இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு தடை நீக்கம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2014

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு தடை நீக்கம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பணி நியமனத்துக்கு தடை

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த தனி நீதிபதி, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

அப்பீல்

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை செயலாளர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் அப்பீல் செய்தார். இந்த அப்பீல் மனு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சோமையாஜி, மதுரை ஐகோர்ட்டு கிளை சிறப்பு அரசு வக்கீல் சண்முகநாதன் ஆகியோர் கூறியதாவது:-

‘ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொள்ளும் நடைமுறை சரியானது அல்ல என்று கூறி பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு தனி நீதிபதி தடை விதித்தார். ஆசிரியர் பணிக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொள்ளும் நடைமுறை சரியானது தான் என்று சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் ஆசிரியர் பணி நியமனத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்துள்ள தடை ஏற்புடையது அல்ல. எனவே, அந்த தடையை நீக்க வேண்டும்.’

இவ்வாறு அரசு வக்கீல்கள் கூறினர்.

தடை நீக்கம்

மேலும், சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சு பிறப்பித்த உத்தரவு நகலையும் அவர்கள் நீதிபதிகளிடம் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ‘கவுன்சிலிங்’ நடத்தப்பட்டு பலருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் பணி நியமனத்துக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்ததால் ‘கவுன்சிலிங்’ மூலம் பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் பணியில் சேர முடியாமல் இருந்தனர். தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் விரைவில் பணியில் சேர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. காலை வணக்கம் இன்று நாம் பணிநியமன ஆணை பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகும். Vijaya Kumar Chennai24 September z2014 23:15
    இனிய நண்பர் Madurai selected Tet க்கு,

    தங்களின் உழைப்பை பாராட்டுகிறேன்.

    ஆதங்கபடாதீர் அவசரப்படாதீர்.

    தங்களைப்போலவே நானும் இன்றைய ஒருநாள் அல்ல ஒன்பது மாதமாக பல நாள் சம்பளமிழந்து எனது இனிய கல்விச்செய்தி நண்பர்களுக்காக உண்மையை உறுதிப்பட தெரிந்தும்,
    நீங்கள் சொல்லும் நம்பகமான தகவலை வெளியிடும் அதிகாரி யாரோ அவரிடம் நேரடியாக உறுதிபடுத்திவிட்டே வெளியிடுவேன்.
    நான் சட்டம் பயின்றவன். எனவேதான் Court matter ஐ தெளிவாக கூறுகிறேன்.
    தங்களைப்போலவே நானும் தேர்வுப்பட்டியலில் உள்ளவன் என்பதை தாங்கள் தற்போது அறிந்திருப்பீர் என நம்புகிறேன்.
    உண்மைச்செய்தியை கல்விச்செய்தியில் மட்டுமே வழங்கி வருகிறேன்.
    அது தங்களை மட்டும் பாதிக்கிறது என்பதனால் வெளியிடாமல் இருக்கமுடியுமா?
    சுப்ரீம் கோர்ட் தகவல் கூறியபோதும் வருத்தப்பட்டீர். ஆனால், அது உண்மையென்று தற்போது அறிந்திருப்பீர். அதன் Copy. தற்போது வெளியாகியுள்ளது.
    ஆனால்.அதைப்பற்றி கவலைவேண்டாம்.

    Reply

    balamuthu p24 September 2014 23:25
    MADURAI BENCH OF MADRAS HIGH COURT DAILY CAUSE LIST

    (For 25th, September, 2014 )
    COURT NO. 12
    HON'BLE MR.JUSTICE K.K.SASIDHARAN
    BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
    TO BE HEARD ON THURSDAY THE 25TH DAY OF SEPTEMBER 2014 AT 10.30 A.M. sl no.12.

    Reply
    Replies

    success24 September 2014 23:28
    Sir othu Ena case.onum purila.pls tel


    balamuthu p24 September 2014 23:36
    COVERED MATTERS RALATING TO G.O.MS.NO.71 AND 25
    ~~~~~~~~~~~~~

    12. WP(MD).14428/2014 M/S P.GANAPATHI SUBRAMANIAN SPL GP(W)
    (Service) G.KANDHAVADIVELAN MEMO NOT FILED
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    AND
    WP(MD).14438/2014 M/S.T. LAJAPATHI ROY
    (Service) S.RAJASEKAR
    MP(MD).2/2014 - DO -
    AND
    WP(MD).14439/2014 M/S.T. LAJAPATHI ROY
    (Service) S.RAJASEKAR
    MP(MD).1/2014 - DO -
    MP(MD).2/2014 - DO -
    AND
    WP(MD).14466/2014 M/S.B. CHRISTOPHER
    (Service)
    AND
    WP(MD).14468/2014 M/S.B. CHRISTOPHER
    (Service)
    AND
    WP(MD).14469/2014 M/S.B. CHRISTOPHER
    (Service)
    AND
    WP(MD).14497/2014 M/S.N.R. MURUGESAN
    (Service) M. RAJESWARI
    For Injunction
    MP(MD).1/2014 - DO -
    AND
    WP(MD).14239/2014 M/S K.K.KANNAN
    (Service) S. SIVAPRAKASH
    For Stay
    MP(MD).1/2014 - DO -


    Muthukumar M24 September 2014 23:38
    மேலை கூறியுள்ள அனைத்து வழக்கிற்கும் சேர்த்து தான் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்க்கான Stay vacate Order Copy மட்டுமே நாளை வழங்கப்படும். இதற்கும் பணி நியமனத்திற்கும் எந்தவித பாதிப்பும் இல்லை

    Vijaya Kumar Chennai24 September 2014 23:58
    My dear Balamuthu.

    I appreciate your timing sense.

    Tomorrow all problem will be definitely solved.
    All the best.
    ++++++++++++++++
    September 2014 06:32
    உச்சநீதிமன்றத்தில் வழங்கபட்ட ஆணை.
    சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பு சரி என்றும் கூறியுள்ளது.

    மேலும், இன்று மதுரை உயர் நீதிமன்ற பட்டியலில் இடம் பெற்றுள்ள வழக்குகள் அனைத்திற்கும் சேர்த்து தான் , நேற்று இரண்டு பேர்கொண்ட அமர்வு நீதிபதிகள் தடை ஆணையை நீக்குவதாக கூறினார்கள். இன்று அதற்கான Stay Vacate Order Copy மட்டுமே, நீதிபதியின் முன்பு வந்து முறைப்படி கையெழுத்து பெறப்படும்.
    இதனால் பணி நியமனை ஆணை வழங்கும் பணி தாமதம் ஆகாது.

    ReplyDelete
  2. R. KUZHANDHAI VADIVEL, BUDALUR

    THANKS- TO- CHANDRA SEKAR, SIR.

    ReplyDelete
  3. thank u so much mr,chandra sekar sir...thank u

    ReplyDelete
  4. AIDED SCHOOL VACANT IN CHENNAI

    SCIENCE MAJOR WITH TET PASS ONLY SC CANDIDATES....

    CONTACT : 9444588966(RAJ KUMAR)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி