வெயிட்டேஜ் முறை விவகாரம் பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி போலீசார் அதிர்ச்சி - தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2014

வெயிட்டேஜ் முறை விவகாரம் பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி போலீசார் அதிர்ச்சி - தினகரன்


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. கடந்த மாதம் பட்டியல் வௌ�யிடப் பட்டது. அதன்படி, 14,700 பேர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இவர்கள் பேரணிநடத்தினர். பேரணி, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றது.

அப்போது, பேரணியில் கலந்துகொண்ட, நாகை மாவட்டம் சீர்காழி ராதாநல்லூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (29), சென்னை குரோம்பேட்டை சரஸ்வதிபுரம் விரிவாக்கம் கபிலன் (29), சேலம் வீரகநல்லூர் செல்லத்துரை (31), திருவிடை மருதூர் கார்த்திக் (29) ஆகிய 4 பேரும் குளிர்பானத்தில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து குடித்து மயங்கினர்.
இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து வயிற் றில் இருந்த பூச்சிகொல்லி மருத்தை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். தற்போது, அவர்கள் அபாயகட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

41 comments:

  1. நல்லதே நடக்கும் !!

    ReplyDelete
    Replies
    1. Vijay Vijay நேற்றும் இன்றும் நான் கூறியதை திரும்ப திரும்ப கூறுகிறீர்கள் இது என்னை கேலி செய்வது போல் உள்ளது நீங்கள் யார் என்று தெரியாது என்று நினைத்து இப்படி செய்கிறீர்கள் மேலும் இப்படி செய்தால் நான் சைபர் கிரைம் வரை செல்ல வேண்டி இருக்கும் பார்த்து ஜாக்கிரதை cop@vsnl.net என்ற முகவரிக்கு அனுப்பிவிடுவேன் பார்த்துக்கொள்ளுங்கள்

      Delete
    2. ராஜலிங்கம் சார் உங்கள் போராட்டம் அமைதியான முறையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

      Delete
    3. SANDIYAR , I AM NOT DOING "KINDAL". I WANTED TO CONVEY THE SAME MESSAGE THAT YOU TYPED IN TAMIL FONT. I AGREE WITH YOUR CONTENT OF MESSAGE. THAT'S WHY I COPIED THE TAMIL FONT. NOTHING WRONG IN IT. I DONT STEAL YOUR "PADAIPU". Your message is not Tamil kavithai, or Tamil literature or copy wright content.

      Delete
  2. FOR YOUR ATTENTION:

    Government cannot given job for All TET candidate including coming TET also. Minimum 1 or 2percentage only will got job another 98%TET pass candidate definitely against AMMA govt. It is true and sure.
    2016 election la NANGAL SEIGIROM.
    NEENGAL SEIVEERGALA? SEIVEERGALA AMMA

    because of POISON GoNo71

    ReplyDelete
  3. tanks to kalviseithi for publishing above news

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. -----------------------------
    ******முக்கிய செய்தி********
    ----------------------------+


    சென்னை பேரணியில் செல்லமுத்து மற்றும் பலர் விசம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.


    உயிர் பலி கொண்டுதான் இந்தமுறை மாறுமா. ஏன் என்ன பிரச்சனை என்று அரசு செவி சாய்காதா.

    இங்கு ஆயிரக்கனக்கானோர் போராடிக்கொன்டிருக்கிறார்கள். நண்பர்களே முடிவு தெரியாமல் யாரும் வீடு திரும்புவதாக இல்லை.

    அவர்களுக்கு பக்கபலமாய் நாம் இருக்கிறோம் என்பதை உனர்த்த வாருங்கள் சென்னைக்கு.,.

    நாளை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனைவரும் ஒன்று கூடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. நாளை illai இன்று ,sry சரவணன்

      Delete
  6. Nee unmayave setthalum government sevisaikathu Mr.Saravanan.
    Poye vitla vera work irundha paaru.Kandippa Next TET PG TRB Vaikkaporanga ready irunga Sir etukellam Government AAppu vaikkaporanga.

    ReplyDelete
    Replies
    1. y u are always searching others works.. u got job then y u are ridicule others feelings are u a heartless fellow... do ur own work? got it..

      Delete
  7. குட்டிக்கதை :
    ஒருத்தர் மாங்கா தோப்பிலே ரொம்ப சோகமா உட்கார்ந்து இருந்தார். நான் அவர் கிட்ட போய் 'ஏங்க ரொம்ப சோகமா உட்கார்ந்து இருக்கீங்க எதாவது பிரச்சனையா'ன்னு கேட்டேன். அதுக்கு அவர் ' ஆமாம் பா என் வாழ்க்கையே முடிஞ்சி போச்சு TETன்ற பேர்ல என் வாழ்க்கைல விளையாடிட்டாங்க, நான் தற்கொலை பண்ணிக்க போறேன்'னு சொன்னார்.
    எப்படி சார் தற்கொலை பண்ணிக்க போறீங்கன்னு கேட்டேன், அதுக்கு அவர் பையில இருந்து ஒரு நைலான் கயிறை எடுத்து, இதால தூக்கு மாட்டிக்க போறேன்னு சொன்னார். உங்க weight தாங்காம கயிறு அறுந்து போச்சுன்னா என்ன சார் பண்ணுவீங்க.....
    இதோ இந்த bottleல இருக்க விஷத்த குடிச்சிடுவேன்.... விஷம் குடிச்சும் உங்கள காப்பாத்திட்டாங்கனா?
    இதோ இந்த கத்தியால என் கை நரம்ப அறுத்துப்பேன்.... அப்பவும் hospitalக்கு தூக்கிட்டு போய் காப்பாத்திட்டாங்கனா?
    train முன்னாடி தலைய வெச்சிடுவேன்.....
    ஏன் சார் 'இந்த உலகத்துல சாவறதுக்கே இத்தனை வழிகள் இருக்கும் போது, உங்களுக்கு வாழறதுக்கு ஒரு வழி கூடவா கிடைக்கல?
    இப்போது தெளிவு பெற்றவராய் கிளம்பிச்சென்றார்.....
    அவர் வாழ்வில் நிச்சயம் வெல்வார்......

    ReplyDelete
    Replies
    1. அவர் THAN Thala Thalapathya

      Delete
    2. enna thala thalapathy sowkiyama

      Delete
    3. Thala thalapathy ithula ethavathu onna choose panniko. avavan thalavali avanukuthan thaerium.

      Delete
  8. Gud news thala thalapathy...indha ulagathla evlo vaippu iruku...y yarukum puriya matengudhu..

    ReplyDelete
  9. Tet onruthan life illa nanbargaley.

    ReplyDelete
  10. பேரணியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டோரை கேள்விப்பட்டு மனம் வருத்தம் கொண்டேன். போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் தான். ஆனால் கோரிக்கையானது பொதுவானதாக இல்லை. தகுதித் தோ்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் என்பது சரியில்லை. போராட்டத்தில் 92 96 மதிப்பெண் பெற்றவா்கள் உள்ளனா். அவா்களும் போராட்டத்தில் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். ஒருவேளை தகுதித் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டாலும் முதல் மதிப்பெண்னான 124 லிருந்து 100 மதிப்பெண் பெற்றவா்கள்குள்ளே காலிப்பணியிடமானது நிரப்பபட்டுவிட்டால் 90 லிருந்து 100 மதிப்பெண் பெற்று போராட்டத்தில் கலந்து கொண்டவா்களின் நிலை ? தான். அவா்கள் மீண்டும் தோ்வெழுத வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கனவே பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்றது. இடையில் தகுதி தோ்வு வந்தது தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் என்பது தான் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. மதிப்பெண் அடிப்படை என்பது ஏதேனும் ஒரு வகையில் யாருக்காவது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். என் கருத்து யாருக்காவது மனம் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ungal karuthu migavum sari nanbare....but its all over....

      Delete
    2. Tamizh selvanSeptember 2, 2014 at 9:36 AM
      சார் நீங்கள் சொல்லி உள்ள கருத்து 100% சரியானது. 2012 ல் தகுதி தேர்வு அறிவித்த போதே TET EXAM ல pass செய்து employment office ல பதிவு செய்து வைத்துவிட வேண்டும் . தகுதி தேர்வில் pass செய்தவர்களுக்கு seniority அடிப்படையில் பணி வழங்கப்படும் என அறிவித்து இருந்தால் பிரச்னை வந்து இருக்காது . எல்லாம் நாம் தலைவிதி. இனி என்ன செய்ய முடியும் .

      Delete
    3. VERY VERY COREECT ,ARASU NINAITHAL IPOTHU KUDA SEIYALAM...ARASAL MUDIYATHATHU ETHUVUM ELLAI...

      Delete
    4. சார் கடவுள் நல்லவர்களை நிறைய சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார். நல்லது நடக்கும் என நம்புவோம் . நீங்கள் சொல்லி உள்ளது 100% சரியானது . 2012 ல் தகுதி தேர்வு அறிவித்த போதே TET EXAM ல pass செய்தவர்களுக்கு seniority அடிப்படையில் பணி வழங்கப்படும் என அறிவித்து இருந்தால் எந்த பிரச்சனையும் வந்து இருக்காது . எல்லாம் நம் தலைவிதி .

      Delete
    5. Mr. tamil, your is 100% correct... in DMK period they filled like this only... why cant by this govt...

      Delete
    6. Thamil neenga enna solla varinga seniority ok athemathiritham tet markkum athigama edutha vaippukidaipathu thavarillai yen nanma ithukku munnadi trb ezhuthalaya mothathula seniorityo tet yo ethuvaga irunthalum nammai vida athigam eduthavargal posting poganum ,appo namakku vaippu kidaikkalana yaarum varuthapadamattom ithu than nijam.

      Delete
  11. Dear Tamil,
    Your point is right.TET passed candidates seniority wise appointment is right decision.

    If we take this pettition to the govt,have a chance to joint more teachers and may be possible
    for Govt give ood decision.

    ReplyDelete
  12. மதிப்பெண் அடிப்படை என்பது தோ்ச்சி பெற்றவா்களுக்குள்ளேயே இரு பிரிவை உண்டாக்குகிறது. 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவா்கள் 90 மதிப்பெண்களுக்குள் பெற்றவா்கள் என்று ஆனால் பதிவு மூப்பு தோ்ச்சி பெற்றவா்கள் என்ற ஒரு போர்வைக்குள் நம்மை சோ்க்கும் மேலும் மீண்டும் மீண்டும் தோ்வு எழுதுவதையும் தவிர்க்கும் என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. So 2014il b.ed mudippavar 2030 il tet ezhuthi pathivu mooppu moolam velaikku pogalam. In tet exam 82 mark only enough.

      Delete
    2. மாண்புமிகுSeptember 2, 2014 at 11:04 AM ஏன் சார் TET என்பது தகுதி தேர்வு மட்டுமே . TET EXAM அறிவிக்கும் போதே TET EXAM ல pass செய்தவர்களுக்கு seniority அடிப்படையில் பணி வழங்கப்படும் என அறிவித்து இருந்தால் என்ன சார் செய்து இருப்பீர்கள் ? 15,20 வருடம் காத்து இருந்தவர்கள் TET EXAM ல pass செய்தும் பணி இல்லை என்பதை விட இனி வேலையே கிடைக்காது என்றால் எப்படி சார் ? எட் EXAM ல pass செய்தவர்களுக்கு seniority அடிப்படையில் பணி வழங்கும் போது அவர்கள் 10 அல்லாது 12 வருடம் வேலை செய்து விட்டு ஓய்வு பெற்றவுடன் மற்றவர்களுக்கும் வேலை கிடைக்கும் தானே . இளையவர்களுக்கு எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால் 35 வயதுக்கு மேல் exam எழுத ஆசை பட்டாலும் age bar ஆகிடுது . please try to understand our feelings.

      Delete
    3. Mr maanbumigu neenga 2030 la ponga illana 2040 ponga athu ippo mettar illa tet la engalavida athigama eduthu posting ponga yaar venanrathu intha govt ku ethu "tharamana asiriyar thervu murai" enbathil migavum kulappam ullathu enbathe nijam.

      Delete
  13. We will win frnds . Let's hope for The best. God is with us.

    ReplyDelete
  14. When will publish adw selection list pls reply l sc female my wtge 66.13

    ReplyDelete
  15. Nanbargal nalthudan thirumba eraivanidam vendikolvom

    ReplyDelete
  16. Vara sattasabai electionla nama yarunu kattuvom. Ilaignerkalae onru kudungal. Nammai aelanamaga parthavargalai aelanamakuvom. Namaku sevi saikathavarkalaku naam sevi saikka kudathu. neethiyai venra aneethiku valivittu naam padam pugattuvom.

    ReplyDelete
  17. அரசாணை 71க்கு எதிரான வழ‌க்கின் நிலை என்ன?

    ReplyDelete
  18. Truth alone (always) triumphs. Let us wait

    ReplyDelete
  19. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் முறையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பிரச்சினையிலும் தமிழக அரசு அலட்சியம் காட்வதாக திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

    தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்று சரிபார்ப்பும் நடத்தப்பட்டாகி விட்டது. கடந்த மாதம் பட்டியல் வெளியிட்டார்கள். அதன்படி 14,700 பேர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றதாகக் கூறப்பட்டது.

    ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், கல்லூரிகளில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றை தமிழக அரசு தான் தந்துள்ளது. தமிழக அரசு இவ்வாறு சான்றிதழ் கொடுத்தவர்களுக்கே, மீண்டும் ஒரு தகுதித் தேர்வை நடத்துவது என்பது ஏன் என்று தான் புரியவில்லை. அதிலும் "வெயிட்டேஜ்" என்ற பெயரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

    தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பிலும், பயிற்சிப் பள்ளித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பிலும், கல்லூரித் தேர்விலும், பயிற்சிக் கல்லூரித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வழங்கப்படுகிற மதிப்பெண்களை "வெயிட்டேஜ்" மதிப்பெண்களாகத் தந்து, தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களோடு கூட்டி வரும் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் பணி நியமனம் தற்போது நடைபெறுகிறது.

    இந்த "வெயிட்டேஜ்" மதிப்பெண்ணை கூடுதலாக கிராமப்புறங்களில் வாழ்வோர், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் ஆகியோரில் 90 சதவிகிதம் பேர் பெறவே முடியாது என்பதையும் அதற்கான சூழ்நிலைகளையும் அனைவரும் அறிவர்.

    "வெயிட்டேஜ்" மதிப்பெண்கள் முறையால், 1988-2000 வரை படித்தவர்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. இதற்குக் காரணம் அப்போதைய காலக் கட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மட்டும் படித்து 600 முதல் 800 மதிப்பெண்கள் வரை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் தற்போது 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே பள்ளியில் நூற்று மேற்பட்டோர் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.

    பல்வேறு பல்கலைக் கழகங்களில், பல்வேறு பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும் வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. இந்த "வெயிட்டேஜ்" மதிப்பெண் காரணமாக 30 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த பின்னரும் வேலை கிடைக்காத சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

    அதனால் தான் இந்த "வெயிட்டேஜ்" முறையை ரத்து செய்யக் கோரி கடந்த சில நாட்களாகத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி உண்ணாவிரதத்தை நடத்தி முடித்து, முதல் அமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்து முறையிட முயற்சித்து, கைதாகி பின்னர் விடுதலையானார்கள். அவர்களுடைய கோரிக்கை ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

    "வெயிட்டேஜ்" முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்பது தான். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்றையதினம் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட நான்கு பேர் குளிர்பானத்தில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து குடித்து, அவர்களைக் காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. அவர்களுடைய போராட்டம் பற்றி அரசாங்கம் இதுவரை அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.

    அனைத்துப் பிரச்சினைகளிலும் அலட்சியம் காட்டுவது போல இல்லாமல், ஆசிரியர் பிரச்சினை தலையானது என்பதை மனதிலே கொண்டு, தமிழக அரசு, குறிப்பாக முதலமைச்சரோ அல்லது அந்தத் துறையின் அமைச்சர் என்று இருப்பவரோ போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி, சுமூகமாக ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    ReplyDelete
  20. பாதிக்கப்பட்ட 60000 குடும்பத்தாரின் ஓட்டுக்களும் கருனாநிதி க்கு சென்றுவிடாமல் நம் அம்மா சரியான முடிவை எடுத்து நமக்கும் வழிகாட்டுவார்.நமக்கும் மிக விரைவில் பணி வழங்குவார்கள்.அம்மாவை நம்புவோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி