'ஆசிரியர்கள் பணிப்பதிவேடு முறையாக பராமரிக்கப்படுகிறதா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2014

'ஆசிரியர்கள் பணிப்பதிவேடு முறையாக பராமரிக்கப்படுகிறதா?


ஆசிரியர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு பணியில், சுணக்கம்நிலவி வருவதாக ஆய்வின் போது தெரிய வந்ததை தொடர்ந்து, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், அவற்றை கண்காணித்து விவரங்களை சரி செய்ய, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள, ஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப்பதிவேடு, ஒன்றியத்துக்குட்பட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பதிவேடுகளில், உரிய பதிவு முறையாக பதியப்படாமல் இருப்பதாக, துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறைகளை சரி செய்ய தொடக்க கல்வி இயக்குனரகம், உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, பல்வேறு உத்தரவுகளைபிறப்பித்துள்ளது. அதன்படி, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளை, பள்ளியில் பராமரிக்கப்படும் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். விடுப்பு விவரங்கள், சரியான முறையில் பதியப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

பணிப்பதிவேட்டில், உயர்கல்வி விவரங்களை பதியப்படும் முன்பு, உயர்கல்வி பயில்வதற்கு துறை அனுமதி பெறப்பட்டுள்ளதா? சான்றிதழ் தற்காலிகமானதா? நிரந்தரமானதா? என சரிபார்க்க வேண்டும். இந்த பணிப்பதிவேடு பட்டியலின்படியே, முன்னுரிமை, பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே, இதில் தவறு இருந்தால், அதற்கு அந்த அலுவலரே பொறுப்பாவார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.கல்வி அலுவலர் பணி மாறுதல் மூலமாக, வேறு ஒன்றியங்களுக்கு செல்ல நேர்ந்தால், அவர் பணியாற்றிய ஒன்றியத்தில் உள்ள, பணிப்பதிவேட்டில் அனைத்தையும் பதிவு செய்து விட்டு தான், செல்ல வேண்டும். இவற்றை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. EXPECTING "AMAVASAI" EAGERLY !!!

    ReplyDelete
  2. entry lanja laavanyam illamal nadantaal sarithan.el,ml entry pannamal yemaati gondiruppavarkalai eniyaavathu kandu kolveergala?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி