தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் செப்.8 ல் பணியில் சேர உத்தரவு - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2014

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் செப்.8 ல் பணியில் சேர உத்தரவு - தினமலர்

புதியதாக நியமிக்கப்படும் தொடக்க கல்வி ஆசிரியர்கள், வரும் செப்., 8 ம் தேதி பணியில் சேர, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக் கல்வித்துறையில், 1,649 இடைநிலை ஆசிரியர், 167 அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு இன்று முதல் செப்., 4 வரை நடக்கிறது. கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேரடி மேற்பார்வையில் கலந்தாய்வு நடத்த வேண்டும். கலந்தாய்வு முடியும் வரை, மாவட்ட தலைமையை விட்டு அவர்கள் வெளியிடங்களுக்கு செல்லக் கூடாது. கலந்தாய்வுக்கு வருபவர்களிடம், கனிவான அணுகு முறையை கையாள வேண்டும். ஆசிரியர்கள், கலந்தாய்வில் தங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்தவுடன், ஒதுக்கீட்டு ஆணையை உடனே பிரின்ட் எடுத்து கொடுக்க வேண்டும்.

கலந்தாய்வு நடக்கும்போது, மாவட்டத்தில் காலி பணியிடங்கள் இல்லாத பட்சத்தில், அதை காத்திருப்பவர்களுக்கு அறிவிப்பு பலகை மூலம் தெரியப்படுத்த வேண்டும். பணியிட ஒதுக்கீடு பெற்றவர்கள், ஒதுக்கீட்டு ஆணையில் குறிப்பிட்டுள்ள, ஆவணங்களுடன் செப்.,4 முதல் 6 ம் தேதிக்குள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் பணி நியமன ஆணை பெற்று, செப்.,8 ல் பணியில் சேர்ந்திட தொடக்கக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

பணி நியமன ஆணை வழங்கும் முன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் சான்றிதழ்களை முறையாக சரிபார்க்க வேண்டும். பின்னாளில் ஏதேனும் குறை நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருமே பொறுப்பு ஏற்க நேரிடும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. The undue haste by TRB and Edn Dept in asking selected candidates to join in 4 days i.e. by 8th Sept is surprising. The TRB has taken more than a year to select; so what is the emergency now it is raising doubts. Normally all govt appointments are done only after Certificate Vfn and Police Verification (of character and past records). Whythis hurry god only knows.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி