TNTET Article: வெயிட்டேஜ் முறை எதிர்ப்பு போராட்டம் யாருக்காக!? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2014

TNTET Article: வெயிட்டேஜ் முறை எதிர்ப்பு போராட்டம் யாருக்காக!?


தகுதிதேர்வு என்ற ஒன்று நடந்து முடிந்து கிட்டதட்ட ஓராண்டுகாலம் முடிவடைந்து விட்டது. இந்த தகுதிதேர்வில் கிட்டதட்ட 6லட்சம் பேருக்கு மேல் தேர்வு எழுதினர். அதில் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 ம் சேர்த்து 75000 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில் பேப்பர் 2 க்கான தேர்வு பட்டியல் சமீபத்தில் வெளியானது. தேர்வு பட்டியல் வெளியானதும் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் யார் பெயரெல்லாம் தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லையோ அவர்களில் பலபேர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பலபேர் ஒருங்கினைந்து உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றனர்.இதில் உண்மையில் பாதிக்கபட்டவர்கள் யார்?
90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்களா? மற்றவர்களுக்கு எல்லாம் இந்த பாதிப்பு என்பது கிடையாதா? நாம் நடத்திய இந்த போராட்டத்தின் நோக்கம்தான் என்ன?  நமது கோரிக்கைகள் இரண்டாக பிரித்து பார்க்கலாம்.

(I). 90 மதிப்பெண்க்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும் என்பதா? அல்லது

(II). ஜிஓ 71 ஐ ரத்து செய்து தகுதிதேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும்சீனீயாரிட்டி & பணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுத்து பணிநியமணம் செய்யவேண்டும் என்பதா?

இரண்டிற்கும் முரண்பாடு உண்டு என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் நமது நோக்கம் தவறான பாதையில் சென்றுவிடகூடாது.நாம் 90க்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமனம் செய்யவேண்டும் என்று சொன்னால் அது அரசு கொடுத்த 5% மதிப்பெண் தளர்வை எதிர்ப்பதாகும். ஆனால் நாம் GO 71 வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவும், டிஇடி யில் பெற்ற மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டிபணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவேண்டும் என்று கோரிக்கை அழுத்தமாக வைக்கப்படும் போது, இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரையும் அரவனைத்து செல்வதாக அமையும். மேலும் இதில் 90க்கு மேல், 90க்கு கீழ் என்ற பாகுபாடெல்லாம் அகற்றுபட்டுவிடும்.
இந்த வெயிட்டேஜ் முறையால் இப்போது மட்டும் பாதிப்பில்லை அடுத்தடுத்த தேர்வுகளில் எதிர்காலங்களிலும் இது தொடரும். 

இப்போது நாம் ஒன்றினைந்து இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற தவறினால்  நமது எதிர்காலம் என்பது? ??? ஆகவே இந்த போரட்டம் நமது எதிர்காலத்திற்கான போரட்டம்.இந்த போராட்டம் யாருக்காக என்பதை நாம் தெளிவாக சிந்திக்க வேண்டும். 90க்கு மேல் பெற்றவருக்கு மட்டும் தான் இந்த போராட்டமா? ஏன்இன்று 82 மதிப்பெண் பெற்ற ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு மேல் மதிப்பெண் பெறும் போது அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா?  இன்று தேர்ச்சி பெறாத ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு மேல் மதிப்பெண் பெற மாட்டாரா? அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா? சிந்திக்க வேண்டும் நண்பர்களே. 90 மதிப்பெண்க்கு மேல் பெற்றவர்கள் போராட்டத்தில் கலந்து கொன்டால் கூட தேர்வு பட்டியலில் பெயர் வரவில்லை என்ற ஆதங்கத்தில் கலந்து கொள்கிறார்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாவோம்.  

ஆகவே இந்த வெயிட்டேஜ் முறை பாதிப்பு என்பது தகுதிதேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் 3 லட்சம் பேருக்குமேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை உனர்ந்து இனிவரும் காலங்களில் யாரையும்மதிப்பெண் அடிப்படையில் பாகுபடுத்தாமல்  அனைவரும் ஒன்றினைந்து போராடுவோம்.

சிந்தியுங்கள் நண்பர்களே! இது நம் எதிர்காலம்.

Article by.
Mr.கோவிந்தராஜ்.,
நாமக்கல் மாவட்டம்.

73 comments:

  1. ஆசிரியர்களே மாண்புமிகு அம்மா அவர்களுக்கு அமைதிதான் முக்கியம் .5% மாற்ற முடியாது.அமைதியாக இருங்கள் பலன் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இதற்கு ஒரே தீர்வு...
      தேர்வு செய்யப்படாதவர்க
      ளுக்கு அடுத்தடுத்த
      பணிநியமனங்களில்
      முன்னுரிமை அ
      ளிப்பதே,..இது ஏன்
      எவருக்கும்
      புரியவில்லை.இதற்கு ஒரே தீர்வு...
      தேர்வு செய்யப்படாதவர்க
      ளுக்கு அடுத்தடுத்த
      பணிநியமனங்களில்
      முன்னுரிமை அ
      ளிப்பதே,..இது ஏன்
      எவருக்கும்
      புரியவில்லை...அதற்கு போராடுங்கள் ..நிச்சயம் வெற்றி கிடைக்கும்.,அதுதான் நியாமான கோரிக்கை..மீண்டும் மீண்டும் தகுதித்தேர்வு எழுதிக்கொண்டே இருக்கமுடியாது..

      Delete

    2. "ஆடு நனையுதேனு ஓனாய் வருத்தப்பட்டுச்சாம்" அந்த மாதிரி இருக்குது உன் பேச்சு, அவனவன் வேலை பரிபோகிற‌தே என்று இருந்தால் உனக்கு நக்கலா..? சீனியர் எல்லாம் உனக்கு கேவலமா..? உனக்கு லிஷ்ட்ல பேரு வந்துருச்சுனா எப்படி வேனாலும் பெசுவயா..? போய் உன் வேலைய பாரு, பாதிக்கப்பட்டால் அவகளுக்குத்தான், நீ ஒன்னும் புத்தி சொல்ல தேவை இல்லை..

      Delete
    3. LAPTOP LA TAMIL LA TYPE PANDRATHU EPDI NU SOLUNGA FRIENDS ORU SILA KARUTHUKALAI PATHIVIDA VIRUMBUGIREN...

      Delete
    4. தமிழில் எழுத தேவையான தகவல்கள் இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. வாசித்துப் பயன்பெறவும். மடி கணினியில் தமிழில் தட்டச்சிட ஒரு தரமான மென்பொருள்

      Delete
    5. EXPECTED CUT OFF MARKS FOR PAPER 1 (4224 Vacancy)


      OC

      73.5



      BC

      70.1



      BCM

      66.5



      MBC

      69.5



      SC

      65.8



      SCA

      65.2



      ST

      61.4


      If TRB will Announce 2380 Paper 1 SG Asst. vacancies, expected cutoff will shown below.

      GT
      74.9

      BC
      72.7

      MBC
      71.8

      SC
      70.6

      SCA
      69.7

      ST
      67.1

      BCM
      72.8

      இந்த மதிப்பெண்கள் உறுதியானது இல்லை மாற்றம் ஏற்படலாம்


      ############# தாள் 1 வெற்றி பெற்றவர்கள் கவனத்திற்கு #############



      72 க்கு மேல் உள்ள இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு கண்டிப்பாக வேலை உறுதியாக கிடைக்கும்**********************

      65 மதிபெண் கீழ் உள்ளவர்கள் (ST பிரிவினரை தவிர்த்து) உள்ளவர்களுக்கு வேலை கிடைக்காது••••••••••••

      அவர்கள் அனைவரும் அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற படிக்க இப்போதே ஆரம்பிக்கவும் இதை நம்பி நேரத்தை வீணாக்க வேண்டாம்

      அதிக அளவில் தமிழ் வழியில் பயின்றவர்கள் தாள் 1 ல் உள்ளார்கள் எனவே தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்க்கு வேலை கிடைக்கும் என்பது பகல் கனவு

      கள்ளர் சீரமைப்பு பள்ளி மதுரை திண்டுக்கல் தேனி மாவட்டங்களில் உள்ள இந்த பள்ளியில் குறைந்த காலிப்பணியிடங்கள் இருக்கும் கள்ளர் இனத்தவர்களில் அதிக மதிப்பென் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மற்றவர்களுக்கு கடினம்


      சிறுபான்மையினர் BCM இனத்தவர்களுக்கு பணியிடம் குறைவு குறைந்தது 66 மதிப்பெண் மேல் எதிர் பார்க்கலாம் எனவே அதிக மதிப்பென் பெறுபவர்களுக்கே பணியிடம் கிடைக்கும்

      SCA பிரிவில் 63 முதல் 65 மதிப்பெண்கள் மேல் உள்ள தமிழ் வழியில் பயின்றவர்கள் எதிர் பார்க்கலாம்

      Delete
    6. Dear Friends good morning,
      Provisional list il irukum varungala teacher gale nam anaivarum ondru serndhu GO No 71 moolam namaku job kedaika karanama irundha namadhu CM idhaya deivam AMMA avargaluku oru nandri arivipu kootam arrange pannuvom. Ovoru dist collector office munbu edhavadhu oru nal decide panni oru china function arrange pannalam. Padidhu pass panni list la vandha mattum podhadhu. Poradavum ready aga iruka vendum. Nam porada vendam. Atleast indha GO No 71 correct dhan enbadhai CM gavantherku kondu sella oru nandri arivepu kootam arrange pannalam. Dear friends idhu last chance to get teacher job. Namma hard work pannadhala namma name list la vandhu iruku. Adhai use panna idhu dhan correct time . so please co-operate pannunga. Velai kedaikadhavan vex la irupan. Avana pathi kavalai padama neenga vanga. Nama oru function ku earpadu pannalam. Verupamanavargal pganesandpi@gmail.com endra email id mail pannunga

      thanks

      Delete
    7. நண்பர்களே,
      5% தளர்வை நீக்குங்கள் என்று போராடினால் அது அரசை எதிர்த்தது போலாகும், அதனால் அதைபற்றி யாரும் பேசுவதை காணோம்,
      5% தளர்வை நீக்கினால் தானாகவே 82‍‍‍‍‍‍/89 எடுத்தவர்கள் வெளியேறிவிடுவார்கள்

      அரசு ஆணை 71
      வெய்ட்டேஜை நீக்கினாலும் என்ன நடக்கும்?
      தகுதி தேர்வு ம‌திப்பெண் அடிப்படையில் நியமனம் நடை பெற்றாலும் 82/89
      பெற்றவர்கள் நிச்சயமாக வெளியேறுவார்கள், தற்போது உள்ள முறையில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் முதலில் வெளியேறுவது 82/89 எடுத்தவர்கள்தான்,

      முதலில் இதை நீக்க முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும், இதில் மாற்றம் வேண்டுமானால் செய்யலாம், மாற்றம் செய்தாலும் 82/89 எடுத்தவர்கள் குறைந்தது 30 % தேர்ச்சி பெறுவார்கள், இதிலும் 90 க்கு மேல் எடுத்தவர்கள் நிச்சயமாக பாதிக்கபடுவார்கள்,

      நேற்று நடைபெற்ற போராட்டம் பொது நலமா சுய ந‌லமா ?
      பொது நலம் எங்குதான் உள்ளது, 5% தளர்வு அறிவித்தது பொது நலமா?
      பிற்படுத்தப்பட்டவர்களும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்ட்வர்களும், பழங்குடியினரும் சரி சமமாக‌ இந்த 5% தளர்வை சரியென்று எடுத்துக்கொண்டு போராடாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் இதுதான் பொது நலமா?
      இதில் ஏற்ப்பட்ட நன்மை என்னவெனில் போராட கற்றுக்கொண்டதுதான் வெற்றி,
      5% தளர்வை அறிவித்தவுடன் தடை ஆனணை பெற்றிருக்க வேண்டும், உண்ணாவிரதம் நடத்தியிருக்க வேண்டும், ஏன் அமைதியாக இருந்தோம்? இது பொது நலமா?
      காலிப்பணியிடங்கள் குறையாக அறிவிக்கப்பட்டவுடன் நம் அனைவருக்கும் தெரியும் அனைவருக்கும் வேலை இல்லையென்று ஏன் அமைதியாக இருந்தோம்? இது பொது நலமா?
      இந்த பிரச்சனைக்கு யார் காரணம்? நாம் அனைவருக்கும் தெரியும்
      போராடினோமா?
      கிடைத்தவரை லாபம் என்ற எண்ணம் தான்
      (வழக்கு நடத்துபவர்கள் இதில் சற்று வில‌க்கு பெறலாம்)

      இது ஆசிரியர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல‌
      இது இந்த நாட்டின் அடிப்படை பிரச்சனை
      எத்தனை பணியிலுள்ள ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப குரல் கொடுப்பார்கள் ?
      தீர்வு தான் என்ன?

      அதிக அரசு பள்ளிகளை திறந்திடுங்கள்
      ஆசிரியர் மாணவர் விகிதத்தை 25:1 என மாற்றுங்கள்
      அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமை ஆக்குங்கள்
      அதற்கு தைரியம் யாருக்கும் கிடையாது குறைந்த பட்சம் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குறைந்த்த பட்ச ஊதியம் 15,000 என நிர்ணயிக்க உங்கள‌ல் முடியுமா?
      அரசு பள்ளிகளின் எண்ணிக்கை என்ன?
      அங்கு பணி புரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன?
      ஆசிரியர்களின் காலிப்பணியிடம் எவ்வளவு?
      இருக்கும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் எத்தனை?
      வருடந்த்தோரும் வெளிவரும் மாணவர்களீன் எண்ணிக்கை என்ன?
      வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எத்தனை பேர்?
      தற்போது உள்ள நிலையில் அனைவருக்கும் நம்மால் பணி வழங்க முடியுமா?
      முடியாதென்றால் ஏன் புதிதாக தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு வழ்ங்க வேண்டும் இதற்கு பெயர் பகல் கொள்ளை தானே ?
      இதுவெல்லாம் 20 வருடத்திற்கு முன்பு அரசு யோசித்திருக்க வேண்டிய கேள்விகள்
      5 வருடத்திற்கு ஒருமுறை அரசு மாறுகிறது , அவர்கள் கொள்கைகள் மாற்றம் இல்லை என்பதைதான் இது காட்டுகிறது
      இதன் மூலம் அவர்கள் நமக்கு சொல்லும் செய்தி என்னவென்று தெரியுமா?
      காசு கொடுத்து படித்து கொள்ளுங்கள் எங்களிடம் வேலை கேட்காதீர்கள்
      வேலை வேண்டுமானால் தனியார் பள்ளிக்கு செல்லுங்கள்,
      அங்கே இருக்கும் சம்பள விகிதங்களை பற்றி எங்களிடம் கேட்காதீர்கள்
      எங்களுக்கு அதில் சம்பந்தம் இல்லை

      போராட வேண்டிய இடம் வேறு, கோரிக்கைகள் வேறு,
      தவறான இடத்தில் தவறான கோரிக்கைகளை வைக்காதீர்கள்,
      நமக்கு சில தற்காலிக தீர்வுகள் கிடைக்கலாம், அது தீர்வே அல்ல‌


      Delete
  2. Replies
    1. திரு. கோவிந்தன் சார் தான் நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் எனக்கு இதில் ஒரு சந்தேகம் உள்ளது

      ***********நாம் 90க்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமனம் செய்யவேண்டும் என்று சொன்னால் அது அரசு கொடுத்த 5% மதிப்பெண் தளர்வை எதிர்ப்பதாகும். ஆனால் நாம் GO 71 வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவும், டிஇடி யில் பெற்ற மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டிபணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவேண்டும் என்று கோரிக்கை அழுத்தமாக வைக்கப்படும் போது, இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரையும் அரவனைத்து செல்வதாக அமையும். மேலும் இதில் 90க்கு மேல், 90க்கு கீழ் என்ற பாகுபாடெல்லாம் அகற்றுபட்டுவிடும்.*********

      என்று சொன்னீர்கள்

      1) அப்போது இந்த முறையால் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் பயன்பெறுவார்கள் என்று சொல்லுகின்றீர்களா?

      2) இல்லை இது தான் சரியான முறை என்று சொல்லுகின்றீர்களா?

      முதல் கேள்வி தான் சரி என்றால் 5% மதிப்பெண்கள் பெற்றவர்களில் யாவரும் பதிவு மூப்பில் மூத்தவர்கள் இல்லையா? இந்த முறையை பின்பற்றினாலும் 90, 100 , 110 மதிப்பென்களுக்கு மேல் பெற்றவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்களே... இப்போது போராட்டம் நடத்துவதன் குறிக்கோளுக்கு இது ஏற்புடையது என்று நினைகின்றீர்களா?

      Delete
    2. Sri sir neenga solradhu correct sir.avar sonamthri pota ipo selection list irukra 60 percentku vela irukadhu(90 abvela).110ku mela eduthakuda..

      Delete
    3. 90,110 எடுத்த இளைஞர்களுக்குதான் இப்போது வேலை கிடைக்காது.ஆனால் பின் வரும் தேர்வுகளில் கண்டிப்பாக வாய்ப்பு இருக்கும்.இப்போது உள்ள முறையில் தேர்வாகாத சீனியர்கள் எப்போதும் தேர்வாக முடியாது.

      Delete
    4. Aged teachers bhadhika pattargal ena koorubavargal gavanathirku.....
      HISTORY MAJOR YEAR WISE PASSED CANDIDATES LIST
      1991-23 Candidates
      1990-48 "
      1989-82 "
      -------------------------------------------------
      AGED 30 AND ABOVE PASSED CANDIDATES
      1984-260 Candidates
      1983-239 "
      1982-263 "
      1981-250 "
      1980-184 "
      1979-188 "
      1978-161 "
      1977-133 "
      1976-152 "
      1975-142 "

      So fresh candidates and below 25 yrs ,who placed in selection list are all very low when comparing to the aged candidates.

      Delete
    5. தற்பொழுது நடைமுறையில் உள்ள வெயிட்டேஜ் முறை என்பது மிகப்பெரிய மோசடி…. நீ ஒன்றாம் வகுப்பில் சரியான மதிப்பெண்கள் பெறவில்லை அதனால் இன்று உனக்கு வேலையில்லை என்றால் அது எப்படி நகைப்புக்குரிய விசயமோ, அதைபோல் உள்ளது இந்த வெயிட்டேஜ் முறை.
      இனிவரும் காலங்களில் Degree மற்றும் B.Ed., படித்துவிட்டு வெளியில் வருபவர்களுக்கு அனைத்து கல்லூரிகளும் 90 லிருந்து 95 சதவிகித மதிப்பெண்கள் போட்டு அனுப்புவார்கள். அது 100 சதவிகிதம் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
      தற்பொழுது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் எதிர்காலத்தில் அடுத்தடுத்த தகுதித்தேர்வில் 110 மதிப்பெண்கள், அதற்குமேல் பெறுபவர்கள் கூட எக்காலத்திலும் பணி வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்படும்.
      வேலைவாய்ப்பு பதிவு மூப்பிற்கும், ஆசிரிய பணி அனுபவத்திற்குமே முன்னுரிமை வழங்க வேண்டும், அதுதான் நீதியும்கூட. இந்த வெயிட்டேஜ் முறையெனும் அநீதிக்கு முடிவு கட்டியே தீரவேண்டும். மூத்த ஆசிரிய நண்பர்கள் விழித்துக்கொண்டால் ஒழிய, இதற்கு விடிவே இல்லை.

      Delete
    6. his data is applicable for only history not for science and maths subjects.senoirs above 40 age definetly affected this wtge system.

      Delete
    7. அசோக் குமார் சார் நீங்கள் கூறுவது மிகவும் சரி.

      Delete
    8. ramadevi sethupandian madam. correct. it is only suitable for history . because vacancies are very high in history.

      Delete
  3. Yes. The same thing I am telling......

    ReplyDelete
  4. Trb ungal meethu payangara kobathil ulladhu.. angu sendru ungal peyarai ketaal koduthu vidaadheer. Ungal edhirkalamae kelvikuri aagividum. Kootathil mattumae pesungal. Thaniyaga ungal kural onginaal adhu aabathu. Etri vittu pinnaal nirpavarai nambi emandhu nirkaadheer.. trb ini enna seiyavum thayangadhu..

    ReplyDelete
    Replies
    1. கார்திவரதன் எம்பிஎ,
      "ஆடு நனையுதேனு ஓனாய் வருத்தப்பட்டுச்சாம்" அந்த மாதிரி இருக்குது உன் பேச்சு, அவனவன் வேலை பரிபோகிற‌தே என்று இருந்தால் உனக்கு நக்கலா..? சீனியர் எல்லாம் உனக்கு கேவலமா..? உனக்கு லிஷ்ட்ல பேரு வந்துருச்சுனா எப்படி வேனாலும் பெசுவயா..? போய் உன் வேலைய பாரு, பாதிக்கப்பட்டால் அவகளுக்குத்தான், நீ ஒன்னும் புத்தி சொல்ல தேவை இல்லை..

      Delete
    2. Mr.poongodi palanivelu un mark ku than enna? un cutoff than enna? old wt evlo? new wt evlo? PG TRB ku oru madhari selection procedure. B.T. Ku oru madhari Sec.Grade ku oru madhari. en IAS IPS GROUP IV, GR II UPSC Typist nu ovoru posting kum ovoru method i namma govt follow pannudhu. unaku problem na mattum kodi thokitu vara. +2 ku pin MBBS, BVSc, nu ellathukum mark seniyarity experience koduka sollu. Yan IAS IPS kum idha ellam kelu. poya poi padiya.

      Delete
  5. நடந்தது என்ன..?2012 ஆசிரியர் தகுதி தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு ஜூலை 12 ம் நாள் PAPER 1 முற்பகலிலும் PAPER 2 பிற்பகலிலும் வெறும் 1:30 மணி நேரத்தில் 150 மதிப்பெண்களுக்கு விடை அளிக்க வேண்டும், முக்கியமாக 90 மதிப்பெண் எடுத்ததால் தான் தேர்ச்சி வழங்கப்படும் என்ற நிபந்தனையோடு தமிழகத்தில் முதன் முதலாக இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. நேரமின்மை கேள்வித்தாளின் கடினம் காரணமாக இதில் 1% பேருக்கு குறைவாகவே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மதிப்பெண் சலுகை பற்றி பல பத்திரிகைகள் கருத்துதெரிவித்திருந்தன. அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் கருமமே கண்ணாக அரசும் TRB யும் TET-Supplementary EXAM யை அறிவித்தது. இந்த தேர்வை எழுத புதிய தேர்வர்களும் நீதிமன்றத்தின் ஆணை பெற்று விண்ணப்பித்தனர். முதல் தேர்வு நடந்தது போல் அக்டோபர் 14 ம் நாள் PAPER 1, PAPER 2 காலை மதியம் என ஒரே நாளில் நடத்தப்பட்டது. தேர்வு எழுத கால அவகாசம் 3 மணி நேரமாக வழங்கப்பட்டது. இதற்கிடையே மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் என உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் 20 நாட்களில் தேர்வு முடிவை அறிவித்து தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மூன்றே நாளில் சான்றிதழ் சரிபார்பை முடித்தது.தேர்ச்சி பெற்றவர்கள் போக இத்தேர்வில் 80 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்கள் கிட்டதட்ட 30 ஆயிரம் பேர் இருந்தனர். அப்பொழுது கூட மதிப்பெண் சலுகைஅளிக்கவில்லை. அப்போது எந்த ELECTION ம் வரவில்லை. தகுதி எள் முனை அளவு கூட குறைய கூடாது90 தகுதி மதிப்பெண் கட்டாயம் அதில் எவ்வித சமரசமும் இல்லை என உயர்நீதிமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 2014 பிப்ரவரி வரை நீதி தேவதையையே மிஞ்சும் அளவு அப்படி ஒரு கொள்கை பிடிப்புடன் அரசு கூறி வந்தது.2013 TET ஆகஸ்டு 17,18 ல் நடத்தப்பட்டது. இந்த தேர்விலும் 90 மதிப்பெண் எடுப்பது கட்டாயம் என TET திட்ட விளக்க குறிப்பில் ஆணித்தனமாக அச்சடித்து வழங்கியது. PAPER 2 தேர்வு எழுதப்போகும் நாள் பத்திரிகையில் ஒரு செய்தி"TET வினாத்தாள் வெளியானது" -தருமபுரி, சேலம். மனதை தேற்றிக்கொண்டு தேர்வு எழுதி முடித்து 3 மாதம் கழித்து தேர்வு முடிவை நவம்பர் மாதம் வெளியிட்டு 2 மாதத்திற்கு பிறகு ஐனவரி ல் மறுமுடிவு வெளியிட்டு CV முடித்து இறுதிபட்டியல் வெளியிடும் தருவாயில், பத்திரிகை நாளேடுகள், உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகள், முக்கியமாக TET தேர்வர்கள் இவர்கள் எல்லாம் கேட்டு மதிப்பெண் சலுகை வழங்காத அரசு.... AD ஆணையம் அச்சடித்து அனுப்பிய கடிதத்தில் 'மதிப்பெண் சலுகை அளிக்காவிடில் வன்கொடுமை சட்டம் பாயும்' என்ற ஒரே காரணத்தை காட்டி 110 விதியின் கீழ் சலுகை அளித்து சமூக நீதியை தாமதமாக நிலைநாட்டியது தேர்தலுக்கு ஒரு PLUS. என்றாலும் இந்த மத்திய AD ஆணையம் மதிப்பெண் சலுகை மட்டுமே வழங்க சொல்லி கூறியதே தவிர தமிழக அரசின் அரசாணையை மறக்க கூறவில்லை. 90 மதிப்பெண்பெற வேண்டும் என்ற அரசாணைபடி முதலில் தேர்வானவர்களுக்கு முன்னுரிமை வழங்கியபின்னரே இடஒதுக்கீடு 5% தளர்வு பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்குவதே நீதி ஆகும்.'சட்டம் இயற்றுபவரே அச்சட்டத்தை மீறவும் கூடாது மறக்கவும் கூடாது'அப்படி மீறியதால்"வேலியே பயிரை மேய்ந்தது" போல் ஆகிவிட்டது...அரசு இயற்றும் சட்டத்தை முதலில் அரசு மதிக்க வேண்டும்.TET ல் 90 மதிப்பெண் பெற்றும்தங்களுடைய பணி வாய்பை பறிகொடுத்து விட்டு இன்று போராடும் நிலைக்கு அரசால் தள்ளப்பட்டுள்ளனர் காரணம் காலம் போன கடைசியில் மதிப்பெண் தளர்வு வழங்கியது.போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். நம்பிக்கையுடன் இறைவனை பிராத்திப்போம்...நன்றி..

    ReplyDelete
    Replies
    1. Good article.Govt only solve this problem by discussing with educationist and experts and
      give a solution which should be acceptable by all kind of people.

      Delete
  6. Sabitha madam told in thanjai meeting verivil ¹11900 teachers niamanam in nelai edison thinathanthi paper

    ReplyDelete
  7. ஆசிரியர்களே மாண்புமிகு அம்மா அவர்களுக்கு அமைதிதான் முக்கியம் .5% மாற்ற முடியாது.அமைதியாக இருங்கள் பலன் கிடைக்கும்.

    ReplyDelete
  8. THIS IS THE GOOD ARTICLE ALL OF US PL REAF THIs

    ReplyDelete
  9. இதற்கு ஒரே தீர்
    ு...தேர்வு செய்யப்ப
    டாதவர்க
    ளுக்கு அடுத்தடுத்த
    பணிநியமனங்க
    ளில்
    முன்னுரிமை அ
    ளிப்பதே,..இது ஏ
    ன்
    எவருக்கும்
    புரியவில்லை..
    .அதற்கு போராடு
    ங்கள் ..நிச்சயம்
    வெற்றி கிடைக்கும்.,அதுதான்
    நியாமான
    கோரிக்கை..மீண்
    டும் மீண்டும்
    தகுதித்தேர்வு எ
    ழுதிக்கொண்டே
    இருக்கமுடியாது

    ReplyDelete
    Replies
    1. Prathap AN sir i agree with u sir..this is only a neutral request and it only gives salvation to this problem...

      Delete
    2. I also agree with pratap....Vacant increase pannanum and priority to next exams.. Thts only possible.. Itha ketu porattam panna kandipa oru nalla result kedikum... Pls think like that.....

      Delete
    3. Undertaker sir...u r correct...thn sorry unga coment nethu late ahthan pathen...

      s sir nethu trb il ketatharku 2list cnftm bt eppanu theriathu sonnanga sir...
      Thank u...

      Delete
    4. NEENKA SOLLUKIRATHU THAVARU... TET PASS PANNINAVARKALUKKU YEN MUNNURIMAI KODUKKANUM? SUPPOSE INTHA THADAVAI ORU NAPAR TET EZHUTHI FAIL AYITTEN ENNU VACHIDUNKE. ANTHA ALUKKU KAICHAL.... ANAL NEXT TET ILE 125 MARK EDUTHIRUKKU. AVARUKKU VELAI KUDUKKA KOODATHA? 2013 TET PASSED CANDIDATES VELAI KUDUTHA PIRAKU THAN ANTHA ALUKKU VELAI ENTRAL KODUMAI... SO ETHAVATHU SOLLI SOLUTION ENTU CHOLLAKKOOODATHU... RIGHT...

      Delete
  10. Relaxation announced 5 months over,go71 3 months over now porratam means selfish only

    ReplyDelete
    Replies
    1. U R RIGHT KUMAR.....am not a TET candidate.....

      Delete
  11. ellam kadanthu pogumada entha unmayai arindavan nianiyada

    ReplyDelete
  12. Paper 1?????????¿???¿?????????????????

    ReplyDelete
  13. All Tet friends enakku oru ragasiya news kidaitthllathu Today TRB yarullam porangale avarkalai Police kandippa Arest panni FIR poduvangalam so please yavan petchiyum kekathinga evanum ungalukku onnu naa varamattan . Please don't,go to TRB if u go FIR,F.I.R, confirm appuram second listilla eppayume goverment velai illai.

    ReplyDelete
  14. Hai friends Government kandippa second list viduvanga but neenga panna pora problettha paatha konjam kodu vaaippu illannu 100% thiriyuthu so pogathinga FIR confirm ungal dream avvaluthan ,kandippa arest panna vidamattanga so pogathinga.

    ReplyDelete
  15. What about Paper 1 ... any details

    ReplyDelete
  16. Naanu 90 and above than netthu nann kuda kalundhukitten ellam neram aga,aga, poittanga ,ippadithan neenga indrum maataporinga evan petchiyum kakathinga oru than kooda unga pinnadi varamattan enakku netthu vanda kathi than ungallukku varum so yarum TRB kku pogathinga appuram unga isstam promisa enakku news kidattullsthu poninga Arest confirm,FIR Confirm,Jail Confirm,unga government Job Dream pochi kidaikathu appuram unga isstam.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. இங்கு command செய்யும் சிலருக்கு எனது அன்பான வேண்டுகோள்
    போராட்டம் செய்தவர்களுக்கும் போராட்டம் பிடிக்காமல் இருப்பவரும்
    தயவுசெய்து தரக்குறைவான வார்த்தை இங்கு பதிவு செய்ய வேண்டாம் ஏனெனில் நாம் நல்ல சமுதாயம் உருவாக்க உள்ள ஆசிரியர் நமது வார்த்தை கீழ்த்தரமான முறையில் இருந்தால் நம்மை பற்றி தவறான எண்ணம்தான் தோன்றும். உங்கள் சொந்த கருத்து மட்டுமே பதிவு செய்யவும்

    ReplyDelete
    Replies
    1. மிக சரி.. ஒரு ஆசிரியனுக்கு பொறுமையும், பொறுப்பும் மிக மிக அவசியம். அரசு பணி கிடைத்தால் மட்டும் ஆசிரியன் அல்ல... ஆசிரியர் படிப்பு படிக்கும் காலத்திலிருந்தே ஆசிரியருக்கான தகுதியை அடைந்துவிட்டோம் என்பதை மறக்க முடியாது. தனிப்பட்ட குடும்ப, பொருளாதார சூழ்நிலையால் ஆசிரியர் என்பதை மறந்து, சாதாரண மனிதர்களாகவே இங்கு பெரும்பாலானோர் கருத்து பகிர்கின்றனர். அது வெட்க்கேடு.. வேதனை அளிப்பது. பொறுப்புணர்ந்து, சரியான வார்த்தைகளை பயன்படுத்தி, அமைதியான மனநிலையில் கருத்து பகிருங்க.. அப்போதுதான் நீங்கள் முழுமையான ஆசிரிய தகுதியை பெறுகிறீர்கள்.

      Delete
    2. மன்னிக்கவும் சார் ஆசிரியன் அல்ல ஆசிரியர்

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  19. Governmentnu ethuku iruku sir..pesama namale elam policyum make panalame..after some days kalichu 10 and 12 th cancel panalamnu koda solveenga... 22 yrs munadi mudichavangaluku u.g trb and p.g. trb varave illaya....passs pana than ungaluku therama illaya...unga vaipu miss agiduchu...velaikedaikalana varutham sir ..illanu sollala but eppa pathalum tet la changes pannaa solradhu sariya senior teachers...unga experienceku nenga matureda nadanthuka vendama......sir...nenga panra porattatha 2011 tet announce panum podhu panirundha kooda pravala..ungaluku job illanu sonadhum panreengale sariya seniors...ippa weightage mathnalum ethna perku velai kedaikum sollunga

    Selection listla change vandha kandipa selected candidates problem pannuvanga...unguluku kodutha vaippu poiduchu.....seniiorityku mukiathuvam venumna aparam ethuku tet .... 12 th mark .1 than variation katum but tet .6 kattum ...
    So tet la 130 edutha en seniors vara mudiyadhu...appadi eduthu yarukavadhu velai illana sollunga...nangalum ungaluku support

    ReplyDelete
    Replies
    1. Tet variation 0.6 illa mr.sandeep....0.4 only...
      90 vanga mudiyama 82 mattum vangittu engala mattum 130 vangunganu asaultta solreenga?
      Manasatchiyae illaya?

      Delete
    2. Sorry sir .4 than..yaru 82 nu solrenga.. tetla above 100.. manasatchi engaluku iruku..ungaluku irukanu parunga...select agalanu therinchu thana ivlo porattam...government enna key kodukara bommaiya..nama ishtathuku mathuvangala...

      Delete
    3. Marikkitaethaanae irukku sir..
      pass panniyavargalil seniority padi appointment'nu sonna neenga porada maatingala?
      Appa arasu bommayillai athhukku istathukku key kodokka koodathunu sollikkittu chumma iruppeengala?
      tet first markae 126 thaan engala 130 edukka sonna?

      Delete
  20. Supreme court poromnu oru nanbar solirukar..supreme courtku pona vanga mapla tea coffe sapdunu solvangalaa..supreme court poradhuku ayiram procedure iruku....amaithiya irunga....indha porattangal unga future kandippa badhikum... adutha tetku padinga..

    ReplyDelete
    Replies
    1. good advise......Hard wrk never fails.....

      Delete
    2. உண்மை சந்தீப்
      படிக்ககூட வேண்டாம் வரும் tet ல் முன்னுரிமை கேட்கலாம் அல்லவா பின் ஏன் GO71 க்கு எதிராக போராட்டம் இந்த G.o உயர் நீதிமன்றம் கொடுத்தது என்பதை நினைவில் வைத்து போராடுங்கள்

      Delete

    3. As mr Govindaraj is telling in his article, the demands seems to be vague. and I feel it is selfish too.... Pls be clear in your demands and see to that not only you get benefited but all the future TET examines are also benefited....... I heard few comments from public who were waiting for bus .. They were discussing this and they were saying that THEY ARE SELFISH.. AND SINCE THEIR NAME WAS NOT IT THE LIST ONLY THEY ARE PROTESTING...??? WAS THERE ANYBODY WHO GO 90 AND ABOVE AND ALSO SELECTED EXTENDING THEIR SUPPORT?? " .... I THINK THIS IS THE WAY THE PUBLIC ALL OVER TAMILNADU WOULD HAVE THOUGHT ..... If you need public support also change your demands

      Delete
    4. Asking priority OR assurance in forthcoming vacancies is a correct solution.

      Delete
  21. hai guys ..pls participate all the canditates .n
    this is ur life and think abt ur future ...
    anda hai suresh sollarathu sutham poi ..100% poyi .Nancy yesterday angathan enaku police duty ..
    nalla mudivu varum ..all is well ..

    ReplyDelete
  22. http://epaper.dailythanthi.com/showxml.aspx?id=16362942&code=2407

    ReplyDelete
  23. 11ஆயிரத்து 900 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

    பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் தகவல்


    தஞ்சாவூர், ஆக.19-

    11ஆயிரத்து 900 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் கூறினார்.

    சபிதா பேச்சு

    தஞ்சையில் நடந்த 5 மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் சபிதா பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா தரமான கல்வியை வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகள் முதலிடம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

    மேலும், ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உத்தரவிட்டு கடந்த மூன்று ஆண்டுகளில் 53 ஆயிரத்து 288 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் 11ஆயிரத்து 900 ஆசிரிய ஆசிரியைகள் நியமனம் செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவினை வழங்க உள்ளார். மாணவர்கள் கல்வி இடைநிற்றல் தவிர்க்கும் பொருட்டு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. autha tet vachi. adutha rendu varusa thkku engala alaya udarathuku readiyaitangppa....

    ReplyDelete
  26. Dear honarable judges....very good morning .After exam result cv then relaxation.whatever it is,it should affect cv compleated candidatdes.Relaxatation is a social justice. Ok, according to conscience priority should be given to before relaxation candidates.

    ReplyDelete
  27. தேர்வு பட்டியலுக்கு காத்திருந்து... காத்திருந்து.. ஒருவழியாக வெளியிட்டப்பட்ட பிறகும், தேர்வாகதவர்களின் ஆதங்கத்தால் போராட்டங்கள் தொடர்கின்றன. எப்படியும் ஒரு முடிவை அரசு எட்டும் என்பதில் சந்தேகமில்லை. போராடுபவர்களுக்கு பலன் கிடைத்தால் மகிழ்ச்சிதான். அதுவே அவர்களுக்கு போறாத காலமாக இருந்துவிட்டால் எண்ணி பார்க்கவே முடியாத துன்பம் வந்து சேர்ந்துவிடுமே...! சிந்தித்து செயல்படுவது நல்லது.

    வாய்ப்புகள் அனைவருக்கும் கொட்டி கிடக்கிறது. இது இல்லை என்றால் இதைவிட இன்னும் நல்ல வாய்ப்பு வரும் நம்பி இருப்பவர்கள் என்றுமே தோற்றுப்போவதில்லை.

    நம்பிக்கையோடு அடுத்த தேர்வுக்கு தயாராகுங்கள்... தேர்வில் மட்டுமல்ல.. வாழ்க்கையிலும் வெல்வீர்கள்.

    கீழுள்ள கட்டுரை படியுங்கள் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

    எது கூடாது?

    ReplyDelete
  28. waitage இல் +2 மதிப்பெண் கணக்கில் கொள்ளும்போது உயர் தகுதியான,PG,MEd,MEd,க்கும் மதிப்பெண் வழங்கினால் தானே ,அது சரியான அளவீடு ஆக இருக்க முடியும்ஏன் இதை யாரும் வழியுருத்தவில்லை

    ReplyDelete
  29. Our c.m education departmrntku romba importance tharuvanga...talented personsku kandippa velai undu....porumai avasiyam ...porattangall, case file panradhu idhelam delay ku than chance... 2 nd listannounce panlamnu nenaicha kooda ippa adha seivangala...namaku naame problem create panikarom.. wait..be patient..All for well

    ReplyDelete
  30. Ok.. this is my first comment in Kalviseithi. I just want to ask some questions to who are protesting now..
    1. Assume that 1 person is studying consistently well and he is getting good marks in 10th, 12th, and B.ed and in TET exam too..
    2. Second person is just getting passed in all the school and college exams and by luck(or just 2 or 3 months preparation for TET Exam) he got above 90 in TET exam.
    3. Which type of teachers are good for the students and for the society. The one who is consistently performing good or the one who passed just by last minute preparation?
    4. Yes, i am against the 5 % relaxation.
    5. If you are asking to remove weightage system then u r SELFISH.

    Take cricket as example. The team which is playing good in league, quarter final, semi final and final matches should be the champion. Naanga directa vandhu final vilayaduvom engaluku than 1st preferance kodukanum nu keta ungala SELFISH nu sollama enna solvom?

    ReplyDelete
    Replies
    1. Mr. Dhasan K,

      Your thinking is wrong. In 1990, 1 Kg rice price is Rs.5/-. Now 1 Kg rice is Rs.50/- due to price hike. In the above said comparison, a quantity is same. but the price is different. Now you don't get 1 Kg. rice for Rs. 5. As well as, in education department, in 1990 syllabus is entirely different than 2014 syllabus in +2, degree, Dted, Bed and also all kinds of studies. So don't treat all are equal. The government must give some preference for seniors candidates as per common justice.

      Delete
  31. Oh.. is it?
    Year by year syllabus are getting complex.. i am sure unga kaalathula padicha syllabusa vida current syllabus is complex. idhai ungalala maruka mudiyuma? Apo neenga olunga padikala. Ipa youths lam olunga padikuranga.
    More over, you are not going to teach students from ur era.. u r going to teach current students. So obviously current syllabusla padichu, ella exams layum nalla marks score panniruka elligible teachers kidaikuradhula enna pblm?. Think practically sir...

    ReplyDelete
    Replies
    1. Ippa Olunga padichu current syllabusla TET examla athigama Mark edutha seniors than Poraduranga Mr.Dhasan.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி