கலப்புத் திருமணம் செய்வோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற, பதிவு செய்ய வேண்டிய சான்றுகள் என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2014

கலப்புத் திருமணம் செய்வோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற, பதிவு செய்ய வேண்டிய சான்றுகள் என்ன?


நம் சட்டம்..நம் உரிமை...அரசு விதிகளின்படி எது கலப்புத் திருமணம்

கலப்புத் திருமணம் பற்றியும், கலப்புத் திருமணம் செய்வோருக்கான முன்னுரிமைகள் குறித்தும் விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ம.மகேஸ்வரி.
கலப்புத் திருமணம் செய்துகொள்ள நிபந்தனைகள் ஏதும் உண்டா?

அரசு விதிகளின்படி, தம்பதியரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவர், அருந்ததியர் அல்லது பழங்குடியினராக இருந்தால் மட்டுமே அது கலப்புத் திருமணம். பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உட்பட ஒரே பட்டியலுக்குள் வரும் சாதியினர் திருமணம் செய்துகொண்டால் அது கலப்புத் திருமணம் ஆகாது. மதம் மாறி திருமணம் செய்பவர்களுக்கும் இது பொருந்தும்.

கலப்புத் திருமணம் செய்வோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற, பதிவு செய்ய வேண்டியசான்றுகள் என்ன?

கலப்புத் திருணம் செய்வோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை உண்டு. இதற்கு தம்பதியரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், இருவருடைய குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ் நகல், திருமண பதிவுச் சான்றிதழ், கலப்புத் திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் இரு நகல்கள் தேவை. வட்டாட்சியர் அளவில் கலப்புத் திருமணச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இவற்றுடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகலை இணைத்து மனு எழுதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் நீங்கலாக, அனைத்து சான்று நகல்களிலும் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும்.

முன்னாள் படைவீரரைச் சார்ந்தோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற என்ன சான்று வழங்க வேண்டும்?

முன்னாள் படைவீரர் வாரிசு சான்றிதழ் 2 நகல், குடும்ப அட்டை சான்றிதழ் நகல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் மற்றும் முன்னுரிமை கேட்டு எழுதப்பட்ட மனு ஆகியவற்றை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நகல்களில் சான்றொப்பம் தேவை.

மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற பதிவு செய்ய வேண்டிய சான்றுஎன்ன?

குடும்ப அட்டை நகல், மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை நகல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் மற்றும் முன்னுரிமை கேட்டு விண்ணப்பம் செய்யும்மனு ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத் திறனாளி என்பதற்கான தேசிய அடையாள அட்டையில் சான்றொப்பம் தேவை.

வேறு மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்து செல்லும்போது வேலைவாய்ப்பு பதிவை மாற்ற முடியுமா?

வட்டாட்சியர் அளவில் பெறப்பட்ட குடிப்பெயர்ச்சி சான்று, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களில் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

6 comments:

  1. சார் நான் தற்போது இடைநிலை ஆசிரியர் மற்றும் ,இளங்கலை இயற்பியல் படித்துள்ளேன் ,அடுத்து பி எட் படிக்கலாமா எதிர்கால வேலை வாய்பு எப்படி இருக்கும் அல்லது வேறு துறை செல்லலாமா ?

    ReplyDelete
  2. சார் நான் தற்போது இடைநிலை ஆசிரியர் மற்றும் ,இளங்கலை இயற்பியல் படித்துள்ளேன் ,அடுத்து பி எட் படிக்கலாமா எதிர்கால வேலை வாய்பு எப்படி இருக்கும் அல்லது வேறு துறை செல்லலாமா ?

    ReplyDelete
    Replies
    1. Hi sir,
      நீங்க B Ed படிக்கலாம்.... இளங்கலை படிப்பில் நல்ல மதிப்பெண்களுடன் இருந்தால் B Ed படிங்க.... B Ed ல் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றால் Tet லும் 125 க்கு மேல் எடுத்தால் வேலைவாய்ப்பு பெறலாம்.... இது உறுதி .... வாழ்த்துக்கள்....

      Delete
  3. Anybody can tell me , what are all government job oppertunities available for intercaste married couples.

    ReplyDelete
  4. Any body say pls about bt vacanies in cuddalore and no of selected

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி