா படிக்காததால LKG ல fail ஆகிட்டேன். MLA எலக்சன் வர்றதால எனக்கும் relaxation குடுத்து pass ஆக்கி விடுவாங்களா டாடி ....

      சொல்லுங்க டாடி ......... சொல்லுங்க ......

      Delete
    3. காலிப்பணியிடங்களை அதிக படுத்துக, 2014-15 ஆண்டு பணியிடங்களை சேர்த்துடுக , tet பாஸ் செய்த அனைவருக்கும் வேலை கொடு, தனியார் பள்ளிகளில்tet பாஸ் செய்த அனைவருக்கும் வேலை கொடு, tet பாஸ் செய்த அனைவருக்கும் முன்னுருமை கொடு..என்று போராடு பலன் கிடைக்கும் ,ஆதரவும் கிடைக்கும் முக்கியமாக உங்களுக்கு பயணும் கிடைக்கும் அதை விட்டுட்டு GO 71 னை நீக்கு என்றால் ????????????????????????????????????

      Delete
    4. ------------------------------
      சென்னயில் மாபெரும் பேரணி !
      ------------------------------

      வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

      பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

      மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஏழு நாட்களாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

      அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

      Karur. 98437 34462
      Karur. 9597477975
      Vellore 9944358034
      T.malai 7305383952
      Coimbatore 9843311339
      Namakal. 9003435097

      Delete
  2. FLASH NEWS:அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
    கல்வித்துறை இயக்குனர் நாளை ஆலோசனை

    August 26 August 26

    ReplyDelete
  3. காலிப்பணியிடங்களை அதிக படுத்துக, 2014-15 ஆண்டு பணியிடங்களை சேர்த்துடுக , tet பாஸ் செய்த அனைவருக்கும் வேலை கொடு, தனியார் பள்ளிகளில்tet பாஸ் செய்த அனைவருக்கும் வேலை கொடு, tet பாஸ் செய்த அனைவருக்கும் முன்னுருமை கொடு..என்று போராடு பலன் கிடைக்கும் ,ஆதரவும் கிடைக்கும் முக்கியமாக உங்களுக்கு பயணும் கிடைக்கும் அதை விட்டுட்டு GO 71 னை நீக்கு என்றால் ????????????????????????????????????

    ReplyDelete
  4. புதிய ஆசிரியர்கள்

    நியமிப்பதற்கான கலந்தாய்வு

    தேதியும் விரைவில் வெளியாக

    உள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி