போலீஸ் தேர்வு விதிகளில் தளர்வு: ஐகோர்ட் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2014

போலீஸ் தேர்வு விதிகளில் தளர்வு: ஐகோர்ட் வலியுறுத்தல்

'டில்லியில் ஒருவர் போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு இருந்தால், ஒரு குழு அமைக்கின்றனர். அவரின் பின்புலத்தை விசாரித்து, சாதாரண குற்றச்சாட்டு என உறுதியானால், பணி வழங்கப்படுகிறது. அதை தமிழகத்தில் பின்பற்றலாம்,' என மதுரை ஐகோர்ட் கிளை வலியுறுத்தியது.

ராதாபுரம் கோரிபூர் லட்சுமணப் பெருமாள் தாக்கல் செய்த மனு:
2007 ல் கிரேடு 2 போலீஸ் உடற்தகுதி, எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடைந்தேன். என்மீது ஒரு கிரிமினல் வழக்கு இருந்ததை மறைத்ததாகக்கூறி, பணி வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது. இதை ரத்து செய்ய வேண்டும், என குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.நாகமுத்து: இது ஒரு துரதிஷ்டமான வழக்கு. பணக்குடி போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரில், மனுதாரர் பெயர் இல்லை.

குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளனர்.
ஆவணங்கள்படி அவரை கைது, ரிமாண்ட் செய்யவில்லை. மனுதாரரை சாதாரண சிறு வழக்கில், போலீசார் சேர்த்துள்ளனர். அவரை கீழ் கோர்ட் விடுதலை செய்துள்ளது.

அரசின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கிரிமினல் சட்டத்தின் நோக்கம், ஒருவர் தவறு செய்தால் அவரை சீர்திருத்தி, சமூகத்துடன் இணைக்கமாக வாழ வைப்பதுதான். மனுதாரருக்கு பணி மறுப்பது,

சமூகத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். தற்போது முன்விரோதம், போட்டி, பொறாமையில் கூட புகார் செய்கின்றனர். விசாரணைக்குப் பின், அது பொய் என உறுதியாகிறது.

பொதுவாக எப்.ஐ.ஆரில் பெயர் இடம்பெற்றிருந்தால், அதை காரணமாகக்கூறி, ஒருவருக்கு பணி மறுக்கப்படுகிறது. பணி வழங்கும் போது, குற்றத்தின் தன்மையை கருத்தில் கொள்ள வேண்டும்
.
ஏற்கனவே ஐகோர்ட் பெஞ்ச், 'எப்.ஐ.ஆரில் பெயர் இருந்தாலும், அதை மறைத்தாலும் பணி வழங்க முடியாது,' என உத்தரவிட்டுள்ளது. டில்லியில் ஒருவர் போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்மீது வழக்கு இருந்தால், ஒரு குழு அமைக்கின்றனர். அந்நபரின் பின்புலத்தை விசாரித்து, சாதாரண சிறு குற்றச்சாட்டு என உறுதியானால், பணி வழங்கப்படுகிறது. அந்நடைமுறையை, தமிழகத்தில் பின்பற்றலாம்.

இவ்வழக்கில் மனுதாரருக்கு நிவாரணம் வழங்க முடியாது. மனுதாரர் அடுத்த தேர்வில் பங்கேற்கலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றார்.

4 comments:

  1. பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் என் இனிய நண்பர்களுக்கு மட்டும் காலை வணக்கம்.

    ReplyDelete
  2. Enna sir idhu selected canditates kku matum dhan gud morninga. Un selected canditates kku illaya enna oru pagu badu. Thayavu seidhu schoolil endha pagupattai pinpattradheergal plz.nam anvarum teacher s dhan sir pirikkadheer gal.gud morning friends.

    ReplyDelete
  3. நீங்க மகான் இல்லை சரி ....மனிதன் தானே ????? எண்ணம் போல் அமையும் வாழ்வு .....அனைவருக்கும் மாலை வணக்கம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி