64 வகையான பதிவேடுகள்; ஆசிரியர்கள் குமுறல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2014

64 வகையான பதிவேடுகள்; ஆசிரியர்கள் குமுறல்.


குஜிலியம்பாறை :அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் 64 வகையான பள்ளிபராமரிப்பு பதிவேடுகளை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் 36 ஆயிரம் அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகள்உள்ளன. இவற்றில், மாணவர்கள் நலன் கருதி, பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், மதிய உணவு என பல்வேறு நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது.

இதே போல், உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றன.தமிழகத்தில் ஆண்டுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளி கல்வித்துறை செலவிடுகிறது. ஆனால், அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில், பள்ளி பராமரிப்புக்கான பள்ளி பதிவேடு, ஆசிரியர்களுக்கான வருகை பதிவேடு, மாணவர் வருகை பதிவேடு, ஊதிய பதிவேடு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு பதிவேடு, வாசித்தல் திறன் பதிவேடு, பார்வையாளர் பதிவேடு, இலவச பொருள் வழங்கும் பதிவேடு, மாணவர் திறன் பதிவேடு, தணிக்கை பதிவேடு, காலநிலை அட்டவணை என 64 வகையான நோட்டுகளை, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் வாங்கி பராமரிக்கின்றனர்.

மேலும், மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், சீருடைகளை, ஆண்டுக்கு மூன்று முறை, வாடகை வாகனம் பிடித்து, கொண்டு வரவேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இது குறித்து தலைமை ஆசிரியர்களிடம் கேட்டபோது, தலைமை ஆசிரியர்களுக்கு வெளியே சொல்ல முடியாத சிரமங்கள் நிறைய உள்ளன. மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும், என்றனர்.

3 comments:

  1. பட்டதாரி ஆசிரியர்களுக்கு நான்கில் ஒரு பங்கு பணியிட வாய்ப்பினை ஏற்படுத்தி தருபவர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை...

    தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதா...

    எத்தனை பள்ளிகளில் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தும் ஈராசிரியர்களை கொண்டு மட்டுமே செயல்படுகிறது. ..


    லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக ஆரம்பமான ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். TEACHERS ASSOCIATION மூலமாக தான் அவர்களுக்கு கல்வி தரப்படுகிறது. ஏன்?
    நிதிபற்றாக்குறையா?

    ஒரு மாதம் டாஸ்மார்க் லாபத்தில் பத்தாயிரம் புதிய ஆசிரியர்களுக்கு ஒரு வருடம் வாழ்வாதாரம் தரலாமே?

    2012-ல் தேர்ச்சி பெற்ற அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 100% பணிவாய்ப்பை ஏற்படுத்தியவர்கள், தற்போது மட்டும் ஏன் வெறும் 5% மட்டுமே பணியிட வாய்ப்பு.

    தற்போதய அரசுக்கு போராட்டம் என்ற பெயரில் நமது கோரிக்கைகளை எடுத்து சென்றால் நிச்சயம் நமது கருத்துகள் கூட மாண்புமிகு. ...............அவர்களை சென்றடைவது கடினம்.அவர்கள் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் அல்ல என்பதை உணருங்கள்.

    10,000 காலிபணியிடம் அறிவித்திருந்தால்,நம்மில் சிலருக்கு GO :71 பெருத்த தலைவழியாய் அமைந்திருக்கும்.இங்கே தான் வெறும் 2,000 க்கே வழிய காணோமே.

    கூடுதல் காலிப்பணியிட அறிவிப்பு மட்டுமே இடைநிலை ஆசிரியர்களுக்கு பொதுவான தீர்வாக அமையுமே தவிர,
    வெயிட்டேஜ் முறையை மாற்றுவதாலோ, புதிதாக GO உருவாக்குவதாலோ தற்போதே தீர்வினை பெற முடியாது.எப்படி பார்த்தாலும் CURRENT VACCANT 850 மட்டும் தான்.

    நம் அனைவரது கருத்துக்களையும் பதிவுசெய்ய வாருங்கள் சென்னை..
    ******************************
    நாள். :21/09/13
    இடம் :சென்னை மெரினா
    ******************************


    OC, BC, BCM, MBC, SC ,ST ,SCA ,PH EXSERVICE, என அனைத்து இடைநிலை ஆசிரிய நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம்
    ******************************
    தொடர்புக்கு
    sathyamoorthy(Avinashi)
    95433 91234
    9597239898
    Sathyajith (Bangalore)
    09663091690
    Mahendran (chennai)
    7299053549.
    Ravi (kadalur)
    8675567007
    Dharmaraj (Ramnad)
    9843521163
    Kanagaraj (Theni)
    9597734532
    Karuppusamy (erode)
    7200670046
    sivadeepan (trichy)
    8012482604
    Sakthivel (dharmapuri)
    9094316566
    Kulanthaivel (kallakuruchi)
    9994282858
    Deva (vellur)
    9566203861
    Saravanan(vathalagundu)
    9003444100



    ####################
    Date :21/09/14
    Place : chennai merina.

    ******************************
    Thanks to all.
    ******************************

    ReplyDelete
  2. Please verify and tell the details * How many above 90 candidates in the provisional selection list?"

    2013-2014 academic year vacancy and 2014-2015 academic year vacancy approximately Total 8,500 can be used for fill up the unselected above 90 candidates
    99% problem get solved

    ReplyDelete
  3. ungal muyartchi vetri pera valyhukal

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி