2013-ன் இன்றைய அவல நிலைஓ இது தான் அரசியலோ!!!! பள்ளிபடிப்பிலே இராஜதந்திரத்தை கட்டாயபாடமாக்க வேண்டுமோ???? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2014

2013-ன் இன்றைய அவல நிலைஓ இது தான் அரசியலோ!!!! பள்ளிபடிப்பிலே இராஜதந்திரத்தை கட்டாயபாடமாக்க வேண்டுமோ????


அரசியல் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அது அரசியலாளர்களுக்கும் அது சார்ந்த இராஜதந்திரிகளுக்கும் மட்டுமே உரியது என நினைப்பவர்களும் உண்டு.
சிந்திப்பதே நமக்காகாது இவையெல்லாம் நமக்கு சரிபட்டு வராது என மிரள வைக்கின்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திய அரசியல், ஒரு தனிமனிதன் தனது தேவையை பூர்த்திசெய்து கொள்ளஎல்லா முயற்சியையும் எடுத்து தனிமனிதனின் தேவைக்கானதே அரசியல் என அறியாது, அரசியலிருந்து தன்னைத்தானே அந்நியப் படுத்திக்கொள்கிறான் ஒரு சாதாரண மனிதன்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும்
- - - (குறள்388)

அரசியல் என்றால் என்ன?

அரசியல் என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு தத்துவம் அல்லது கொள்கை. அரசியல் என்பது வாழும் முறை (Way of life)அல்லது வாழ்க்கை முறை (Way of living)ஆகும். அரசியல் என்பது சமுதாய வாழ்க்கைக்கு அமைதியைத் தருவது. சமுதாயத்தில் பலர் கூடி வாழ்வதற்கும்,பொருளியல் ஒழுங்கியல் முறைகளுக்கும் அரசியலே வழிவகுக்கிறது. அறநெறிகளில் மனிதகுலம் ஒன்றி நின்று வாழ்வதை உறுதிப்படுத்தத்தான் அரசியல் தோன்றுகிறது,தொண்டு செய்கிறது.

அரசியல் தத்துவங்கள் மனித உலக வரலாற்றின் நிகழ்வுகளிலிருந்து தோற்றம் பெறுகின்றன.சிறந்த அரசியல் என்பது ஒழுங்குகள் நிலவும். வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் எளிதில் கிடைக்கும். அறிவுத்துறை மேம்படும். பகை ஒடுங்கிப் பண்பாடு விளங்கும்.அரசியலின் பயன் அரசியலை நடத்துபவர்களுக்கன்று;
மக்களுக்கே!ஆனால்!!!!

நீதிமன்றத்தில்TET-2013வழக்கின் போக்கை சாதகமாக திசை திருப்பி, ஆதாயம் தேடிக்கொள்வது தான் இராஜதந்திரமோ.இதைதான் அமரர் மூதறிஞர் அண்ணாதுரை.சட்டம் ஒருஇருட்டரை;வக்கீலின் வாதம் ஒளிவிளக்கு”என்று சொல்லியிருக்கிறார்....வழக்காடு மன்றம் ஒரு போட்டியின் களம் என்பதால் தான், இங்கு திறமையானவர்கள், சாணக்கியர்கள், தங்கள்இராஜதந்திரங்களை பயன்படுத்தி வாத திறமையால் வென்று கொள்ளுங்கள்,நான் (நீதியின் தேவதை) கண்களை மூடிக்கொள்கிறேன்என்பதைப்போல் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் காட்டப்பட்டுள்ளதோ??

இந்த அரசியல் விளையாட்டில் இராஜதந்திரங்களில்கை தேர்ந்தவர்கள் தான் வெற்றி பெறமுடியும், அப்படியென்றால் ஒரு சாதாரன குடிமகன் இந்தஇராஜதந்திரம் தெரிந்திருந்தால் தான் இங்கு வாழக்கையில் அவன்தன்தேவையை பூர்த்திசெய்துகொள்ள முடியுமோ??.அப்படியென்றால்இனிவரும் காலங்களில் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தொடக்கமுதலே பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் இராஜதந்திரத்தைப் பயன்படுத்தி எப்படி வழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று கற்றுக்கொடுப்பதை கட்டாயமாக்க வேண்டும். இல்லையென்றால் வரும்காலம் குழந்தைகளுக்கு இருண்ட காலமாகிவிடும்.

இவன்
A ALEXANDER SOLOMON

1 comment:

  1. கண்டிப்பாக sir ஏமாறாமல் இருக்க கற்று கொடுக்க வேண்டும்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி