அக்.,15ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:புதிதாக பெயர் சேர்க்கவும் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2014

அக்.,15ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:புதிதாக பெயர் சேர்க்கவும் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பெயர் பட்டியல் அக்.,15ல் வெளியிடப்படுகிறது. அன்று முதல் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் விண்ணப்பிக்கும் வாக்காளர்

சுருக்கத்திருத்தப்பணிகளும் துவங்குகின்றன.இந்தாண்டு ஜன.,10ல் புதிய வாக்காளர் பெயர்பட்டியல், லோக்சபா தேர்தலையொட்டி ஏப்.,5ல் வாக்காளர் துணைப்பட்டியல் வெளியிடப்பட்டன. அதன்பின் தொடர் பெயர் சேர்ப்பு, திருத்தப்பணிகள் நடந்து வருகின்றன. அக்.,10ல் அப்பணி முடிகிறது. இம்மூன்று பட்டியல்களும் ஒன்றாக தொகுக்கப்பட்டு அக்.,15ல் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் பெயர் இடம்பெறாதவர்கள் அன்று துவங்கி 20 நாட்கள் வரை நடக்கும் வாக்காளர் சுருக்கத்திருத்த பட்டியல் பணிகளில் பெயர் சேர்க்க உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதும் 2015 ஜன.,1ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியோர் தங்களை பட்டியலில் புதிய வாக்காளராக பெயர் சேர்க்கவும், ஏற்கனவே உள்ள பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிக்கான மனுக்களை தாலுகா, நகராட்சி அலுவலகங்களில் தரலாம். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். கல்லுாரி மாணவர்களை இப்பட்டியலில் சேர்க்க மாணவ பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பெயர் சேர்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்,என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி