மன உளைச்சலால் ஆசிரியர் பயிற்றுநர் மயக்கம்: முதன்மைக் கல்வி அலுவலர் மீது `உங்கள் குரலில்' புகார்-Hindu Tamil - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2014

மன உளைச்சலால் ஆசிரியர் பயிற்றுநர் மயக்கம்: முதன்மைக் கல்வி அலுவலர் மீது `உங்கள் குரலில்' புகார்-Hindu Tamil




அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் விளக்கம்கேட்டு மன உளைச்சல் ஏற்படுத்தியதால் ஆசிரியர் பயிற்றுநர் மயங்கி விழுந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதுபோல், முதன்மை கல்வி அலுவலரின் பழிவாங்கும் நடவடிக்கையால் மன உளைச்சல் அடைந்து வருவதாக “உங்கள் குரலில்' ஆசிரியர் பயிற்றுநர்கள் புகார் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 16 வட்டார வளமையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 167 ஆசிரியர் பயிற்றுநர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் பள்ளிகளை மேற்பார்வையிடுவது, ஆசிரியர்களுக்கு பயிற்சி, பள்ளி கட்டிட வசதிகள், மானிய உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இவர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் இருந்து, மாதந்தோறும் ஊதியம் வழங்கப் படுகிறது. சில மாதங்களாக அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், ஊதியப் பட்டியலில் கையெழுத்து போடாமல் இழுத்தடிப்பதால் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஒவ்வொரு மாதமும், தாமதமாக ஊதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் வழங்கப் படுவதாகவும், திங்கட்கிழமை முதன்மை கல்வி அலுவலர் முருகன், விளக்கம் கேட்டு மனஉளைச்சல் ஏற்படுத்தியதால் ஆசிரியர் பயிற்றுநர் ஒருவர் மயங்கி விழுந்துதிண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக “உங்கள் குரலில்' ஆசிரியர் பயிற்றுநர்கள் புகார் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் ஆசிரியர் பயிற்றுநர்களை சந்தித்து விசாரித்தபோது அவர்கள் கூறியது:அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கும் மாதத் தொடக்கத்தில் தாமதமில்லாமல் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் மட்டும் ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெறுவதற்கு போராட வேண்டி உள்ளது. காரணம் கேட்கும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் ஏதாவது ஒரு வகையில் தவறுகள் கண்டுபிடித்து மெமோ கொடுக்கிறார்.இவரது பழிவாங்கும் நடவடிக்கையால் 3 மாதம் ஊதியமே பெறாத ஆசிரியர் பயிற்றுநர் ஒருவர் தவித்து வந்தார். அவரை மேலும் மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில் விளக்கம்கேட்டுள்ளார். ஏற்கெனவே, ஊதியமே பெறாமல் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்த அவர், இவரது நெருக்கடியால் மயங்கி கீழே விழுந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டு தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ளார். இவரைப்போல், அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒவ்வொரு விதங்களில் முதன்மைக் கல்வி அலுவலரின் பழிவாங்கும் நட வடிக்கையால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தவிக்கிறோம் என்றனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகனிடம் கேட்டபோது அவர் கூறியது: யாருக்கும் இன்று (நேற்று) நான் மெமோ வழங்கவில்லை. நீங்கள் குறிப்பிட்ட ஆசிரியர் பயிற்றுநரிடம், அவரது வட்டாரத்துக்கு உட்பட்ட சில விவரங்கள் குறித்து அறிக்கை மட்டும் கேட்டேன். மற்றபடி யாரையும் நான் தொந்தரவு செய்யவில்லை. திட்டமிட்டு மெமோ வழங்குவதும் இல்லை. யாரோ திட்டமிட்டு பொய் புகாரைத் தெரிவித்துள்ளனர். அது முழுக்க பொய்யான தகவல். நிதி வராததால் ஊதியம் தாமதமாகி இருக்கும். நிதி வந்ததும் ஊதியத்தை நிறுத்தி வைக்காமல் போட்டுவிடுவோம் என்றார்.

9 comments:

  1. TNTET 2013 நடவடிக்கையால் மன

    உளைச்சல் அடைந்து வருவதாக

    Already suffering 70,000 candidates

    ReplyDelete
    Replies
    1. அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்


      நாங்கள் 300 க்கும் மேற்பட்டோர் தற்போது எம்.ஜி.ஆர் சதுக்கத்தில் உள்ளோம் காலையில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியை 5 நண்பர்கள் பார்த்து கோரிக்கை வைத்தோம் இப்போது கல்விஅமைச்சரை காண அனுமதி கிடைத்தது எங்களில் 5 நண்பர்கள் திரு கே சி வீரமணி கல்வி அமைச்சரை பார்க்க சென்று உள்ளார்கள்

      நண்பர்களே நாங்கள் உங்களுடன் வேண்டி கேட்பது எல்லாம் ஒன்றே ஒன்று தான் இனிமேலாவது எங்களுடன் கலந்து கொள்ளுங்கள்

      நல்ல செய்தி

      எங்கள் போராட்டத்தில் மாற்றுத்திறனாளி நண்பர்களும் இணையலாம் என்று பரிசீலனை செய்து கொண்டு உள்ளார்கள்

      நன்றி சிரஞ்சீவி சார்

      ஒன்று மட்டும் உறுதி


      எங்கள் உயிரே போனாலும் போராட்டத்தை கைவிடும் பேச்சிற்க்கே இடமில்லை தயவு செயது கலந்து கொள்ளுங்கள்

      எங்களின் ஒரே கோரிக்கை

      90 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்களுங்களுக்கு முதலில் பணி நியமனம் வழங்க வேண்டும்

      சில நண்பர்கள் யாரும் போராட்டம் செல்ல வேண்டும் மீறி சென்றால் உங்கள் மீது FIR போடுவார்கள் என்று இது 100% தவறான செய்தி

      இங்கு வாருங்கள் உங்களுக்கே தெரியும் காவல் துறை நண்பர்கள் மிக சிறந்த முறையில் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்

      நன்றி காவல் துறை நண்பர்களே

      நன்றி

      Delete

  2. SANCTION 5,000 RS per month

    FOR EACH TNTET PASSED

    FOR TREATING "MENTAL DISORDER"

    ReplyDelete
  3. மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஏன் இப்பிரச்சனையில் மாவுனம் காக்கின்றார்

    ஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் நாம் இப்போது போரடவிட்டால்
    உண்மையில் நாம்தான் ஊனம்முற்றோர்

    ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும்
    தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage மற்றும் 5%
    மதிப்பெண் தளர்வு முறையால் எங்களை போன்ற மூத்த ஆசிரியர்களின் வேலையும் தன்மானத்தையும் பறித்துவிட்டனர்.

    இப்போது இப்பிரச்சனைக்காக போரடும் எங்களையும் எங்களுடன போரடிய பெண் ஆசிரியைகளையும் கைது செய்து எங்களிடம் கடைசியாக மிஞ்சி இ௫க்கும் உயிரையும் பறிக்க பார்க்கின்றனர்...

    தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage முறையால் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும பணிஇழந்து நாங்கள் அவமானப்பட்டு இனி வாழ்வதைவிட போரடி சாவதே மேல். எடுத்துக்கொள்ளுங்கள் எங்கள் உயிர்களை...
     
    நண்பர்களே
    சில௫க்கு சில விஷயாங்கள் எளிதாக கிடைக்கின்றன ஆனால் நமக்கோ போரடித்தான் பெறவேண்டும் என்றால் போரடித்தான் பார்ப்போமே...

    பாதிக்கப்பட்ட நண்பர்களே ஒன்று கூடுங்கள்
    ஒன்று கூட்டுங்கள்
    நாமக்காக போரடும் நண்பர்களுக்கு தோள் கொடுங்கள்.
    சென்னைக்கு வா௫ங்கள்

    Weightage மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பணியிழந்து விட்டுக்குள் முடங்கி இ௫ந்ததும் போதும் போரடி வெல்லாலம்
    வா௫ங்கள் சென்னைக்கு
    நம்மை போன்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்தி௫க்கிறார்கள் உங்களுடன் சேர்ந்து போரட

    இவ் போட்டம் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல்  82
    க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல்  ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை

    மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

    Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

    இவ் போரட்ட செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
    Msg மூலமாகவோ
    Facebook Status Sharing
    Twitter
    What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.

    பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
    தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.

    நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் போரட்டத்திற்கு  ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.

    சென்னையில்
    சந்திப்போம் வா௫ங்கள்

    ReplyDelete
    Replies
    1. All selected candidates maperum unnaviratham 25.8.14. go 71 do not change. unkal job unkaluke suyanalavathikalin poratathai ozithu kata vendum place valluvarkotam.pls call 9843614103, 8695470613

      Delete
  4. TET NEWS : Continuous Agitation By Above 90 TET Candidates.

    By Polimer News ..... Now.....2:00 pm.

    ReplyDelete
  5. Agitation News : Support has been getting reduced day by day.......

    ReplyDelete
  6. Agitation News : the team plannned to meet minister today........

    By Polimer TV ............2:25 pm.

    ReplyDelete
  7. silamaavatengalil (Rmd)athigaarigalal (+2 vil 75% therchi koduthum )school open aana muthel naalile17(b) vaangi manaulaichalil paniyaati varum aasiriyaigalum ullanar.vidivu kaalam eppotho?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி