ஏமாற்றப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2014

ஏமாற்றப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள்.


தற்போது TET- தேர்வில் இட ஒதுக்கீட்டில் 5% மதிப்பெண் தளர்வு அளித்து பணிநியமனம் வழங்கப்படிருக்கிறது. இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வு அளித்தது தவறு என்று அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இந்த 5% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படவேண்டாம் என்றும் இனிவரும் காலங்களில் இந்த 5% மதிப்பெண் வழங்கக்கூடாதுஎன்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளது.ஆனால் 652 கணினி ஆசிரியர்கள் விஷயத்தில் TRB நடத்திய தேர்வில் 50% மதிப்பெண் எடுத்தால் அவர்களுக்கு பணிவழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. தேர்வு நடந்து முடிந்த பின்புஅரசு 50% இலக்கை மாற்றி 15% தளர்வு கொடுத்து 35% எடுத்தால்போதுமானது என்று கருதி அரசு தெரிவித்தது. இதனடிப்படையில் TRB தேர்வுமுடிவை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தன் தீர்ப்பை வெளியிட்டது.தீர்ப்பில் 35% சதவீதமாக அரசு குறைத்தது தவறு. இதனால் 35% மேலும் 50% குறைவாகவும் மதிப்பெண் எடுத்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் 652 கணினி ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

TET-ல் 5% தளர்வு அளித்தது தவறு என்றும், கணினி ஆசிரியர்களுக்கான தேர்வில் 50% என்று உள்ளதை 15% தளர்வு 35% ஆக குறைத்தது அளித்தது தவறு என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இந்த முறை மட்டும் 5% தளர்வால் தேர்வானவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டாம் என்று கூறியுள்ளது. கணினி ஆசிரியர்கள் தேர்வு விஷயத்தில்50% என்று உள்ளதை 15% தளர்வு அளித்து 35% மதிப்பெண் பெற்றுதேர்வானவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டாம் என்று நீதிமன்றம் கூறவில்லை,மாறாக 50%-திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் 35% மேல் மதிப்பெண் பெற்றவர்கள் பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்றுநீதிமன்றம் உத்தரவிட்டது.TET-ல் 5% மதிப்பெண் குறைவால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒருநியாயம், இதே TRB நடத்திய வேதர்வில் 15% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நியாயம். நீதி எங்கே இருக்கின்றது.தமிழக அரசும் பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்களுக்காக குரல் கொடுக்கவில்லை.

TET-ல் 5% மதிப்பெண் குறைவால் தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று தான்(26.09.14) பணியில் சேர உள்ளனர். ஆனால் கணினி ஆசிரியர்கள் தேர்வில் 15% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து 4 ஆண்டுகள் 6 மாதங்கள் முறையான ஊதியத்தில் பணிபுரிந்துள்ளனர். இந்நிலையில் இவர்களை (652 கணினி ஆசிரியர்களை) பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

652 கணினி ஆசிரியர்கள் ஏமாற்றப்பட்டனர். தற்போது இவர்களின் நிலை?????

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. விரைவில் கணினி ஆசிாியா்களுக்கும் நீதி கிடைக்க நான் இறைவனைப் பிராா்த்திக்கிறேன்.

    ReplyDelete
  4. 652 பேர் ஏன் இன்று வரை பணிநியமணம் செய்யவில்லை.ஏன் அரசாங்கம் அவர்கள் குடும்மத்தை நினைவில் கொள்ளவில்லை.நியமனம் செய்யவேண்டும் அரசாங்கம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி