இந்திய ரயில்வேயில் 6101 காலிப்பணியிடங்கள் அறிவிப்பை இந்திய ரயில்வேதுறை வெளியிட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2014

இந்திய ரயில்வேயில் 6101 காலிப்பணியிடங்கள் அறிவிப்பை இந்திய ரயில்வேதுறை வெளியிட்டுள்ளது.


இந்திய ரயில்வே துறை ஜூனியர் இன்ஜினீயர், சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயர் உள்ளிட்ட6101 காலிப் பணியிடங்களை நிரப்பவுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய ரயில்வேதுறை வெளியிட்டுள்ளது.
உரிய தகுதியுடையோர் ஆன்லைனில் 20.09.2014 முதல் 19.10.2014 வரை விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்:6101.

வயது:

01.01.2015 அன்று, ஜூனியர் இன்ஜினீயர் பணிக்கு 18-33 வயதுக்குள்ளும், சீனியர் இன்ஜினீயர் பணிக்கு 20-35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு அரசின் விதிமுறைகளின்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

கல்வித் தகுதி:

அறிவிக்கையில் வெளியான அட்டவணையில் உள்ள பணிகளுக்கு உரிய கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இன்ஜினீயரிங்கில் பட்டயப் படிப்போ, பட்டப் படிப்போ பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களும் அறிவிக்கையில் வெளியாகியுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள். சிறுபான்மையினர், பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோர் அதாவது ரூ.50,000க்கு குறைவான ஆண்டுவருமானம் கொண்டோர் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பிறர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இதை ஆன்லைன் பேங்கிங் மூலமாகவோ வங்கி செலான் மூலமாகவோ அஞ்சலகத்திலோ செலுத்தலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஜூனியர்இன்ஜினீயர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு 14.12.2014 அன்றும் சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு 21.12.2014 அன்றும்நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

உரிய தகுதியுடையோர் ஜூனியர் இன்ஜினீயர் பணிகளுக்கோ சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயர் பணிகளுக்கோ ஏதாவது ஒரு ஆர்ஆர்பி இணையதளத்தில் (http://www.rrbald.gov.in/ ) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் பிரிண்ட் அவுட்டை ஆர்ஆர்பி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டியதில்லை. எழுத்துத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஆல்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடைசி நாள்:
விண்ணப்பிக்க கடைசி நாள் 19.10.2014.

கூடுதல் விவரங்களுக்கு:http://www.rrbald.nic.in/

15 comments:

  1. athaiyavathu try pannuvoma. intha teta nambi namma polappu sirippa sirikkuthu

    ReplyDelete
  2. kalviththaguthiyai appadiye keelea kodungal. nangal yengu sendru kalviththaguthiyai parppathu.

    ReplyDelete
  3. dear akilan sir,ungalidam pesiyathil enakku migundha magilchi sir..my email i.d paulrameshraj@gmail.com

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. சார் வழக்கறிஞர்கள் புதியதாக உள்ளவர்களுக்கு நீதிபதி பணி வழங்கக்கூடாது என்பதற்க்காக கோர்ட் புறகணிப்பு செய்கின்றனர்கள். அதனால் ஒவ்வொரு வழக்கறிஞர்களுக்கும் தன் வாழ்வில் ஒரு நாள் நீதி ஆகிவிடலாம் என்ற கணவூ பழிக்காது. அதில் அனுபத்திற்கு முன்னுரிமை தந்து நீதிபதி நியமிக்க வேண்டும் என்று கோர்ட் புறகணிப்பு போராட்டம் செய்கின்றனர்.

    ஆனால் பணி அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு அனுபவம் உள்ள ஆசிரியர்களை தேர்ந்தெடுக்காமல் அவர்கள் புரியாத வயதில் படித்த படிப்பை வைத்து வெயிட்டேஜ் என்று கூறுகிறரார்கள்.

    சரி உங்களுடைய வெயிட்டேஜ் முறைப்படி சிறந்த ஆசிரியர்களை தேந்தெடுத்துள்ளோம் என்று வைத்துக் கொள்வோம். 2014 முதல் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் மாநிலத்தில் முதல மூன்று பதவிகளை பிடிப்பார்கள் (10ம் வகுப்பு) என்று உங்களால் உறுதியாக கூற முடியூமா?

    ReplyDelete
  6. Arul Selvam Un School Address Sollu Nan Result Varm Podu Parkiran - Unaku Theiyiram Irunda Sollu DA

    ReplyDelete
  7. Enna Arul Nee 82-89 Mark Vanganavar Thana?

    ReplyDelete
  8. This Comment Only Arul and Me only Dont other command?

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. வழக்கறிஞர்கள் சிவில் நீதிபதி நியமன முறையை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பு செய்கிறார்கள், நீதிபதி நியமனத்திற்கு பார் கவுன்சில் பதிவு தேவை என்று விதிமுறைகள் உள்ளன, ஆனால் பார் கவுன்சில் உறுப்பினராவதற்கு அங்கேயும் நம்மை போன்ற தகுதி தேர்வு எழுதி தேர்வாக வேண்டும், இந்த தேர்வை எதிர்த்து புறக்கணிப்பு நடைபெறுகிறது,

    நமக்கு நேரமே சரியில்லை, பட்ட காலிலே படும் என்பார்கள் அது இதுதானா?
    வழக்கறிஞர் நண்பர்களே, இது அவசர வழக்கு சிறிது கருணை காட்டுங்களேன்,

    ஒரு பள்ளிக்கூடத்தை திறந்தால்
    ஒரு சிறைச்சாலையை மூடலாம் என்று யாரோ ஒரு புண்ணியவான் சொல்லியிருக்கிறார்.
    வழி விடுங்களேன்,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி