கல்வி நிறுவனங்களின் உலக தரம் : முதல் 200 இடங்களில் இந்தியா இடம்பெறவில்லை...? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2014

கல்வி நிறுவனங்களின் உலக தரம் : முதல் 200 இடங்களில் இந்தியா இடம்பெறவில்லை...?

 உலகம் முழுவதும் உள்ள 31 நாடுகளைச் சேர்ந்த 700 பல்கலைக்கழகங்களின் ரேங்க் பட்டியல் இன்று லண்டனில் வெளியிட்டப்பட்டது. அதில் முதல் 200 இடங்களில் இந்திய கல்வி நிறுவனங்கள் ஒன்று கூற இடம்பெறவில்லை.

கடந்த முறை இந்த பட்டியலில் 12 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது 11 கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. மும்பை ஐ.ஐ.டி., 222 வது இடத்தையும், டில்லி ஐ.ஐ.டி 235 வது இடத்தையும், கான்பூர் ஐ.ஐ.டி., 300 வது இடத்தையும், சென்னை ஐ.ஐ.டி., 322 வது இடத்தையும், காரக்பூர் சென்னை 324 வது இடத்தையும் பெற்றுள்ளன.

இப்பட்டியிலில் 400 வது இடத்திற்கு கீழ், டில்லி பல்கலைக்கழகம், ரூர்கி ஐ.ஐ.டி., கவுகாத்தி ஐ.ஐ.டி., -, மும்பை பல்கலைக்கழகம், கோல்கட்டா பல்கலைக்கழகம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், புனே பல்கலைக்கழகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தின் ஹார்வே ர்டு பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஸ்டேன் போர்டு, கால்டெக், பிரின்சிடென், யேல் பல்கலைக்கழகங்கள் முதல் 10 ரேங்க்களுக்குள் வந்துள்ளன. அமெரிக்காவின் 51 கல்வி நிறுவனங்கள், இங்கிலாந்தின் 29 நிறுவனங்கள், ஜெர்மனியின் 13 நிறுவனங்கள், நெதர்லாந்தின் 11 நிறுவனங்கள், கனடாவின் 10 நிறுவனங்கள், ஜப்பானின் 10 மற்றும் ஆஸ்திரேலியாவின் 8 கல்வி நிறுவனங்கள் முதல் 200 இடங்களுக்குள் தேர்வாகி உள்ளன.

ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலை., பெரும்பாலான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும், உலகில் உள்ள பல பணக்கார கல்வி நிறுவனங்களை காட்டிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் தரமான ஆய்வு நடத்தப்படுவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆராய்ச்சி, கற்பித்தல், வேலைவாயப்பு மற்றும் சர்வதேச தரம் ஆகியவற்றை வைத்து, கல்வி நிறுவனங்களின் தரம் கணக்கிடப்படுகிறது.

15 comments:

  1. Replies
    1. INDIA is developing country.. All are on the politicians HAND...

      Delete
  2. The children are eating recently.

    1). Muttai briyani

    2). Kalavai satham

    Soon they will become clever.....

    ReplyDelete
  3. சென்னையில் தீர்ப்பு கிடைத்தவுடன் அரசு அத்தீர்ப்பின் நகலைக்கொண்டு மதுரையில் மேல்முறையீடு செய்து,தனிநீதிபதியின் கையொப்பம் பெற்றவுடன் அத்தடையாணை தானாக நீங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,,இம்முறைக்கு RES JUDICATA ( A MATTER ALREADY SETTLED IN COURT, CANNOT BE RAISED AGAIN) என்று பெயர்....

    ReplyDelete
  4. Replies
    1. In Andra Pradesh they are conducting Two exams for the appointment of Teachers.. i.e.. TET and TRT ( Teacher Recruitment Test)

      Delete
    2. Present Weightage system is entirely wrong.. Better to cancel this Weightage system and conduct another exam from their major subject like TRT in AP..

      Delete
  5. இவர்கள் என்னதான் தர வரிசை பட்டியலை தயாரித்தாலும், NASAவில் பணிபுரிவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. தரம் என்பது இந்நிறுவனங்களில் இருந்தாலும் அதை விட சிறந்தது தனி மனிதனின் திறமை. அது நம் இந்தியர்களிடம் மிக அதிகம் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. சார் சூப்பர் சார்

      Delete
  6. Thank you Mr Maniyarasan

    Dear Mr Jaganathan, you are absolutely right.

    Indian Education System can create lakhs and lakhs of students to serve under Bill Gates. But it can't create one Bill Gates. That is the pathetic situation we follow.

    ReplyDelete
    Replies
    1. உண்மை உண்மை சார்
      ஆனால் மேற்கத்திய நாட்டு இளைஞன் ஒரு சுதந்திரப் பறவை ஆனால் நாமோ மனதளவில் இன்றும் குடும்ப பாரம் அல்லது சமுக பாரம் மற்றும் பல பாரங்களுக்காக
      ஒரு வேலைக்காரனாகவே காலம் தள்ளுகின்றோம்
      தன்னை சார்ந்தவர்களுக்காக அவன் பல கனவுகளை கைவிட வேன்டியுள்ளது நான் சொல்றது கரக்டா சார்
      இல்ல எதாவது உளறிவிட்டேனா

      Delete
    2. Nothing wrong. The education system we follow is not up to the level

      Delete
  7. Indians are middle knowledge and marvellous knowledge

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி