பாரத ஸ்டேட் வங்கியில் 2986 காலியிடங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2014

பாரத ஸ்டேட் வங்கியில் 2986 காலியிடங்கள்


பாரத ஸ்டேட் வங்கி, அதன் அஸோஸியேட் வங்கிகளின் புரோபேஷனரி ஆபீஸர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. 2986 பணியிடங்களுக்குத் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களை இட்டு நிரப்ப பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும்.

காலிப்பணியிடங்கள்மொத்தம் 2986.

இதில் எஸ்பிடி- 1136,
எஸ்பிஹெச்-900,
எஸ்பிஎம்-500,
எஸ்பிபிஜே-350,
எஸ்பிபி-100.

வயது:

2014, செப்டம்பர் 1 அன்று 21-30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 1984, செப்டம்பர் 2-லிருந்து 1993 செப்டம்பர் 1-க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அரசின் விதிமுறைப்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்புச் சலுகை உண்டு.கல்விஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.விண்ணப்பக் கட்டணம்எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளி ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100, பிற பிரிவினருக்கு ரூ.500. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனிலோ செலான் மூலமாகவோ கட்டலாம். செலான் மூலம் கட்டினால் விண்ணப்பித்த மூன்று வேலை நாள்களுக்குள் அருகிலுள்ள வங்கிக் கிளையில் கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

உரிய தகுதியுள்ளவர்கள் www.statebankofindia.com என்னும் இணையதளத்தில் அல்லது www.sbi.co.in என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன்பு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் கையெழுத்தையும் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். முறையாக விவரங்களை உள்ளீடு செய்து முடித்த பின்னர் விண்ணப்பத்தைச் சேமித்த பின்னர் தரப்படும் ரெஜிஸ்ட்ரேஷன் எண், பாஸ்வேர்டு ஆகியவற்றைக் குறித்துவைத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தில் ஏதேனும் மாறுதல் செய்ய வேண்டுமெனில் மீண்டும் அதை மேற்கொள்ள இவைபயன்படும். விண்ணப்பத்தைச் சேமித்தவுடன் விண்ணப்ப கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதன்பின்னர்தான் விண்ணப்பிக்கும் வழிமுறை நிறைவுபெறும்.

விண்ணப்பித்த பின்னர், விண்ணப்பத்தையும் பணம் செலுத்திய ஆன்லைன் ரசீதையும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை எஸ்பிஐ இணையதளத்தில் 27.10.2014 முதல் பதிவிறக்கம் செய்துபிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்.ஹால் டிக்கெட் அஞ்சல் வழியே அனுப்பப்பட மாட்டாது. எழுத்துத் தேர்வுக்குச் செல்லும்போது ஹால் டிக்கெட்டுடன் வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்ற அடையாள அட்டை ஒன்றையும் கொண்டுசெல்ல வேண்டும். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 15 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

முக்கிய நாள்கள்

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 01.09.2014

விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.09.2014

ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் நாள்கள்: 01.09.2014 -18.09.2014

செலான் மூலம் கட்டணம் செலுத்தும் நாள்கள்: 03.09.2014- 20.09.2014

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் - 2014

கூடுதல் விவரங்களுக்கு www.sbi.co.in

89 comments:

  1. Kalaignar tvFLASH NEWS:
    தமிழக அரசு அனைத்து பிரச்சனைகளிலும் அலட்சியம் காட்டுவது போல ஆசிரியர் பிரச்சனையிலும் அலட்சியப்படுத்துவது கண்டணத்திற்க்குரியது என்று கலைஞர் தெரிவித்துள்ளார்.மேலும் அரசு ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. நேற்றைய எங்களது முயற்சிகள். ...
      Trb ல் சபீதா மேடம் அவர்களை சந்தித்து மனு கொடுக்க முயற்சி செய்தோம் .
      சில reason னால அவர்கள் receive பண்ணல..
      தலைமை செயலகத்தில் CM ன் தனிப்பிரிவில் innocent Dhiya ias( cm personal PA ) அவர்களிடம் மனு கொடுத்தோம். அவர் நமது கோரிக்கைக்கு செவி சாய்த்தார்.
      மேலும் PUDHIYA THALAIMURAI, KALAIGNAR, POLIMER, CAPTAIN , THANTHI போன்ற மீடியாக்களில் நண்பர்கள் சத்திய மூர்த்தி, ரவி மற்றும் சிலர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இருப்பினும் ஒரு மீடியாக்கள் மட்டுமே நமது கருத்தை வெளியிட்டன.

      இன்று மதியம் 2 மணியளவில் அரசு சார்பில் INNOCENT DHIVYAAB IAS ( personal assistant , CM) அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஏதாவது ஒரு வகையில் சாதகமான எடுப்பதாக கூறினார்.

      ( we people kindly thank Mr. Mahendra Dhoni for giving us financial support)

      Delete
    2. தமிழக முன்னால் முதல்வர் கலைஞர் அறிக்கை

      பட்டதாரி ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தை மற்ற போராட்டம் போல் அலட்சியம் செய்யாமல் தமிழக முதல்வர் உடனடியாக அவர்களை அழைத்து பேசவேண்டும் என கூறியுள்ளார்

      தொலைக்காட்சி செய்தி

      Delete
    3. ippodhu thaan kalaigar kural koduthullar melum maruthuvar ayya mattrum captan,.................. katchi thalaivargalin aadharavum thevai

      Delete
    4. THOSE WHO GO FOR COUNSELLING PLS NOTE WHAT ALL U HAVE TO TAKE WITH U SOME THINGS MAY NOT BE NEEDED BUT IF THEY ASK U CANNOT RUN TO UR HOUSE TO TAKE SO KINDLY NOTE

      SELECTION LETTER
      HALL TICKET
      ORIGINAL CERTIFICATES
      PASSPORT SIZE PHOTO
      CONDUCT CERTIFICATE
      2 SETS OF XEROX COPIES OF ALL CERTIFICATES

      BE PREPARED IT MAY GO UP TO NIGHT 8 PM TO GET UR ORDER
      MAKE ARRANGEMENTS FOR THAT TOO BECAUSE MANY HAVE CHILDREN TO TAKE CARE OF

      I SAY THIS BECAUSE NO OF ORDERS FOR PAST 4 DAYS WAS NEARLY 4000 BUT NEXT THREE DAYS IT IS 11000+




      Delete
    5. sandiyar sir unga gmailuku oru msg anupiruken reply pannunga gp4 xmku ethellam prepare pannanum muthukumar.kaushika@gmail.com ku reply anupunga

      Delete
    6. Any krishnagiri friends is there... One paper 1 friend is asking about some blocks... Need details about mathur.. Burgoor. Vepanampatti..... Cherampalli.... Thali... Which one is better choice plzzzzz help us

      Delete
    7. ----------------------—-
      முக்கிய செய்தி
      -------------------------

      வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் நடைபெரும்.

      அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

      நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

      இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.

      வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

      வாழ்க வளமுடன்.

      Delete
  2. நான் நாளை கலந்தாய்வுக்கு செல்கிறேன்.எழுச்சிமிக்க புரட்ச்சியான மாணவ சமுதாயத்தை.சுயசிந்தனை சுயமரியாதை உள்ள மாணவ சமுதாயத்தை உருவாக்க பணியாற்ற போகிறேன்

    ReplyDelete
    Replies
    1. GO AND GET READY FOR COUNSELLING DO NOT BLABBER
      பவி எதார்த்தமான வார்த்தைகள் தான் இன்றைய மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களிடம் எதிர்பார்ப்பது

      Delete
    2. Conduct certificate and xerox copy of certificate not need . Dont confuse pls

      Delete
    3. வாழ்த்துகள் பவி அவர்களே!

      Delete
  3. நான் நல்ல அரசியல் வாதிகளை உருவாக்க போறேன்.

    ReplyDelete
    Replies
    1. veandaam, avargalai natramizh peasum thamizhargalaaga uruvaakungal, neengal ninaipathaivida nallavargalaaga varuvargal.
      Aasiriyargal anaivarukum oru siriya veandugol..... ennavendraal.... paadam nadathum bothu example-ku muthalil thamizhargalai solli pinnar matravargalai sollungal... maanavargalidaiyea thaai mozhi patrai yearpaduthungal thozhargale..... nam nilai nam pillaigaluku vara kudaathu ithanai manathil kollavum. thanglish veandaam... thamizh, english irandaiyum thanithaniyaga peasum alavirku aalaakkividungal..... kozhai thanamaana pazha mozhigalai yellam othukivittu thunichalaana kathaigalai paadathin idaiyidaiyea vithaiyungal.....

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Kalaigarukku Nantri Nanntri.Valga Pallandukal.

    ReplyDelete
  6. THANKS TO OUR KALAINGAR... AND WE WILL BE THANKFUL TO AMMA FOR GOING TO DO FAVOUR FOR THE TEACHERS THOSE WHO SCORED HIGH MARKS IN TET... WE TRUST YOU AMMA...

    ReplyDelete
  7. MY HEARTY THANKS TO THE TEACHERS THOSE WHO ARE FIGHTING FOR ALL... SORRY DEARS I AM UNABLE TO BE WITH YOU.. KEEP DOING.. SUCCESS WILL BE YOURS... AMMA WILL CONSIDER US AND DEFENETLY WILL DO FAVOUR FOR US....

    ReplyDelete
  8. Those who r going to attend counseling tmrw,pls update the vacancy details..it wil b very useful for chennai,tuticorin,mdu candidates.pls help us.

    ReplyDelete
  9. Engal poraatta vetrikkana countdown start aaiduchu....

    ReplyDelete
    Replies
    1. நீ தான் டி இ டி எழுதவே இல்லையே உனக்கு ஏன் இந்த வெத்து ஜம்பம்

      என்ன திட்டினாலும் திருந்த மாட்ட

      ஓகே வாழ்க கைப்புள்ள ராஜலிங்கம்

      இப்பவாச்சும் திருந்து

      Delete
    2. "EMPTY VESSELS MAKE NOISE"

      U PROVED IT RAJU

      BE PROUD???????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. RESPECTED ADMIN

      PLS BAN ME FROM POSTING COMMENTS BUT DO ME ONE FAVOUR

      BAN THIS EMPTY VESSEL RAJU FROM POSTING IDIOTIC COMMENTS PLEASE

      I BEG U ADMIN

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Priya mam plz delete ur comment its not good for our......

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. PRIYA MADAM PLS DO NOT PUT SUCH COMMENTS U MAY BE ARRESTED FOR SUCH COMMENTS PLS DELETE SUCH COMMENTS

      U HAVE THE RIGHT TO ASK FROM THE GOVERNMENTS BUT U R NOT SUPPOSED TO DICTATE WHAT GOVT. SHOULD DO

      Delete
  11. நாளை கலந்தாய்வுக்கு என்னவெல்லாம் கொண்டு போக வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. SELECTION LETTER
      HALL TICKET
      ORIGINAL CERTIFICATES
      PASSPORT SIZE PHOTO
      CONDUCT CERTIFICATE
      2 SETS OF XEROX COPIES OF ALL CERTIFICATES

      BE PREPARED IT MAY GO UP TO NIGHT 8 PM TO GET UR ORDER
      MAKE ARRANGEMENTS FOR THAT TOO BECAUSE MANY HAVE CHILDREN TO TAKE CARE OF

      I SAY THIS BECAUSE NO OF ORDERS FOR PAST 4 DAYS WAS NEARLY 4000 BUT NEXT THREE DAYS IT IS 11000+

      Delete
    2. நன்றி ஆசிரியன்

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  12. Mr.aasriyan avar tet eludinadala dan ivlo thooram poratam pani avar urimaia kekarar
    Nenga counseling aten panravangaluku enana kondu poganum nu advise matum panra velaia parunga.

    ReplyDelete
  13. அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.தங்களது வாழ்வாதரத்திற்காக போராடும் ஆசிரியர்களும் பணி வாய்ப்பு பெற இறைவனிடம் வேண்டி கொள்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Apadingala alwin thomas. Very thanks. Nenga enga contract eduthu building painting work panrengalo solunga we wil also join there. R u thinking tat u r talking smartly??? Ayo ayo

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  14. Nalai kalanthaivirkku sollum aniththu nanparkalukkum en ithaya poorvamana vazhththukkal..... Varungala Samuthayaththai Uruvaakkum mega Periya PORUPPU Ungalidam Oppadaikka Padukirathu............seriya muyarchiyodu paniyai merkolla enathu VAZHTHTHUKKAL

    ReplyDelete
  15. Conduct certificate must or not reply me please

    ReplyDelete
  16. Conduct certificate must or not reply me please

    ReplyDelete
    Replies
    1. Not necessary. All original certificates and trb's provisional selected printout is enough.I get this information from my dt. ceo office.

      Delete
    2. Thank you sir. How many photos need sir

      Delete
    3. Unga hall ticket la photo sariya therilanaa dan photo ketkuranga.so 3 photo aduthukonga madam

      Delete
  17. போரட்டதை தவிர்த்து வரும் தேர்விற்க்கு படீயுங்கள் வெற்றி நிச்சயம்

    ReplyDelete
    Replies
    1. How will possible?They spent two years for TET exam .but in this system they will not get job in future .

      Delete
  18. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் முறையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பிரச்சினையிலும் தமிழக அரசு அலட்சியம் காட்வதாக திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

    தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்று சரிபார்ப்பும் நடத்தப்பட்டாகி விட்டது. கடந்த மாதம் பட்டியல் வெளியிட்டார்கள். அதன்படி 14,700 பேர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றதாகக் கூறப்பட்டது.

    ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், கல்லூரிகளில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றை தமிழக அரசு தான் தந்துள்ளது. தமிழக அரசு இவ்வாறு சான்றிதழ் கொடுத்தவர்களுக்கே, மீண்டும் ஒரு தகுதித் தேர்வை நடத்துவது என்பது ஏன் என்று தான் புரியவில்லை. அதிலும் "வெயிட்டேஜ்" என்ற பெயரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

    தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பிலும், பயிற்சிப் பள்ளித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பிலும், கல்லூரித் தேர்விலும், பயிற்சிக் கல்லூரித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வழங்கப்படுகிற மதிப்பெண்களை "வெயிட்டேஜ்" மதிப்பெண்களாகத் தந்து, தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களோடு கூட்டி வரும் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் பணி நியமனம் தற்போது நடைபெறுகிறது.

    இந்த "வெயிட்டேஜ்" மதிப்பெண்ணை கூடுதலாக கிராமப்புறங்களில் வாழ்வோர், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் ஆகியோரில் 90 சதவிகிதம் பேர் பெறவே முடியாது என்பதையும் அதற்கான சூழ்நிலைகளையும் அனைவரும் அறிவர்.

    "வெயிட்டேஜ்" மதிப்பெண்கள் முறையால், 1988-2000 வரை படித்தவர்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. இதற்குக் காரணம் அப்போதைய காலக் கட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மட்டும் படித்து 600 முதல் 800 மதிப்பெண்கள் வரை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் தற்போது 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே பள்ளியில் நூற்று மேற்பட்டோர் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.

    பல்வேறு பல்கலைக் கழகங்களில், பல்வேறு பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும் வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. இந்த "வெயிட்டேஜ்" மதிப்பெண் காரணமாக 30 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த பின்னரும் வேலை கிடைக்காத சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

    அதனால் தான் இந்த "வெயிட்டேஜ்" முறையை ரத்து செய்யக் கோரி கடந்த சில நாட்களாகத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி உண்ணாவிரதத்தை நடத்தி முடித்து, முதல் அமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்து முறையிட முயற்சித்து, கைதாகி பின்னர் விடுதலையானார்கள். அவர்களுடைய கோரிக்கை ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

    "வெயிட்டேஜ்" முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்பது தான். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்றையதினம் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட நான்கு பேர் குளிர்பானத்தில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து குடித்து, அவர்களைக் காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. அவர்களுடைய போராட்டம் பற்றி அரசாங்கம் இதுவரை அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.

    அனைத்துப் பிரச்சினைகளிலும் அலட்சியம் காட்டுவது போல இல்லாமல், ஆசிரியர் பிரச்சினை தலையானது என்பதை மனதிலே கொண்டு, தமிழக அரசு, குறிப்பாக முதலமைச்சரோ அல்லது அந்தத் துறையின் அமைச்சர் என்று இருப்பவரோ போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி, சுமூகமாக ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    ReplyDelete
  19. how to type in tamil any app is there for smart phone? pls guys tell me

    ReplyDelete
    Replies
    1. Download SELLINAM from Android play store and install it sir....
      Go to settings
      Language & input
      Select sellinam
      And start to type in Tamil....
      எனக்கு தெரிந்தவரையில் இது ஒரு மிகச்சிறந்த அலை மென்பொருள்....

      Delete
  20. அனைவரும் பன்னிரணெ்டாம் வகுப்பு மதிப்பெண்ணை எப்படி அதிகரிக்க முடியும் என்று கேட்கின்றனர் நீங்கள் 12இல் 100 மதிப்பெண் அதிகம் பெற்றாலூம் ஒரு மதிப்பெண் மட்டும் அதிகரிக்கும் அதற்கு தகுதி தேர்வில் வெறும் 2 mark எடுத்து அதை சமன் செய்து விடலாம்

    ReplyDelete
    Replies
    1. Type-1. They want only appointment based on tet mark.
      Loosers: those who got 90-100 in tet
      Type:2 they want tet pass and seniority.
      Looser: those who got good marks in +2,BA/bsc/b.ed Also tet
      type3 they want current method only.
      Looser: those who got less marks in +2, ba/bsc/b.ed

      Explain which is the correct method for appointment. What ever the method looser will be there.

      Delete
    2. Chi chi ithellam engalukku theriyathu paaru ?

      Delete
  21. திருவண்ணாமலை dt,தண்ட்ராம்பட்டு ஒன்றியம், காமாட்சியாண்டல் ஊர் கிடைத்துள்ளது அவ்வூர் பற்றிய தகவலை elanjeralathank@gmail க்கு தெரிவிக்கவும் plzzz

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் திரு இளஞ்சேரலாதன் அவர்களே,

      அப்பள்ளி எங்கள் ஊரிலிருந்து 25 KM தொலைவிலிருக்கிறது.அப்பள்ளிச் சூழல் உங்களுக்கு சிறப்பாகவே அமையும்.

      உங்களது அலைபேசி எண் என்னிடம் தற்போது இல்லை.நேரமிருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

      Delete
    2. how to type in tamil any app for smart phone

      Delete
    3. மணி சார் adw dep paper 1 posting பற்றி ஏதேனும் செய்திகள் உங்களுக்கு தெரிந்ததா ?

      Delete
    4. தெரியும் பொழுது நிச்சயமாக உங்களுக்குத் தெரிய படுத்துகிறேன் sir. அதில் உங்களுக்கு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.வாழ்த்துக்கள்.

      Delete
    5. Mani Sir,if u hav time tmrw,please upload ur district vacancies..it wil be helpful for those who r going to attend counseling on 4th and 5th..

      Delete
    6. Paper 1 counselling eppadi nadathadu sir

      Delete
    7. வாழ்த்துக்கள் நண்பரே...

      Delete
    8. Sri sir pls sollunga tmrw tirunelveli district la.BT ku counseling nadakuma.pls rly

      Delete
    9. Congrats elanjira sir... Mani sir any details about dee dept counseling. will it be done separately?

      Delete
    10. Musthafausman MusthafausmanSeptember 2, 2014 at 7:11 PM சார்
      சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, மதுரை ஆகிய, ஐந்து மாவட்டங்களில், பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை. எனவே, நாளை (3ம் தேதி), மாவட்டத்திற்குள் நடக்கும் கலந்தாய்வுக்கு, ஐந்து மாவட்டங் களுக்கு, யாரும் செல்ல வேண்டாம்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

      இதில் திருநெல்வேலி குறிப்பிடப்படவில்லை அதனால் நடக்கும்...

      Delete
    11. Manju RangarajuSeptember 2, 2014 at 7:29 PM சார்

      இதில் இரண்டும் வேறு வேறு துறைகள் அதனால் தனி தனியாக தான் கலந்தாய்வு...

      Delete
    12. வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி..மணி சார் மதியம் ஊர் பற்றி கேட்க phn பண்ணுனேன் நீங்கதான் atnd panala sir....tank u

      Delete
    13. Sri அவர்களே திருநெல்வேலியும் நெல்லையும் ஒன்று தான்.திருநெல்வேலியின் சுருக்கமே நெல்லை.எனவே நாளை அங்கு கலந்தாய்வு இல்லை.

      Delete
    14. தவறுக்கு மன்னிக்கவும்.... நாளை கலந்தாய்வுக்கு செல்லும் அணைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

      Delete
  22. எதையும் குழப்பி விட்டு சுயநலம் தேட முயற்சிப்பவர் தான் கருணாநிதி.அவரது ஆட்சியின் போது பெரும்பாலான பணிநியமனங்கள் பணம் பெற்றுக் கொண்டு தான் செய்யப்பட்டன.அவரது குடும்பத்தாரின் தலையீடுகள் தான் போட்டித் தேர்வுகளின் முடிவுகளை பெரும்பாலும் தீர்மானித்தன.இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் தளர்வை அவர் எதிர்க்கிறார் என தெரிய வருகிறது.திமுக தமிழ்நாட்டில் அஸ்தனமாகி விட்டது

    ReplyDelete
  23. Pls anyone tell me tmrw Tirunelveli district ku BT counseling unda

    ReplyDelete
  24. .அரசு விரைவில் நல்லமுடிவெடுக்கவேண்டும்.படிக்கும்காலங்களில் பல்வேறு சூழல்களால் பாதிக்கப்படுவதால் தான்2014 ,ஆம் ஆண்டில் கூடஅனைவருக்கும் கல்வி(ssa) அனைவருக்கும் இடை நிலைக்கல்வி(RMSA) திட்டங்கள் உள்ளன. காமராசர்,M.G.R போன்ற தலைவர்கள் கூடபல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்டுத்தான் பள்ளிப்படிப்பை இழந்தார்கள்.இன்றைய முதல்வர் கூட சூழல்களால் பாதிக்கப்பட்டுத்தான் பள்ளிப்படிப்பை இழந்தார்கள்.10,20ஆண்டுகளுக்குமுன்புபல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்டு பள்ளிப்படிப்பை வறுமையில்கடந்து பெற்றவர்களும் மற்றவர்களும் கஸ்டப்பட கல்லூரியில் படித்து பட்டம் வாங்கி ,பிறகு b.et படித்து தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்.10,20,ஆண்டுகளைக் கணக்கிடாமல் அம்மா நல்ல முடிவை எடுங்கள்.உங்கள் முடிவு நல்லமுடிவாக இருக்கட்டும். சூழல்களால் பாதிக்கப்பட்டுள்ள இவர்க்ளுக்கு உ ங்களைத்தவிர வேறு யார் உள்ளார்கள்.முடிவு நல்லமுடிவைத்தாருங்கள்.

    ReplyDelete
  25. ----------------------—-
    முக்கிய செய்தி
    -------------------------

    வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் நடைபெரும்.

    அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.

    வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. Brother alwin thomas enaku kudumipudi sandalam palakam ila. Bcoz m ur sister know.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  26. Brother u only saying sakothari sakothari lik tat. Enaku anda thagudigal iruka ilaya endru theria vendam.ungalai pol
    Matrabargalai kurai koorum thagudi ennidam ilaidam bro. So enaku thaangal sariyana brother aga iruka mudiadu. Poradubavargal side irundu yosithu nengal comment seiungal.bye
    Tak cre brother

    ReplyDelete
  27. K brother enaku ethum therinthu iruka vaipu ilaidan nengal needhi in pakam endral mikka magilichiye. Gud nt

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி